GOOD- BUT A LITTLE OFF MEMORY [-19]
நல்லவை ஆனால் அறிந்தும் சற்றே மறந்தவை[-19]
கல்யாண பரிசு [1959]
ஆசையினாலே மனம்,
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் -ஏ எம் ராஜா , பி சுசீலா , ஏ எம் ராஜா
கம்யூனிச பாடல் புனைவார் என்று அறியப்பட்ட பட்டுக்கோட்டையார்
புனைந்த காதல் டூயட் அதில் ஆங்காங்கே ஆங்கில இடைச்சொற்கள் யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக.
வெகு அற்புதமான காட்சி. இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=FLb7ho0tyIw AASAIYINALE MANAM KALYANA PARISU PATTUKKITTAI AM RAJA PS AMR
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
-
இளமை கொலுவிருக்கும் கண்ணதாசன் ,விஸ்வநாதன் ராம மூர்த்தி -பி சுசீலா
இப்படம் எப்போது வரும் என்று
பலரையும் ஏங்கி தவிக்கவைத்த பாடல் வரிசையில் "இளமை கொலுவிருக்கும்' பாடல் முதலிடம்
பிடித்தால் வியப்பேதுமில்லை . பெண்ணின் பெருமைதனை நயம்பட உரைத்த பாடல், மெல்லிசையின்
மாண்பினை வெகுவாக பறைசாற்றிய இசை நுணுக்கங்கள், துல்லிய உணர்வுகளை சுவைபட ஒலித்த கருவிகள்
அற்புத குரல்/ ஆழ்ந்த பாவங்கள் என பாடலின் பரிமாண விஸ்தீரணங்கள் அதிகம்.
சாவித்திரியின் மின்னலென
பளீரிட்டு மறையும் முக பாவங்கள் கண்டு, கேட்டு மகிழ இணைப்பு
https://www.youtube.com/watch?v=0vdClCliFNw ILAMAI KOLU IRUKKUM HELLO MER
ZAMINDAR KD VR PS
காத்திருந்த கண்கள் [1964]
வளர்ந்த கலை -கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி , பிபி ஸ்ரீனிவாஸ் , சுசீலா
தமிழ் சினிமா பாடல்கள் வெகுவாக முன்னேற்றம் கண்ட நிலையை அப்போதே எட்டியிருந்தன. வாதப்பிரதிவாதங்கள் அழகாக தொகுக்கப்பட்ட கவிதை , இசைக்கருவிகளின்
பங்களிப்பு மற்றும் அவற்றின் கம்பீர பயணம் எம் எஸ் வி அவர்களின் முத்திரை. பாடலுக்கு இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=-gvpxaAGQmo VALARNDHA KALAI KAATH KANGAL KD
VR PBS PS
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment