Sunday, January 4, 2026

A CHILD PRODIGY – THAVIL PLAYER Ranjith vinaayak

A CHILD PRODIGY – THAVIL PLAYER Ranjith vinaayak   05 Jan 26

குழந்தை கலைஞன் ரஞ்சித்

இன்றையதலைமுறையில் தவில் வித்வான் களுக்கு சவால் விடும் இளம் கலைஞன் திரு ரஞ்சித் விநாயக் என்ற சிறுவன். 5 வயதிலேயே பெரிய வித்வான் களுடன் சமமாக தவில் வாசித்த வித்தகன் இச்சிறுவன்     சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னமே மேடைகளில் கலக்கியவன் ரஞ்சித்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தவில் நட்சத்திரம்.. சிறுவன் ஆதலால் தமிழ் பேச வரவில்லை ஆனால் தமிழ் கேள்விகளை புரிந்து கொண்டு ஓரிரண்டு சொற்களில் பதில் சொல்கிறான்.

இவனது தந்தையாரும் தவில் கலைஞரே அவர் மிக இயல்பாக தமிழ் பேசுகிறார் பேச்சில் சிறிது கன்னட சாயல் இருக்கிறது இருக்கட்டும். வேற்று மாநிலத்தவர்  தமிழில் பேச முயன்று பெருமளவிற்கு பேசும் பொது நம்மவர்கள் ஏன் பிற மொழி பேச முனைவதில்லை. நான் சொல்லுவது அந்தந்த மாநிலங்களில் வசிக்கிறீர்கள் ஆனால் அந்தந்த சொல்லாடலை புரிந்து கொண்டு மொழி கற்கலாமே. இப்படி இருப்பதால் பிறர் நம்மை கீழ்த்தரமாக விமரிசிக்கிறார்கள்

கல் தோன்றி மண் தோன்றி எல்லாம் சரித்திர பெருமைகளே, நமது இன்றைய வாழ்வில் பிற மொழிகள் பயிலாமல் ஓட்டுவது ஏன் ? இது தென்மாநிலங்களில் தான் தமிழர் நிலை. இதே தமிழர்கள் வடமாநிலங்களில் ஹிந்தி, ஒரியா போன்ற மொழிகளில் சரளமாக பேசுகிறார்களே அது எப்படி? இந்தக்கேள்விகள் என்னை எப்போதும் உறுத்துபவை இன்று பொது வெளியில் கொட்டிவிட்டேன். விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

சரி இப்போது ரஞ்சித் பற்றி பார்ப்போம்.     

பிற கருவிகள் போன்றதல்ல தவில்.

தவில் வாசிப்பில் இடைவெளி என்பது மிகக்குறைவு. தொடர்ந்து வாசித்துக்கொண்டே ஜதி , நடை, வேகம் இவற்றையும் தவறாமல் பின்பற்றி வாசிக்கவேண்டும்.. மட்டுமல்ல போட்டி வாசிப்பில் சில மாற்றங்களை முன்னெடுத்து எதிர் கலைஞனை  சவாலுக்கு அழைக்க வேண்டும். இவற்றில் சுணக்கம் தயக்கம் இவை சிறிதும் இன்றி எப்போதும் துடிப்பாக வாசிக்க வேண்டும்

இப்படி எந்த அடிப்படையில் பார்த்தாலும் ரஞ்சித் பெரிதும் பேசப்படுவது இயல்பானதே. இவ்வனைத்தையும் ஆழ்ந்து புரிந்துகொள்ள பின் வரும் இணைப்புஉதவும். அவற்றை ஊன்றி கவனித்து விசேஷ திறமைகளை புரிந்து கொள்ளலாம்

https://www.youtube.com/watch?v=7yDrOm2VJy0 master PM RANJITH  THAVIL

 

 

No comments:

Post a Comment

RENGA VENDAAM-10

  RENGA VENDAAM-10  ரெங்காவேண்டாம் -10                                     அம்மணீ---தாயீ காலை 7 மணிக்கு வாசலில் கிளிஜோதிடன்-   ரெங்க...