Wednesday, January 7, 2026

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-22]

 GOOD- BUT A LITTLE OFF MEMORY [-22] RICHLY MELODIOUS -2  -9-012-26

பொன் என்பேன் [போலீஸ்காரன் மகள் 1962] கண்ணதாசன், வி-ரா ,பிபிஎஸ் , எஸ் ஜானகி

இது ஒரு வித்யாசமான மெலடி. குரல்கள் மென்மையாக ஒலிக்க இடை இசையில் வரும் வயலின்களின் வேகம், தொடரும் பிற கருவிகள்  அனைத்தும் விரைந்து ஓட இறுதியில் ஒலிக்கும் குழல் ஒரு முறை ஓங்கி பின்னர் கீழே தவழ மீண்டும் மென் குரலில் காதலர்கள் பாட என பயணித்த அபூர்வ அமைப்பு பாடலின் சிறப்பு. [மீண்டும் சொல்கிறேன் ஜானகியை கண்டு பிடித்தோரே இப்பாடல் மட்டும் அல்ல இப்படத்தின் அனைத்து பாடல்களிலும் பெண்குரல் ஜானகி மட்டுமே].. கள்ளமற்ற பெண்ணை எப்படியெல்லாம் ஆண்  ஏமாற்றுகிறான்.  கவிஞர் தந்த சொற்களை கவனியுங்கள். இந்த பாடலுக்கு ஸ்ரீதர் சொன்னாராம் "விசு ஆர்ப்பாட்டமில்லாம தம்புரா மீட்டரா மாதிரி ட்யூன் வேணும்"  விசுவின் ஆளுமை மிளிரும் இசை அமைப்பு.   மெலடி என்னும் வசீகரம் பல வகை அதில் இது தனி வகை                                 

 கேட்டு உவகை கொள்ள இணைப்பு இதோ  

 https://www.youtube.com/watch?v=k2WRMygBvGE ponnenben [police kaaran magal =1962] kd vr      pbs sj

அத்தை மகனே போய் வரவா [பாதகாணிக்கை -1962 ] கயிராசர், வி-ரா, பி சுசீலா

 எத்தனையோ விதமாக பாடலை மிளிரச்செய்வது இசை அமைப்பின் மாட்சிமை. இப்பாடலில் இசையை கட்டுப்படுத்தி குரலுக்கே முக்கியத்துவம் தந்து அமைக்கப்பட்ட பாடல். கருவிகளுக்குக் குறைவில்லை அதிலு, ஆங்காங்கே சரோட் எழுப்பும் ஒலி பிரிவின் ஏக்கமாய் வெளிப்பட பாடல் நம்மை துன்புறுத்த -எப்பேர்ப்பட்ட வடிவமைப்பு.

சாவித்ரி போன்றதோர் ஆன்மாவை இனி திரையில் பார்ப்போமா? இறைவனுக்கே வெளிச்சம் இப்பாடல் சோகம் குழைந்த மெலடி . மெல்லிசை மன்னர் தொடாத இசை வடிவம் உண்டோ? நான் பேச வேண்டியதில்லை . பாடல் பேசுகிறது. கேட்டு உணர இணைப்பு இதோ   

athai magane https://www.youtube.com/watch?v=Vncnuj7FD6s paadakanikkai kd vr ps sarod play

இந்தப்பாடலின் பிற சுவைகளை சுபஸ்ரீ கூறுகிறார் கேட்டு அறிய இணைப்பு இதோ

QUARANTINE FROM REALITY | ATHAI MAGANE POI VARAVAA | PAADHA KAANIKKAI | Episode 557

யாருக்கு மாப்பிள்ளை யாரோ [பார்த்தால் பசி தீரும் 1963] கண்ணதாசன் , வி-ரா ,   பி சுசீலா

முற்றிலும் வேறோர் அமைப்பில் பாடல் கேட்டால் தான் புரியும் [ஆனால் ஒன்று ஒழுங்காக  கேட்டால் தான் புரியும் . பாடல் கேட்க ஈடுபாடு மிகவும் தேவை . சரி இப்பாடல் மெலடி சொட்ட சொட்ட காற்றில் உலவும் வகை என்பது எனது அடிப்படை புரிதல். ஒவ்வொரு சொல்லிலும் பாடும் முறையிலும் இது ஒரு பன்முகக்கவிதை ஆம் பாடல் முழுவதிலும் கேள்விகளே , பதிலே இல்லை ஆனாலும் குறையொன்றும் இல்லை என்ற மனத்திருப்தி. அது தான் கவிதையின் சிறப்பு. அது மட்டுமா   பாடலில் கவிதைச்சொற்களுக்கு வலு சேர்க்க,  அஹா அஹா ஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா ஹா ஹா ஹஹ்ஹ.மற்றும் லா லல லல ல்   லா  போன்ற மன்னரின் கற்பனைகள் இடை இசை யாக பாடலை சுமப்பது தனி முத்திரை , இந்த பாடலில் இடை இசை யில் கருவிகளை விட உணர்ச்சி பொங்கும் ஹம்மிங் வெகு அதிகம் மற்றும் வெவ்வேறு வடிவங்களில் ஒரே பாடலில் -மன்னர் ஜமாய்த்திருக்கிறார்

ஒவ்வொரு சரணத்திற்கும் தூண்டுதல் கேள்வியாகஎந்த உள்ளம் தொட்டு எங்கே மயங்கி நின்றாரோ”? என்ற ஒரே கேள்வி- பாடல் முழுவதிலும் உலவுவது இன்னுமோர் முக்கிய வேறுபாடு. ஆண்களில் தான் எத்தனை வகை? பட்டியலைப்பாருங்கள்

1 கட்டவிழ்ந்து கண் மயங்கி நிற்பவன்

2 கண்கலங்கி காதல் புரிபவன், 3 தொட்டுத்தொட்டு பேசி மகிழ்பவன் ,

4தூர நின்று ஜாடை புரிபவன்  5 ஊரறிய மாலை இடுபவன் ,

6ஓடிவிட எண்ணமிடுபவன் 7சீர்வரிசை தேடிவருபவன் [சொத்துக்கு அலையும் மனம் ]

8சின்ன இடை நாடி வருபவன் [இளமை எண்ணம் நிறைந்த மனம்]

 என்று பெண் பேசுவதாக பாடலை நகர்த்தியுள்ளார்.                                                                              ஏன்?  மாப்பிள்ளை யாரோ என்று தேடினால் இத்தனை வகை இருக்கிறதே -தேர்ந்த கற்பனை அதை தூக்கி நிறுத்திய உற்சாக உள்ள ஓட்டம் இந்த ட்யூன்  எப்போது கேட்டாலும் சிறிதும் சலிப்பு தட்டாத இனிமை இப்பாடல். கேட்டு உணர இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=0rhppawuw9U yaaruku maapilai yaaro parththal pasi kd vr ps

 

 

 

 

No comments:

Post a Comment

Oh Language –14

  Oh Language –14                          Needless to recall the purpose of these Sunday blog postings-I beliecve. Proceed   Spring, Sw...