Monday, December 8, 2025

A ‘WE TWO’ COMBO

 A ‘WE TWO’ COMBO  

நாமே இனி

இது என்ன விடுகதையா எனில் இல்லை இது விடு கதையம் ல்ல , நான் விடும் கதையும் அல்ல. இது இந்திய மேலாண்மையின் புகழ் கூறும் சரிதம் . ஆம் நாம் இப்போது வி ளங்கிக்கொள்ளப்போவது , வான் வெளி பரப்பில் அதிரடியாக எதிரிகளையும் அவர்தம் யுத்த தளவாடங்களையும் பந்தாடித்தகர்க்கும் நமது வான் படை மற்றும் ஏவுகணை விஞ்ஞானத்தில் நாம் காட்டிவரும் ஆளுமையும் ஆதிக்கமும் பற்றியே. 

 நமது ஏவுகணைதொழில் நுட்பம் , எவருக்கும் சவால் விடும்  நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்த நிலைக்கு நாம் உயர அடிகோலிய உத்திகள் ஆகாஷ், ப்ரம்மோஸ் ஏவுகணைகளும், தேஜாஸ் மற்றும் ரபால் விமானங்களும். இவை ஒவ்வொன்றும் தத்தம் வழியில் பெரும் அசுரர்கள். இவற்றில் ரபால் மட்டுமே வெளிநாட்டுத்தயாரிப்பு , பிற அனைத்தும் நமது உருவாக்கங்களே

ப்ரம்மோஸ் நிகழ்த்திய துல்லிய கோரத்தாண்டவம் இன்னும் பலருக்கு வயிற்றை கலக்கிக்கொண்டிருக்க ப்ரம்மோஸ் என் ஜி [NG ] என்று மற்றுமோர் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய தலைமுறை வகை என்பதாக NEW GENERATION என்ற பெயர் NG என்று திருநாமம். இது எடையில் யானை போன்றது 3 முதல் நான்கு டன் எடை . வெடிக்காமல் கீழே விழுந்தாலே நாசம் , வெடித்தால் சர்வ நாசம் , எனவே இதன் துல்லியம்-- இலக்கில் 10 செ  மி   க்கும் குறைவான வேறுபாட்டில் இலக்கை தகர்த்து நொறுக்கும். இதை அறிந்த போர் ஆய்வாளர்கள் வெகுவாக அஞ்சுவது சரிதான். ப்ரம்மோஸ் ஏவுகணையின் தாக்கு திறன் 500 கிலோமீட்டர் சிறிய வகை தாக்குதல் செய்யும். இந்த என் ஜி  வகை  பிரம்மாண்டம் பயங்கர துவம்சம் செய்யவல்லது. மட்டுமல்ல இதை தரை, கடல் மற்றும் வான் நிலைகளி லிருந்து  ஏவ முடியும். .

ஆனால் எடை அதிகம் என்பதால் இதை செலுத்த அதிக திறன் கொண்ட மேடைகள் வேண்டும். அதையே விமானத்திலிருந்து செலுத்தும்போது ஏவுகணையின் 500 கி மி விஸ்தீரணம் விமானத்தின் வேகத்தின் பலனாக இன்னும் 1000கி மி சேர்ந்து மொத்தம் 1500 கி மி வரை உயரும். இந்த உத்திதான் இப்போது போர் தளவாட விற்பனையின் சூட்சுமம் என்றாகிக்கொண்டிருக்கிறது.

அதாவது ஒரு தேஜஸ் ஒரு ஏவுகணையை  சுமந்து செல்லும் , அதை மேம்படுத்தி 2 ஏவுகணைகள் செலுத்தலாம் மேலும் அந்த ஏவுகணை ப்ரம்மோஸ் NG எனில் விமானத்தின் சந்தை மதி ப்பு வெகுவாக உயரும்.  அதனால் ஒன்றை ஒன்று வெகுவாக உயர்வாக் கும் என்ற அடிப்படையில் ப்ரம்மோஸ் /தேஜஸ் ஜோடி புகழ் பெற்றுள்ளது. இவ்வனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பது ப்ரம்மோஸ் . ஆகாஷ் இவற்றின் அதீத ஆற்றல், துல்லியம்  மற்றும் குறைந்த . முதலீட்டில் வாங்கும் வசதியும் தான். அடுத்த 30-40 ஆண்டுகளுக்கு இந்த ஏவுகணைகளை மிஞ்ச வாய்ப்பு இல்லை என்கின்றனர். எனவே இந்தியாவின் போர் முறைகளையும் கருவிகளையும் வியந்து பார்ப்பதில் வியப்பென்ன?

இவற்றை உணர  இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=WejPi0JeBo4 BRAHMOS  NG TEJAS –A DEADLY COMBO

*************************************************************************************

No comments:

Post a Comment

A ‘WE TWO’ COMBO

  A ‘WE TWO’ COMBO   நாமே இனி இது என்ன விடுகதையா எனில் இல்லை இது விடு கதையம் அ ல்ல , நான் விடும் கதையும் அல்ல . இது இந்த...