THE DISLOYAL
நன்றி மறந்தோர்
நமது நினைவில் 1971 டிசம்பர் மாதம் கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி மேற்கு பாகிஸ்தானியரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு 'பங்களாதேஷ் ' என்ற புதிய நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது. புதிய நாடு புதிய தலைவலி ஆனதும் அதே நிகழ்வினால் தான். அப்போது இந்திய ராணுவ அதிகாரி Lieut.Gen ஜகஜித் சிங் அரோரா விடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி Lieut.Gen A A K நியாஜி 93,000 ராணுவ வீரர்களுடன் டாக்கா வில் சரணடைந்தார் . உலகின் மிகப்பெரிய சரணாகதி இதுவே என்று பேசப்பட்டது. இவ்வளவுக்கும் காரணம் மேற்கு பாக் அதிகாரிகள், கிழக்கு பாக் வளங்களை சுரண்டி பதவிகளை அனுபவித்ததும், ராணுவம் மற்றும் அரசின் . . உயர் பதவிகள் எதிலும் கிழக்கு பாக் பிரஜைகளுக்கு இடமோ அங்கீகாரமோ இல்லாமல் வெறும் அடிமைகள் போல் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதுவுமே .
அறிவு என்ற அளவுகோலில் கி.பாக் மக்கள் மேம்பட்டவர் தான். எனவே கிழக்கில் புரட்சி வெடித்து, இந்திய உதவியுடன் கி. பாக் பங்களாதேஷ் ஆனது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். மத அடிப்படையில் பங்களாதேசியர்கள் இந்தியாவை ஏற்பதில்லை. மீண்டும் பாக்கின் கொத்தடிமை ஆகவும் தயார் என்ற நிலையில் இயங்கு கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக பல முயற்சிகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.அப்படி ஓர் சமீபத்திய நிகழ்வு தான் 12-12 2025 மாலை நடக்கவிருந்த விவாத அரங்கு = அதில் நீ யார் நான் யார் என்ற தலைப்பில் இந்தியவிரோத வசைபாடல் நடக்க இருந்தது. தீவிரவாத நடவடிக்கையின் மூளையாக செயல் பட்ட பலர் அவர்கள் எந்த நாட்டில் இருப்பினும் அவரவர் இருக்கும் இடங்களிலேயே அழித்து ஒழிக்கப்பட்டனர். இந்த நிகழ்வுகளில் யார் கொன்றார்கள் என்பதே வெளியில் வருவதில்லை. மேலும் இவற்றின் திட்டமிடல் அவ்வளவு துல்லியமும் நுணுக்கமும் நிறைந்தது. இந்த அணுகுமுறையினால் தீவிர வாத அமைப்பினர் எப்போது வேண்டுமானாலும் அழிக்கப்படலாம் யார் செய்தனர் என்பது மிகவும் ரகசியமாகவே இருப்பது வெகு சிறப்பு. உளவு நிறுவனங்கள் மேம்பட்ட உத்திகளை செயல்படுத்தி முள்ளை முள்ளால் எடுப்பதையும் தாண்டி உள்ளூர் முள்ளாலேயே எடுக்கும் வித்தையை அரங்கேற்றி வருவதால் எவரும் எங்கும் உரையாட வோ முறையிடவோ முகாந்திரம் இல்லை.. இதில் சமீபத்தில் களை யப்பட்ட நபர் பங்களாதேஷி-திரு உஸ்மான் ஹாதி என்பவர் [இளைஞன்] இவர் ஏற்பாட்டில் அமைந்த விவாத அரங்கின் அழைப்பிதழில் இந்தியாவின் 7வடகிழக்கு எல்லை மாநிலங்களை பங்களாதேஷின் பகுதிகளாக காட்டும் வரைபடம் [map] வெளியிட்டு தன்னை பெரும் புரட்சியாளனாக பிரகடனப்படுத்தியிருந்தார்.
இது சர்வதேச நடைமுறைகளுக்கு எதிரானது மற்றும் மன்னிக்க இயலாத ஒழுங்கீனம். பெரும் நாடுகளே செய்யத்துணியாத அசிங்கம்.
இவர் அந்த கருத்தரங்க நிகழ்வு மாலையில் நடக்க வேண்டிய அன்று மதியம் சுமார் 2 மணி அளவில் நடுத்தெருவில் அடையாளம் தெரியாத இருவரால் தலையில் சுடப்பட்டு , கோமா நிலையில் ஆழ்ந்து சிங்கப்பூரில் தீவிர சிகிச்சையும் பலன் தராமல் Dec 18ல் மாய்ந்தார். இது மேலோட்டமாக இருந்தாலும், இதன் அடித்தளம் மிக வீரியமானது. அதன் தன்மைகளை மற்றும் நீண்ட வரலாற்றை திரு ஆசிர் விளக்குகிறார். கேட்டு அறிய
இதோ இணைப்பு
***************************************************
No comments:
Post a Comment