Sunday, March 1, 2026

Madurai-4

 Madurai-4                                                   

மதுரை -4

சென்ற பதிவின் [மதுரை -3] தொடர் விளக்கமாக பேராசியர் டாக்டர் வெங்கடராமன் கூறியுள்ள தகவல் இதோ.

மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு கடைசி யில் , புட்டும் ஆப்பமும் கிடைக்கும் .      மற்றொரு  முனையில் ஒரு ரூபாய் இட்டிலி கிடைக்கும். . பை -பாஸ் ரோடில் காலை உணவு மதியம் பிரியாணி , இரவில் இட்லி சப்பாத்தி ரெடி.  என்று ஒரு பட்டியல் தந்துள்ளார் .

பேராசியர் டாக்டர் வெங்கட்ராமன் மதுரைக்கல்லூரியில் சமகாலத்தில் பயணித்தவர். விலங்கியல் துறையில் பேராசிரியர். -பயோகெமிஸ்ட்ரி     [BIO-CHEMISTRY] மற்றும் விலங்கு செயலியல் [PHYSIOLOGY] துறைகளில் நல்ல பாண்டியத்வம் கொண்டவர். இவ்வனைத்தும் அவரது சிறப்புகள் [ஆயினும் எந்த புலமையும் இல்லாத எனக்கு நண்பர் என்பதே வியப்புக்குரியது தான்].

மதுரை -4

நம்மையும் நம்மவரையும் மட்டுமல்ல, மேலை நாட்டவரையும் ஈர்க்கும் சுவையும் எண்ணற்ற உணவு வகைகளும் மதுரையின் பெருமைக்கு அணிசேர்க்க காணலாம் . அவர்கள் நம்மவர்க்கு இணையாக உணவுகளை சுவைப்பதையும் கைகளால் உண்பதையும், ஒவ்வொரு பொருளின் கூட்டமைப்புகளையும் வியந்து பார்ப்பதும், வாழை இலையில் உண்பதன் உள்ளார்ந்த பொருள் பற்றி பேசுவதும் நாமும் கூட  புரிந்துகொள்ள வேண்டியவையே  சந்து பொந்துகளில் பயணித்து வெவ்வேறு இடங்களைக்கண்டு மகிழ்வுறும் மேல் நாட்டவரின் வீடியோ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Q-LwUP3EU_g Western tourists

மற்றுமோர் சுற்றுலா பயணி வாடகை ஆட்டோவில் சுற்றி ஆங்காங்கே உணவுப்பண்டங்களை ருசித்து மகிழ்வதைப்பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=QPaeKQqT90w  another westerner

மதுரையின் மற்றுமோர் பிரத்தியேக அடையாளம் "ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர்" சோடா. இந்தியா சுதந்திரம் பெரும் முன்பே துவங்கி இயங்கிக்கொண்டிருக்கும் சோடா நிறுவனம் சோடா தொழில் நுட்பம் இறக்குமதி ஜெர்மனியில் இருந்து. கோலி  சோடா  காலி பாட்டில் ஒன்றின் விலை 80/- ரூபாயாம் . 10 ரவுண்டு சோடா விற்றால் தான் முதலை மீட்க முடியும் போல் இருக்கிறது. இருப்பினும் சோடா , லெமனேடு , ஜிஞ்சர் , பன்னீர் சோடா என்று கொடிகட்டி பறக்கும் தொழில் இது. இணைப்பைப்பாருங்கள் கண்டு உணர நல்வாய்ப்பு

https://www.youtube.com/watch?v=BT0r5jwOh9U  MAPPILAI VINAAYAGAR                                        நன்றி    அன்பன் ராமன் 

Madurai-4

  Madurai-4                                                     மதுரை -4 சென்ற பதிவின் [மதுரை -3] தொடர் விளக்கமாக பேராசியர் டாக்டர் வெங்கட...