LET US PERCEIVE THE SONG -52
பாடலை உணர்வோம் -52
‘அன்று ஊமைப்பெண்ணல்லோ’ [பார்த்தால் பசி தீரும் -1962] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஏ எல் ராகவன் ,பி சுசீலா
இதனுடன் ஒப்பீடு செய்ய
வேறோர் பாடல் உண்டா -தெரிந்தால் சொல்லுங்கள். பாடலின் களமும் கதாபாத்திரங்களும் அரிதானவை. இப்பாடல் ஒரு தனித்துவம் பெற்றது . ஆம் ஒரு பழங்குடியின பெண் நகர
வாழ்வில் வளர்ந்த ஆண் இருவரையும் சுற்றிப்படரும் அமைப்பில் விளைந்த கவிதை. ஆக்கம் கண்ணதாசன் , இசை வி ரா குரல்கள் ஏ எல் ராகவன்
, சுசீலா. கணீரென்று ஒலித்த பதிவு. தமிழ் எழுத்துகளை வரிசையாக சொல்லிக்கொடுத்து, அடிப்படை
இலக்கணக்குறிப்புகளையும் அவள் மனதி ஏற்றி , பின்னர் வல்லின மெல்லின ஒலிகளின் வேறுபாடுகள்
ஒலிக்க வேறேதும் பாடல் உள்ளதா ? நான் அறிந்தவரை
இல்லை. கட்சியில் தோன்றிய காதலர்கள் நிஜ வாழ்விலும் அப்படியே.. இவற்றை கடந்து பாடலில்
ஒரு வேற்று மொழி கலாச்சார அமைப்பாக ஒலித்த ஹம்மிங்கில் இசையமைப்பாளரின் தீவிர திட்டமிடல்
பளிச்சிடுகிறது.. இசைக்கருவிகளின் தேர்வு
, அவற்றின் நாத வீச்சு இரண்டிலும் வேறொரு பரிமாணம் காட்டப்பட்டுள்ளதை நன்கு
உணரலாம். திரு எம் எஸ் வி எங்கே கோரஸ் வைக்க இடம் என்பதை தேடாமலே இயல்பாக கோரஸை இணைக்கும் வித்தகர்; ஆனால், இந்தப்பாடலில் தனது
துறுதுறுக்கும் கோரஸ் தீவிரத்தை எவ்வளவு கட்டிப்போட்டு அடக்கி வைத்திருப்பார் என யோசிக்கிறேன்.
இது போன்ற தருணங்களில் இயல்பான உணர்ச்சிகளை அடக்கி செயல் படுவது பெரும் வேள்வி எனில்
தவறில்லை என சொல்லிக்கொண்டே போகலாம். மட்டுமல்ல அவரது 'ஹோய் ' வெகு நேர்தியானது. ஆம்
'ஹோய் ' இப்பாடலில் உண்டு ஆயினும் அதனை குறிலாக்கி வேறு வித தாக்கம் விளைவித்துள்ள
நேர்த்தியை புறக்கணிக்க இயலுமா? திரு ராகவன் பாடும் ஹம்மிங்கின் இறுதியில் 'ஒய் ' என்று
முடிப்பதும் பின்னர் இரண்டாம் சரணத்தில் 'காட்டில் வந்த வேடன் மானைக்கண்டல்லோ , மானை
கண்ட வேளை மயக்கம் கொண்டல் லோ " முடிக்கும் போதும் இரு பாடகர்களும் 'ஒய் ' என்று
குறி லில் பாடியது ஒரு வேறுவகை உத்தி. பாடலின் துவக்கத்தில் வரும் நீதிநூல், குறள் பாடியிருப்பவர்-திரு எம் எஸ் வி.
இப்பாடலில் கருவிகளின் தொகுப்பும் இசைப்பும் வேறு பாடல்களில் இல்லாத தனித்துவம். இவை என்றோ 62 ஆண்டுகளுக்கு முன்னரே
வடிவமைக்கப்பட்ட புதுமைகள். .
இணைப்பு
இதோ https://www.youtube.com/watch?v=fE5qtx2PbU4 andru oomai ppasi kd vr alr ps
சரி பிற
கருத்துகள்
சொல்வதென்ன?
இசை அமைப்பாளர்
திரு
அமுதபாரதி
இப்பாடலை
குறித்து
பேசுவதை
கேளுங்கள்
. இணைப்பு
இதோ https://www.youtube.com/watch?v=82OWp2fv90M andru oomai amudhabarathi
QFR 657 ம்
பதிவில்
சுபஸ்ரீ
அவர்களின்
கருத்தும்
விளக்கமும்
பிற
அறிய
தகவல்களும்
பெற
இணைப்பு
கீழே QFR 657
QUARANTINE FROM REALITY | ANDRU OOMAI PENNALLO | PAARTHAAL
PASI THEERUM | Episode 657
யூ டியூபில் வந்த ஒரு கருத்து
அன.. ஆவன்னா.. என்று தமிழ் உயிர் எழுத்துக்களை காதல் மன்னன் ஜெமினி கணேசனிடம் கற்றுக்கொள்ளும் சாவித்திரி கணேசன்.. ஆத்திசூடியையும்.. திருக்குறளையும் விசுவநாதன் சொல்லித்தர.. வித்தியாசமான அலங்காரத்தில் இருக்கும் மலைஜாதி பெண்ணிற்கு காதல் பாட கற்றுத்தரும் ஏ.எல்.ராகவன்... ஊமைப்பெண் சாவித்திரிக்கு பின்னணி பாடும் சுசீலா..... என்றும் நினைவை விட்டு நீங்காத பாடல் இது..
_____________________________________________________________________________
No comments:
Post a Comment