Tuesday, March 24, 2026

LET US PERCEIVE THE SONG 62

LET US PERCEIVE THE SONG 62          

பாடலை உணர்வோம் --62

மாலை சூடும் மண  நாள் [நி ச்ச- தாம்பூலம் -1962] கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி , குரல்கள் பி சுசீலா -எம் எஸ் விஸ்வநாதன்

 நான் அறிந்த வரை இது ஒரு வியப்பு தரும் பாடல் . பாடலில் என்ன வியப்பு என்கிறீர்களா. கேட்பதற்கு காதல் கீதம்போல் இருப்பினும் ஆழ்ந்து கவனித்தால் இது உள்ளார்ந்த பெண் மன  சோக கீதம்.. மண  நாளை எண்ணிப்பாடும்   பெண் அந்நாளின் பெருமைகளை சொல்கிறாள் எப்படி.

மாலை சூடும் மண  நாள்

இள மங்கையின் வாழ்வில் திருநாள் , சுகம் மேவிடும் காதலின் எல்லை வேறோர் திருநாள் இல்லை [இரு பொருள்  1 மண நாளை விட உயர் ந்த நாள் இல்லை 2 ] இனி கொண்டாடி மகிழ வேறோர் நாள் கிடையாது எனவும் பொருள் கொள்ளலாம்/

பல்லவி

காதல் கார்த்திகை திருநாள்

மனம் கலந்தால் மார்கழி திருநாள்

சேர்வது பங்குனி திருநாள்

நாம் சிரிக்கும் நாளே திருநாள்

தனது வாழ்வின் உன்னத தருணங்களையு நினைவில் நிறுத்திப்பாடும் யுவதி  படிப்படியாக முன்னேறி திருமண பந்தம் அமைந்ததை மாதங்கள் அட்டவணையில் பாடுகிறாள்

பல்லவி

திரு மலரும் மணமும் போதும்

மங்கல குங்குமம் போதும்

திரு மலரும் மணமும் போதும்

பொங்கிடும் புன்னகை போதும்

மனம் புது மணத் திருநாள் காணும்

வாழ்வில் பொன்னும் பொருளும் இல்லை எனினும் மங்கள அடையாளங்கள் குங்குமம் , மலர் மணம்  இவை போதும் [இவை எப்போதும் புதியதாகவே இருக்கும் ஏனைய பொ ன் பொருள் நகை போன்ற வை மங்கிவிடலாம் ] என்று தனது இல்லாமையைக்கூட வல்லமையாக்கிப்பாடும் குண நலன் மிளிரும் கவிதை .

மீண்டும் பல்லவி மூன்று முறை பாடப்படுகிறது 

கவிஞர் கருத்தை சொல்லி விட்டார்  உணரவைச் சொல்லவேண்டியது  ட்யூன் அல்லவா . அதில் தான் பாடலின் சிறப்பே புதைந்துள்ளது

ஆனந்தமாகத்துவங்கும் பல்லவி

 

மா------லை சூடும் மண  நாள் என்று உல்லாசத்துவக்கம்  இல்லாமையை மறைத்துக்கொண்டு இருப்பதை வைத்து அமைவதியும் ஆனந்தமும் கொள்ளும் வகையில் ட்யூன் பல இடங்களில் நேர்த்தியாக ஏற்ற இற க்கம் காட்டுகிறது. வேறோர் திருநாள் இனி இல்லை என்பதை இல் ......லை என்று தூக்க்கிப்பாடி  நிறைவு காணும் பண்பு.

இசையில் தான் எவ்வளவு குறைத்த கருவிகள் வீணை , குழல் தபலா அதிலும் இறுதி கட்டம் வரை குழல் சந்தோஷமாக ஒலி க்க  . இறுதிப்பகுதியில் சோகமாக தவழ்ந்து அப்பெண்ணின் பெற்றோர் வேதனையுறுவதை இசையில் காட்டிய நளினம். மனைவிக்கு ஆறுதலாக கணவனும் குரல் கொடுக்க ஹம்மிங் சாட்சாத் எம் எஸ் வி அவர்களே ஹூ ஹு ஹூஹூம் ஹு ஹூஹூம் என்று சேர்ந்து குரல் கொடுக்கிறார். காட்சியில் சிவாஜி கணேசனின் சோகத்தின் பொருள் நன்றாக வெளிப்படும் வண்ணம் அமைந்த பாடல். கேட்டு உணர இணைப்பு இதோ

 

மாலை சூடும் மணநாள் Video Song | Nichaya Thamboolam | Sivaji Ganesan | Viswanathan–Ramamoorthy

இப்பாடலின் வெவ்வேறு பரிமாணங்களை விளக்கி சுபஸ்ரீ குழுவினர் வழங்கும் வீடியோ இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=kcrGRCA0xJ0 maalai soodum QFR

 

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG 62

LET US PERCEIVE THE SONG 62            பாடலை உணர்வோம் --62 மாலை சூடும் மண   நாள் [ நி ச்ச - ய தாம்பூலம் -1962] கண்ணதாசன் விஸ்வந...