Thursday, January 1, 2026

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-21]

 GOOD- BUT A LITTLE OFF MEMORY [-21] RICHLY MELODIOUS

நல்லவை ,அறிந்தும் சற்றே மறந்தவை [21]                                                                                   இனிமை ததும்பும் பாடல்கள்

இன்றைய பதிவில் காண இருக்கும் பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையான பாடல்கள்.

இனிமை என்பது ராகம் , வேகம், நெளிவு, குழைவு, இசையின் அனுசரணை, கருவிகளின் ஒருங்கிணைப்பு அனைத்தையும் தாண்டி, காட்சியுடன் நேர்த்தியாக பொருந்தி எப்போது கேட்டாலும் மகிழ்ச்சியை தரவல்ல ஆளுமை என்றே நான் புரிந்துகொண்டுள்ளேன். வெவ்வேறு விதமாக இனிமையை விவரிக்கலாம். எப்படிப்பார்த்தாலும் இனிமை யின் தாக்கம் பலரையும் பீடிப்பது  என்ற இலக்கணத்தை கடைப்பிடிப்பது என்பது எளிய ஆனால் கூரிய அளவீடாகும். அப்படி அமைந்த சில பாடல்களைக்காண்போம். 

தங்க மோஹன தாமரையே [புதையல்-1957] ஆத்மநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி , சுசீலா குழுவினர்.

குதூகலம் மிக்க பெண்களின் ஆடிப்பாடி மகிழ்ந்த தருணங்களை வெளிப்படுத்திய பாடல். தேர்ந்த பண்பு குன்றாத சொற்கள், துவக்கத்திலேயே நம்மைக்கட்டிப்போடும் ராகவேகம், பாவம் இரண்டும் பல்லவியின் அடையாளங்கள்.பாடல் கிட்டத்தட்ட கோரஸ் என்னும் வீதியிலே பயணிக்க எண்ணற்ற பெண்குரல்கள்; மிக எளிதில் கோரஸ் அமைக்கும் எம் எஸ் விக்கு இதுபோன்ற வாய்ப்புகள் பெரும் ஊக்கம் தரும். மனிதர் ஒலிப்பதிவு வசதிகள் இல்லாத அந்நாளிலேயே , வித்தகம் காட்டுகிறார். நீர்நிலை தாமரை எம்பாதே களம் , எனவே அவ்வப்போது கண கண என்று சய்லோபோன் [XYLOPHONE ] சிருங்காரமாக சிணுங்கக்கேட்கலாம்.

பாடலின் சரணங்கள் 3க்குமேல் இருக்கின்றன. பாடும் முறையில் மூன்று சரணங்களும் வெவ்வேறு அமைப்பில் -- ஆனால் ஆழ்ந்து கவனிக்காவிட்டால் எல்லாசரணமும் ஒரே அமைப்பில் இருப்பதாகத்தோன்றும்..

பாடல்முழு வதும் தபலாவே  தாளம் இசைக்கிறது வேறு ஒலிகள் இல்லை, வயலின் ஸய்லோபோன் ஒருங்கிணைப்பு 68 ஆண்டுகளுக்கு முன்னரே.

பாடலை ரசிக்க இணைப்பு இதோ  

https://www.youtube.com/watch?v=N0rHcktJm8A thanga mohana pudhaiyal 1967 aathmanathan vr ps

மற்றுமோர் குதூகலப்பாடல் . தலைவியை நடுவில் நிறுத்தி  விட்டு சுற்றிலும் தோழியர் சூழ்ந்துகொண்டு பாடும் வகை ப்பாடல். பலருக்கு இது முதல் அனுபவம். படம் வீரத் திருமகன்   முதன் முதலில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வி எம் என்ற பெயர் இல்லாமல் வந்த படம் . சச்சு கதாநாயகியாக முதல் படம். ஏவிஎம் புதல்வர்கள் படத்தயாரிப்பில் இறங்கிய முதல் படம். விஸ்வநாதன் -ராமமூர்த்தி முதன் முதலாக ஏவிஎம் நிறுவனத்தில் இசை அமைத்த படமும் இதுவே.ஆனால் எவரையும் இது முதல் அனுபவம் என்று இனங்காண இயலாத செயல் திறன் பரிமளித்தபடம்.

