Wednesday, March 25, 2026

I. S MURUGESH -01

 I. S MURUGESH -01     

 / எஸ் முருகேஷ் -01

இந்த அவரது  இயற்பெயரை விட பலருக்கும் மிகவும் தெரிந்த அடையாளச்சொல் திரு மீசை முருககேசன் என்பதே. இப்போது புரிந்திருக்குமே நான் யாரைப்பற்றி சொல்கிறேன் என்று. ஆம் அந்த மீசை நபர் தான் கோவைப்பகுதி அவரது ஊர் . நீண்ட காலமாக கோவை பக்ஷிராஜா பிலிம் நிறுவனத்தில் இசை பிரிவில் பணியாளர். திரு எஸ் எம் சுப்பையா நாயுடு [இசை அமைப்பாளர்] குழுவில் பணியாற்றியவர். அதாவது,   திரு எம் எஸ் வி திரு எஸ் எம் எஸ் அவர்களிடம் உதவியாளாராவதற்கு முன்பே மீசை அந்தக்குழுவில் உறுப்பினர். திரு எம் எஸ் வியின் இசைக்குழுவில் அவரை [MSVஅவர்களை] விட மூத்த இசை க்கலைஞர்கள் உண்டு. அவர்களில் சிலர் திரு கோபாலகிருஷ்ணன் [தாளக்கரருவி களை  இயக்குவதில் நிபுணர் . டேய் விஸ்வநாதா என்று கூப்பிட்டு வேற ட்யூன் போடு இது சரியில்லை என்று சொல்லும் அளவிற்கு மூத்தவர் எம் எஸ்வியிடம் இசைக்கலைஞராக பணியாற்ற தயக்கம் கொள்ளாதவர். அதைப்போன்றே திரு ஜி கே வெங்கடேஷ் [பின்னாளில் கன்னட திரை இசையில் கொடிகட்டிப்பறந்த பெருமை உள்ளவர் [திரு இளையராஜா ஜிகே வி இடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது]..

திரு மீசை, எதையாவது செய்து தேவையான ஒலிகளை உருவாக்குவது அவருக்கு ஒரு பொழுதுபோக்கு. அவர் கையில் எந்தப்பொருளும் பேசும். அப்படி பல எளிய உத்திகள் மூலம் படங்களிலும்பாடல்களிலும் தீ பிடித்து எறிவது அமானுஷ்ய திகில் ஒலி எழுப்புவது, மயானபூமியின் வினோத ஒலிக்கலவை , குதிரை ஓடும் ஒலி என தேவைக்கேற்ப புதிய முயற்சிகளை செய்து அவ்வப்போது பிரமிக்க வைக்கும் பேராற்றல் கொண்டவர், இவர்  சதன், சாய்பாபா மூவரும் எம் எஸ் வியின் குழுவில் எப்போதும்  ஆபத்பாந்தவர்கள்.  

உதாரணம் வேண்டுவோர் "கடவுள் அமைத்துவைத்த மேடை ' பாடலில் வரும் ஏரோபிளேன், மந்திரம் ஜபிக்கும் புரோகிதர்கள் முயல், மான், கிளி மற்றும் நாதஸ்வரம், வீணை  என குரலால் செய்து 'விகடகவி'க்கு உயிர் தந்தவர்கள். எத்துணையோ காட்சிகளிலும் பாடல்களிலும் இவர்களின் பங்களிப்பு வெகு சிறப்பானது. இவர்கள் மூவர்க்கும் தனித்தனி சிறப்பு என்பது அவர்களின் தனித்திறன் எனில் மிகை அல்ல.

அந்த மீசை முருகேஷ் பங்கு கொண்ட வீடியோ வைக்கண்டு ரசித்து புரிந்து கொள்ள இணைப்பு இதோ

No comments:

Post a Comment

WILLIAM SHAKESPEARE -5

  WILLIAM SHAKESPEARE -5 The present episode of quotes from Shakespeare relates to human attitude and general disposition to time. As I ha...