KING and KING
அரசரும் மன்னரும்
இது ஒரு பாடம்
என்ன பாடம்?
ஐயோ, மீண்டும் கல்வி பற்றியா? என்று ஓட யத்தனிக்காதீர்கள். ஓடவோ ஒளியவோ தேவை இல்லை. மாறாக நம்மில் பலரும் அறிந்து கொள்ளாத அல்லது அறிந்து கொள்ள முற்படாத ஒரு அணுகுமுறை திரைப்படப்பாடல்களை
எப்படி பார்க்கவோ, கேட்கவோ விமர்சிக்கவோ வேண்டும் என்ற நுணுக்கங்களை பின்பற்றாமல் விட்டு விட்டு,
ஏனோ தானோ என்று பாடல்களை கேட்டு விட்டு "அதான் எனக்கு தெரியுமே என்று டி பி முத்துலட்சுமி போல் சுய சான்றிதழ் வழங்கி பெருமையுடன் வாழ்ந்ததன் விளைவு பல தரப்பட்டது
பாடலின் விசேஷ பண்பு அல்லது கவிதையின் சிறப்பு அல்லது இசை அமைப்பில் உள்ள புத்தாக்கம் அல்லது உணர்வை மிளிரவைத்த பாடும் முறை அல்லது சம்பிரதாயங்களை அழகாக மாற்றி வெவ் வேறு கருவிகளின் கலப்பு என்பதை ஆய்தல் அவசியம் என்பதே புலப்படாமல் இருந்ததனால் பொத்தாம் பொதுவாக நல்ல பாட்டுஎன்ற ,முத்திரையை எளிதாக வழங்கும் நிலை நிலவுகிறது.
போகட்டும், ஒரு பாடலில் என்னவெல்லாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதை புரிந்து ரசிக்க இந்த பதிவில் நல்ல தகவல்கள் உள்ளன. அண்ணாதுரை கண்ணதாசன் [கவிஞரின் புதல்வர்], பானுமதி கிருஷ்ணகுமார் [ எழுத்தாளர், விமரிசகர், எம் எஸ் வியின் ஆழ்த்தரசிகர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ] திரு அனந்து [எம் எஸ் வியின் உதவியாளர்] இவர்கள் விவாதப்பொருளை பேசுவதை பார்த்தால் எவ்வளவு கூறிய பார்வை கொண்டு விவரங்களை தருகிறார்கள் என்பது புலனாகும். அதற்கு உறுதுணையாக இசைக்குழுவினர் இயங்க நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியின் ஏற்பாடு ஒவ்வொருவரின் பார்வையையும் ஆழ்ந்து கவனியுங்கள் பாடலில் என்னென்ன சுவைகள்
என்பதை உணரலாம். கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=9AAZNwJS8ew&t=308s kd msv remembered -1
***************************************************
No comments:
Post a Comment