Saturday, February 21, 2026

MADURAI-3

 MADURAI-3

மதுரை-3 

மதுரையின் சிறப்புக்கள் கோவிலும், சகாய விலை உணவுகளும்  , வித விதமான உணவு வகைககளும் மட்டும் அல்ல. பார்க்கும் இடமெல்லாம் ஜே ஜே என்று கூட்டம், இரவிலும் விறுவிறுக்கும் வியாபாரம் [தூங்கா நகரம்] . இவ்வனைத்தையும் தாண்டி ஒவ்வொரு தமிழ் சினிமாவின் தலை எழுத்து என்ன என்றறிய மதுரையில் படம் எப்படி வசூல் பெறுகிறது என்பதே திரைத்துறையின் அளவுகோல். அதற்கு பல காரணங்கள் [முக்கியமாக ஏ [A ], B மற்றும் சி [C ] என எல்லா நிலை ரசிகர்களையும் , மதுரை ஒரு நகரில் இருந்து கணிக்கலாம்.

தெரு உணவு என்பது பலருக்கும் ஏற்புடையது இல்லை என்ற ஒரு பரவலான மன நிலை தமிழகத்தில் நிலவி வந்த  நிலை சில ஆண்டுகள் முன்பு வரை இருந்தது. அந்த சமுதாய விதியை தகர்த்து, சுவையும் விலை யும் நேரடி சமன்பாடுகள் அல்ல  என்று மெய்ப்பித்தது மதுரை தான்

அதனால் மதுரையில்பன்னெடுங்காலமாக தள்ளு வண்டி வடை, பஜ்ஜி, பூரி , அப்பம் அதிரசம் இவை  அமோக விற்பனை பொருட்கள். இந்தப்பட்டியலில் பின்னாளில் போளி, கீரை வடை [முள்ளு முருங்கை வடை] அதன் மீது தூவப்படும் ஒரு சொக்குபொடி என சேர்ந்துவிட்ட  பல தசாவதாரங்கள் மதுரை கையேந்தி பவன் களின் சிறப்பு. 

சமூக கௌரவமாவது ஒன்றாவது போடா என்று எப்போதோ மதுரை மக்கள் ஜாம் ஜாம் என்று மாலை வேளைகளில்தெருவில் வண்டிகள் அருகில் கூடித்தின்று தலைக்கு 20 ரூபாய்க்கு வயிறை நிரப்பும் வைபவம் இன்றும் நிதரிசனம். ஆம் 3 வடை 10/- ரூபாய், 4 வடை 12/- என்று அந்தந்த பகுதிக்கு,மக்களின் [Economic Index]  பொருளாதார அளவீட்டின் படி விலை நிர்ணயயம் செய்து மார்க்கெட் பிடிக்கும் ஆற்றல் மதுரை வியாபாரிகளின் தொழில் துல்லியம்.

என்ன? கையில் 5/-ரூபாய் தான் இருக்கிறதா இந்தாங்க சுண்டல் சாப்பிடுங்க என்று கை அகல  இலை அல்லது செய்தி தாள் ஒன்றின் மீது ஆவி பறக்கும் சுண்டல் [அதில் தேங்காய், கடுகு, கறிவேப்பிலை அலங்காரங்களுடன்] இவை மதுரை அன்றி வேறெங்கும் காண்பது கூட அரிது. டூரிஸ்டுகள் அநேகர் மாய்ந்து மாய்ந்து உணவுப்பண்டங்களை ருசிப்பதைப்பார்த்தா லே  இவர்கள் மனதைப்பறி கொடுத்தவர்கள் என்று..வெளிச்சம் போடக்காணலாம்

இவை அனைத்தையும் தாண்டி பேனா  ரிப்பேர் , இங்க்  தயாரிப்பு , பெருங்காயம் தயாரிப்பு என பல விநோதங்கள் மதுரையின் அடையாளம். இவற்றில் சில இன்றைய வீடியோ பதிவுகளில் காணலாம் 

https://www.youtube.com/watch?v=HP04j2FxstQ  MDU PEN SERVICE 55 YRS +

https://www.youtube.com/watch?v=_guwkEm9mzY ASAFOETIDA MAKING IN MADURAI

https://www.youtube.com/watch?v=xb3DZ5t_mwg&t=871s STREET FOOD

MADURAI Food Tour - Idiyappam (Rice Noodle) - Ragi (Finger Millet) Puttu  A FABULOUS  EXPLORATION

https://www.youtube.com/watch?v=aQyIveyNV6M Morning tiffin Rs.30/-

………………………………………………………………………………………………………..

No comments:

Post a Comment

MADURAI-3

  MADURAI-3 மதுரை-3   மதுரையின் சிறப்புக்கள் கோவிலும், சகாய விலை உணவுகளும்   , வித விதமான உணவு வகைககளும் மட்டும் அல்ல. பார்க்கும் இடமெல்...