Wednesday, December 24, 2025

A recall substantiated

A recall substantiated

ஊர்ஜிதமான உண்மை

சில நேரங்களில் திரைப்பாடல்கள் நிஜ வாழ்வின் அங்கமாகவே அவதரித்து , பின்னர் திரைக்குள் நுழைந்தது உண்டு. இப்பாடல் வேறு நேரமும் வாய்ப்பும் இல்லாதநிலையில் 'கழுத்தில் ஏறி அமர்ந்த நிலையில் ;தோன்றியதெனில் பொய்யே .அல்ல. 

"அவர்கள்" படத்தில் இடம்பெற்ற 'அங்கும் இங்கும் பாதை உண்டு' என்ற உயிர்நாடிப்பாடல் திடீரென்று மேடையில் பொதுவெளியில் உருவான பாடல். மிக அவசரமாக பாடல் வேண்டும் என கண்ணதாசனை 'இழுத்து வந்து'மேடையில் கச்சேரி செய்துகொண்டிருந்த எம் எஸ்வி, எஸ் பி பி முன்ன நிறுத்தி , இப்போது ஒரு போட்டி , நான் பாடலுக்கான சூழலைச்சொல்வேன், கவிஞர் பாடல் தருவார் , எம் எஸ் வி இங்கேயே இசையும் ராகமும் அமைப்பார் , எஸ் பி பி பாடுவார். அது நாளை ஸ்டூடியோவில் பதிவாகி 'அவர்கள்' படத்தில் இடம் பெரும் என்று கே பாலச்சந்தர் அறிவிக்க அடுத்த 20 நிமிடங்களில் பாடல் தயார். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் ;ஆனால் ஒரு சிலர் நல்லா நாடகம் ஆடுறானுக படத்துக்கு விளம்பரம் தேடுறார் கே பி என்றெல்லாம் விமரிசனம் எழுந்தது மேலும் வேறொரு நிகழ்ச்சியில் ஒரு மாணவன் எம் எஸ் விஇடம் "ஏன் சார் ஏமாத்துறீங்க , முன்னாலே எல்லாம் செஞ்சு வெச்சுக்கிட்டு என்னவோ இப்பதான் பாட்டு உருவாக்குறதா வேஷம் போடறீங்க என்று சொல்லி அதுவே ஒரு சாலஞ்ச் ஆகி உடனே வேறொரு பாடலை பையன் தர அதற்கும் இசை அமைத்து எம் எஸ் வி அவனது மற்றும் நண்பர்களின் வாயை கான்க்ரீட் போட்டு அடைத்தார் என்ற நிகழ்வும் அந்நாளில் அரங்கேறியது.

அந்த 'அவர்கள்' பாடல் மிகவும் நுணுக்கமும் நேர்த்தியும் அழுத்தமும் கொண்டது..

அது தொடர்பான வீடியோக்கள் கீழே உள்ளன. நன்கு கவனமாக பின் பற்றி தமிழ்திரையின் உண்மையான ஜாம்பவான்களை பற்றிய தகவல்கள் ஊர்ஜிதம் ஆவதை கேட்டு மகிழுங்கள்.

 இணைப்புகள் கீழே       

https://www.youtube.com/watch?v=d5jh-5Tka7o ANGUM INGUM AVARGAL 197 KD MSV SPB ON THE SPOT

https://www.youtube.com/watch?v=djezBs6S6_4 Angum ingum paadhai undu'Annadurai ‘s reminiscences ANNADURAI [KD‘s Son]

https://www.youtube.com/watch?v=xQ3pWdjfkko ANANTHU ON ANGUM INGUM

----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

A recall substantiated

A recall substantiated ஊர்ஜிதமான உண்மை சில நேரங்களில் திரைப்பாடல்கள் நிஜ வாழ்வின் அங்கமாகவே அவதரித்து , பின்னர் திரைக்குள் நு...