PIANO GALORE -2
பியானோ வியாபக இசை-2
பியானோ வைத்து பாடல் உருவாக்குதல் எம் எஸ் வி க் கு ஒரு பிடித்தமான விளையாட்டு. மண வாழ்வை எதிர்நோக்கியுள்ள பெண்ணின் தோழியர் அவளை கிண்டல் செய்து விளையாடும் காட்சி எனவே கோரஸ் உண்டு
பாடல் பாட்டொன்று தருவார் பாடடியம்மா படம்:சர்வர் சுந்தரம், கண்ணதாசன் , விஸ்வநாதன்-ராமமூர்த்தி , எல் ஆர் ஈஸ்வரி , பி சுசீலா குழுவினர்.
நல்ல கிண்டல் ஆனால் கௌரவமான சொல்லாடல், இசையின் பரிமாணம் வேறுவகையினது , ஓட்டம் நடையும் ஆட்ட மும் பாட்டும் கோரஸ் குரல்களை ஊடறுத்து நுழைந்து நளின நர்த்தனம் காட்டும் பியானோ.. பாடல் நிதானமாக பயணிகளாக, கோரஸும் கருவிகளும் துள்ளிப்பாய அமைந்த பாடல். இசையில் எவ்வளவு நளினம்? கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=BUIPDCpV92o
PATTONRU
THARUVAAR SERVER SUNDARAM1965 KD V R LRE
SUSEELAA
பியானோ என்றதுமே மனதில் பளிச்சிடும் பாடல். தனி ஒருத்தி தன் ஆசையை நேர்த்தியாக சொல்லும் கவிதை
பாடல் என்ன என்ன வார்த்தைகளோ [வெண்ணிற ஆடை 1965] கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல் சுசீலா
பியானோ தான் பாடலை துவக்கி சுமப்பது ஆனால் உணர்வுகளை தாங்கிநிற்பதென்னவோ சொல் வரிசை தான் பாருங்கள்
உன்னைத்தான் எண்ணி சிரித்தேன் எண்ணம் ஏதோஏ தோ வளர்த்தேன்
நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி போல் நானும் மறைவேன் என்றெல்லாம் சொல்லி ப்பார்த்தும் 'அவன்' நிலை தடுமாறாதவன் அதனால் அவளோடேயே பயணித்தாலும் பாடுவதும் ஆடுவதும் 'அவ;ள் ' மட்டுமே வெகு நுணுக்கமான எல்லைக்குட்பட்ட நெருக்கம் , அதை வெளிப்படுத்தும் பியானோ.
கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=n1HQ8bTWrts ENNA ENNA VAARTHTHAIGALO VENIRA AADAI 1965 KD V R PS
இதே பாடலை ஜெயஸ்ரீ அவர்கள் பாட , இசையின் பரிமாணங்களை கவனிக்க இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=s3boyoDtEHU&list=RDs3boyoDtEHU&start_radio=1 jayasri enna enna vaarthaigalo
அதே
படத்தில்
நகைச்சுவை
ஜோடிக்கும்
ஒலித்த
பியானோ
அல்லி ப்பந்தல்
கால்கள்
எடுத்து
[கண்ணதாசன்
, வி-ரா,
குரல்கள்
எல்
ஆர்
ஈஸ்வரி,
எம்
எஸ்
ராஜு
] விறுவிறுப்பான
பியானோ யுக்ளி ங்
மற்றும்
ட்ரம்
இசை
யில்
மிளிர்ந்த
பாடல் இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=gnKv8runv8Y&t=2s
Allippandhal va vr lre ms
No comments:
Post a Comment