Sunday, March 22, 2026

MADURAI-6 மதுரை -6

 MADURAI-6                             மதுரை -6

Again Madurai 

மீண்டும் மதுரை

ஐயோ மீண்டும் மதுரை யா ? என்று சிலர் முனகுவது தெரிகிறது.. முனக வேண்டாம் , ஏனெனில் மதுரையின் தனிச்சிறப்பு இன்றைய பதிவில் . இரண்டையும் ஊன்றிப்பாருங்கள். மதுரை வாழ் மக்கள் எப்படி 9வ்விரண்டு உணவகங்களையும்  நன்றியுடன் போற்றுகிறார்கள் பாருங்கள்.

முதலாம் பெருமை

100 ஆண்டுகால சிற்றுண்டி சாலை "கோபாலய்யங்கார் சிற்றுண்டி நிலையம். அதன் பெயர் மருவி கோபு அய்யங்கார் /கோபி அய்யங்கார் கடை என்று உள்ளூர் அன்பர்கள் மகிழ்வுடன் பேசுவதை கேட்பதே ஒரு அலாதி இன்பம் தரும்.. காலை 10.00 அல்லது 10.30 வரையும் மாலை 3.00 மணி முதல்  7,00 அல்லது 7.30 வரை மட்டுமே இயங்கும். சிற்றுண்டி மட்டுமே. மாலை வேளைகளில் ஜீராபோலி OR பன் அல்வா OR கேசரி OR பாதாம் அல்வா இவை ஒரு நாளில் ஒரு ஐட்டம் என்று சுடசுட பறக்கும். பஜ்ஜி போண்டா இன்ன பிற வகைகள் இருந்தாலும் கார அப்பம் [வெள்ளை அப்பம் ] மற்றும் மிளகாய் சட்டினி கோபு அய்யங்கார் ஸ்பெஷல். இவற்றிற்கு விசேஷ ரசிகர் பட்டாளமே உண்டு. மாலை சுமார் 4 மணிக்கு அலை மோதும் காரச்சட்னி-வெள்ளையப்ப ரசிகர் கூட்டம்.

என்னது மிளகா சட்னி யா ஆத்தி குடல் வெ ந்து ரும்   எனக்கு வேண்டாம் என்று ஒருவர் சொல்வது அவ்வப்போது நடக்கும் . அவரது நண்பர் சொல்வார் "என்ன அப்பிடி சொல்லிட்ட?  ஒரே ஒரு நாள் என்கூட வா சட்னியை முனி நாக்குல [நுனி நாக்கு என்பதற்கு மதுரையின் சொல்லாடல்] வச்சதும் 10 வருசமா வேல செய்யாத சிறுகுடல் பெருகுடல் எல்லாம் கதறிக்கிட்டு சும்மா கரன்ட்டு மாதிரி வேல செய்யும். அவ்வளவு சுறு சுறுப்ப  வேற எப்படியும் உண்டாக்க முடியாது டேஸ்ட் சும்மா பட்டையைக்கிளப்பும் என் கூட வா என்று பலரையும் அந்த வெள்ளையப்பம் -கார சட்னி ரசிகர்களாக்கி இப்போது கோபு அய்யங்கார் சட்னி வெகு பிரபலம். , இடம் மேல /வடக்கு சித்திரை வீதிகளின் சந்திப்பு மூலையில்  100 ஆண்டுகளாக அதே இடத்தில். காட்சிக்கான வீடியோ இணைப்பு

 https://www.youtube.com/watch?v=NDXhC_tGp0I 100 yr pld Gopu Iyengar TIFFIN CENTRE 

மற்றுமோர்  எளியோர் உணவகம் 

சுதர்சன் டிபன் சென்டர்  [ மாலை உணவகம்]

கிருஷ்ணாபுரம்   மதுரை

சிறிய கடை,  மொய்ப்பது போல் கூட்டம் , காத்திருந்து வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்கள் மறைந்த தனது முதலாளியை நன்றிப்பெருக்குடன் ஆராதிக்கும் ஊழியர் [மாஸ்டர்]. 

வாடிக்கையாளர்களின் உணர்வுக்கு ஏன் மதிப்பு தர வேண்டும் என விளக்கும் முதலாளியம்மா மற்றும் இன்றும் தொடரும் அதே மாஸ்டர்.

மாஸ்டர் ஊழியராக துவங்கி படிப்படியாக உயர்ந்து மாஸ்டர் ஆன தகவல்கள், உண்போரின் நிறைந்த மன திருப்தி அனைத்தையும் விலாவாரியாகப்பேசும் வீடியோ.

ஏன் மதுரை உணவகங்களுக்கு இவ்வளவு மவுசு? புரிகிறதா?  எளிமையும் பேச்சில் அன்பும் மதுரையின் பெரும் அடையாளங்கள். பார்த்து உணர இதோ இணைப்பு                                                                                                                                                           

 https://www.youtube.com/watch?v=-5jKrSSQNPI         Why Madurai is different ?                   

மற்றுமோர் எளியோர் உணவகம் [அக்கா கடை]

[வடக்கு மாசி-மேல மாசி வீதி சந்திப்பு பகுதியில்]

அக்கா  கடை என்ற அன்புப்பெயருடன் இயங்கும் இரவு நேர தள்ளு வண்டி நிலையம் இரவு 10.00 மணிக்குப்பின் துவங்கி சுமார் 2.00 மணி வரை உழைப்பாளிகளுக்கு இரவு உணவு வழங்கும்  அக்கா. அக்காவே உணவு தயாரிப்பவர். குறைந்த விலையில் தோசை வகைகள் மற்றும் பிற பொருட்கள். தூங்கா நகரில் வியாபாரத்திற்கு கேட்பானேன். அதிலும் தினமும் ஒரு 5 பேருக்கு இலவசமாக பசியாற்றும் கைங்கரியத்தையும் செய்கிறார் அக்கா. இது போன்ற பல அன்பாகங்கள் அன்றாடம் மதுரையில். ஆனால் அடி தடி வந்தால் அதற்கும் அசராமல் ஈடு கொடுப்போர் மதுரை விற்பனையாளர்கள். இதோ வீடியோ இணைப்பு  

  உழைப்பாளிகளுக்கான நள்ளிரவு உணவகம் Madurai Akka Kadai | MSF for labourers

No comments:

Post a Comment

MADURAI-6 மதுரை -6

  MADURAI-6                              மதுரை -6 Again Madurai   மீண்டும் மதுரை ஐயோ மீண்டும் மதுரை யா ? என்று சிலர் முனகுவது ...