நீலப்பட்டாடை கட்டி [கண்ணதாசன் -1963] வி-ரா , சுசீலா எல் ஆர் ஈஸ்வரி

இதுபோன்ற மெலடிகள் தவழ்ந்த தமிழ்திரையில் இப்போது பலபாடல்கள் மலடிகளே. பாடல் என்ற நளினம் மறைந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனாலும் இந்த 62 வயதுப்பாடல் இளமையும் துடிப்பும், ரம்மியமும் குன்றாமல் ஜொலிக்க அடிப்படை காரணம் -மெலடி என்ற இனிமைதான். பாடலின் கவிதை, ராக அமைப்பு, குரலின் ஏற்ற இறக்க சொகுசு கள்,     மற்றும் நேர்த்தியான கோரஸ், கிண்டல் என அனைத்துமே உயரம் தொட்ட  உன்னதங்கள்.

என்று கேட்டாலும் நமக்கு இளமை திரும்பும் வகை குதூகலம்

தாமரை நடுவில் நிற்க இலைகள் சுற்றவேண்டும் என்பதே இயக்குனர் விரும்பியது.  இப்பாடல். வி எம் நிறுவனத்தின் தச்சர் ஆறுமுக ஆசாரியின் புகழ் பரப்பும் வடிவமை ப்பில் தாமரைமற்றும் இலைகள்.

என்ஜினீயர்கள் முடியாது என்று மிரண்டு ஓட, செய்யலாங்களே என்றது செய்து காட்டிய ஆசாரி அவர்.  எவ்வளவு உழைப்புகளை இன்று இழந்து நிற்கிறோம்..  பாடலையும் காட்சியையும் ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=3aDMCljlYug NEELAPATTAADAI VEERATHIRUMAGAN KD VR PS LRE

மெலடியில் தான் எத்தனை வகை படைத்துள்ளார் எம் எஸ் வி ? ஒன்றை ஒன்று விழுங்கி ஏப்பம் விடும் உன்னத வலிமை கொண்ட மெலடி கூட்டம் தமிழ்திரையில்  சுமார் 30 ஆண்டுகள் கோலோச்சி வளைய வந்த காலங்கள் இனி வருமா என்ன ? .

இது இன்னுமோர் ஈடில்லா நளினம் காதலெனும் வடிவம் கண்டேன் [பாக்கிய லக்ஷ் மி 1963] கண்ணதாசன் , வி-ரா . சுசீலா , பாடல், மனகுதூகலம், சொல்லில் நளினம் , துள்ளும் இசை, கருவிகளின் நேர்த்தியான ஒருங்கிணைப்பு. ஆங்காங்கே என்ற ஆலாபனை மனதை பீடிக்க அன்றைய ஸ்டார் வி சரோஜாவின் நேர்த்தியான முகபாவம் அனைத்தையும் மீண்டும் ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=5A9sX_rStpA kadhalenum vadivam bhagyalakshmi 1962kd vr ps

மற்றுமோர் மெலடி

பாடாத பாட்டெல்லாம் [வீரத்திருமகன் 1963] கண்ணதாசன் , வி-ரா, குரல்கள் பிபி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி

மற்றுமோர் இளமை [ஈ வி சரோஜா] துள்ளும் மெலடி இப்பாடல். பிபி ஸ்ரீனிவாஸ் தமிழில் வேரூன்றிக்கொண்டிருந்த காலம் நேர்த்தியான குரல். பெண் குரலுக்கு எஸ் ஜானகி [ஆண்டு 1963 -ஜானகியை கண்டுபிடித்தவர்கள் கவனிக்க] வெகு நேர்த்தியான ஹம்மிங். எம் எஸ் வி யாரை எப்போது எப்படி பயன்படுத்துவார் என்பதற்கு இதுபோன்ற பாடல்களே சான்று. கிட்டார் போங்கோ, தபலா, பெண் ஹம்மிங் என பலவித ஆதிக்கங்கள் இப்பாடலின் சிறப்பு பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=d0oE0MvPWN0 paadaatha paattellaam veerathirumagan kd vr pbs sj

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-21]

  GOOD- BUT A LITTLE OFF MEMORY [-21] RICHLY MELODIOUS நல்லவை ,அறிந்தும் சற்றே மறந்தவை [21]                                            ...