Monday, December 29, 2025

ISRO ‘S BAHU BALI

 ISRO ‘S BAHU BALI

நீலப்பறவையை சுமந்து சென்ற நீளப்பறவை

இது என்ன கவிதையா ? இல்லை இது உண்மை நிகழ்வு ஆம் நமது வான் வெளி ஆய்வு நிறுவனம் ISRO நிகழ்த்திய செயல் தீரம். ஆம் இது நிகழ்த்தப்பட எடுத்துக்கொள்ளப்பட்ட கால அளவு 2 மாதங்களுக்கும் குறைவே.  திட்டமிடல் முன்பே துவங்கியிருக்கும் ஆனால் பாகங்களை நிர்மாணிக்க , சோதித்து செயல் படுத்தியது என்னவோ 55-58 நாட்களில் தான் என்பது இந்தியாவின் தொழில் நுட்ப முன்னேற்ற முன்னெடுப்பின் அடையாளம் என்பதை மறுப்பதற்கில்லை. இதில் என்ன பெருமை என்றால் இந்தவகை ராக்கெட் விண்வெளியில் சுமந்து சென்று 'மிதக்க விட்ட சாட்டலைட் 6500 கிலோ எடை ' எனில் நிச்சயம் பெரிய முன்னேற்றம் தான். .இவ்வளவு எடையை சுமந்தது ராக்கெட் [எனவே] "பாகுபலி

உடனே சிலர் வாதிடுவர் - அமெரிக்காவும் சீனாவும் 10,000, 15 000கிலோ எடையுள்ள சாட்டலைட் களை விண்ணில் செலுத்தும் திறன் உடையனவே என்று. மறுக்கவில்லை . ஆனால் இந்த துறையில் நாம் அனுபவம் குறைந்தவர்கள் மற்றும் பெரும் முதலீடு செய்யும் பொருளாதார திறன் அமெரிக்காவைப்போல் நம்மிடம் இல்லை. ஆயினும் பொருள் குறைபாடுகள் இருப்பினும் திறன் மேம்பாட்டில் நாம் எவர்க்கும் சளைத்தவர்கள் இல்லை ஏன்பதே முக்கிய அம்சம்

அதாவது நமது அணுகுமுறையில் பிறர் காணும் அம்சம் 'வெற்றி விழுக்காடு ' எனும் SUCCESS PERCENTAGE'. ISRO தலைவர் தனது உரையில் தெரிவித்துள்ளார் இதுபோன்ற செயற்கைகோள் தொழில் நுட்பத்தில் நமது வெற்றி இதுவரை 100% என்று.  எனவே பலநாட்டவரும் இந்தியாவின் உதவியை நாடி தங்களது சாட்டிலைட் களை   விண்ணில் செலுத்த முற்படுகின்றனர். இரண்டாவது காரணம் இந்திய நிறுவனம் வசூலிக்கும் தொகை மிகவும் சொற்பம் , எனவே பிறர்க்கு இதுவே லாபகரமானது.

இந்த முயற்சியில் இந்திய உபயோகித்த நீள ப்பறவை யின் பெயர் LVM 3 M 6 அது சுமந்து சென்ற 6100 கிலோ எடை சாட்டலைட் 'BLUE BIRD ' [நீலப்பறவை  என்ற அமெரிக்க நாட்டின் தனியார் [WAY ONE] வேண்டுகோளுக்கு இணங்க செலுத்தப்பட்டுள்ள வர்த்தக செயற்கைகோள் [commercial satellite].

இது பூமிக்கு 4G  , 5G  தொடர்புகளை நேரடியாக அனுப்பும்.எனவே இது பூமிக்கு அருகில் 520 கிலோமீட்டர் உயரத்தில் மிதக்கவிடப்பட்டது. ராக்கெட் சுமார் 15 நிமிடங்களில் சாட்டலைட்டை உரிய வட்டப்பாதையில் மிதக்க விட்டது. இனி சாட்டலைட் இயக்கும் பொறுப்பு  உரிமையாளர்களின் கையில்.

இவ்வளவு எடை கொண்ட[6100கிலோ] கோள்இவ்வளவு பூமிக்கு அருகில் இதுவே உலகில் முதல் நிகழ்வு   இந்த மொந்தை எடையை சுமந்த LVM 3 M6 செல்லமாக "பாகுபலி” .   என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த ராக்கெட்டை செலுத்த 3 வகை எஞ்சின்கள் செயல்பட்டன முதல் இரண்டும் திட எரிபொருள் மூலம் விண்ணில் பாய மூன்றாவதோ குளிர்விக்கப்பட்ட வாயுவை எரிபொருளாக கொண்ட கிரையோஜெனிக் வகை எஞ்சின். ஆனால் ஒவ்வொரு எஞ்சினும் வரிசைப்படு மட்டுமே இயங்கும் அதாவது முதல் எஞ்சின் விண்ணில் சென்று ஏரி பொருள் தீர்ந்ததும் அடுத்த எஞ்சினை துவக்கிவிட்டு கீழே விழும் .இரண்டாம்  எஞ்சின் வேகமாக இயங்கி மேலே சென்று தனது பணி  நிறைந்ததும்  3ம் எஞ்சினை துவக்கும் பின்னர் விலகி விழுந்துவிடும். முன்னிலும் வேகமாக 3ம் எஞ்சின் விரைந்து பயணித்தபின் உரிய இடத்தில் சாட்டெல்லைட்டில் இருந்து விலகிக்கொள்ளும் [இதே SEPARATION எனப்படுவது ]. இவ்வனைத்தும் 15 நிமிட பயணத்தில்

அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக செய்து பூர்வாங்க சோதனைகள் செய்து தயார் படுத்திக்கொள்ள 55 -57 நாட்கள் ஆகின்றன. இது வரை 434 முறை இஸ்ரோ விண்வெளி சாட்டலைட் பயணங்களை 34 நாடுகளுக்கு செய்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 104 முறை .என்று தகவல். வெகு விரைவில் இந்தியாவின் தனியார் சாட்டலைட் ஒன்று விண்ணில் ஏவப்படும்.. கிட்டத்தட்ட தீபாவளி ராக்கெட் போல் இஸ்ரோ இயங்கிக்கொண்டிருக்கிறது.. மேலும் பல பிரம்மாண்ட திட்டங்களும் ஈடேற உள்ளன. இந்த பாகுபலி ஈட்டிய வருமானம் 600 கோடி ரூபாய் . இப்போது பொதுத்துறை நிறுவனங்களுக்கு புரிகிறது தனியார் பங்களிப்பும் சேர்ந்தால் விரைவான வளர்ச்சி நிகழும் என்பது.-       

இந்த நிகழ்வின் [24-12-2025] விவரங்களை திரு பத்ரீ சேஷாத்திரி   தரும் வீடியோ  இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=fDpMPbhmZ4w BLUE BIRD LAUNCH  [ ISRO]

***************************************************

No comments:

Post a Comment

ISRO ‘S BAHU BALI

  ISRO ‘S BAHU BALI நீலப்பறவையை சுமந்து சென்ற நீளப்பறவை இது என்ன கவிதையா ? இல்லை இது உண்மை நிகழ்வு ஆம் நமது வான் வெளி ஆய்...