Sunday, April 26, 2026

AUTOBIOGRAPHY [Equus asinus]

 AUTOBIOGRAPHY  [Equus asinus]

என்  சுயசரிதை

ஹலோ நான் கழுதை பேசுகிறேன்.. என்னை பற்றி ஒரு 10 வரி எழுதச்சொல்லி BLOG இல் ஒரு பதிவு வந்தது. ஒரு கணம் தலை சுற்றியது -என்னது நம்மைப்பற்றியா ? அதுவும் நமக்கு அவ்வளவு முக்கியத்துவமா ? அறிவில் உயர்ந்த சான்றோர் நம்மைப்பற்றி என்னதான் சொல்வார்கள் என்றுகாத்திருந்ததோடு ஊர்க்கழுதைகளுக்கு வேறு இது பற்றி சொல்லிவைத்திருக்கிறேன். இப்போது என்னால் தெருவில் நடமாடமுடிய வில்லை  வெய்யில் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள் வெளியில் இறங்கினால் போதும் கட்டுரை வந்துவிட்டதாவந்துவிட்டதா என்று துளைத்து எடுக்கிறார்கள் எனது இன நண்பர்கள்].

வெய்யில் நமக்கெல்லாம் ஒரு பொருட்டா என்ன? நீங்களும் நம் இனத்தவர் தானே வெய்யிலி ல் கிரிக்கெட் , கிட்டி, பம்பரம் கோலிக்குண்டு மாறுவேடத்தில் தெருவில் அலைந்து நண்பர்களை அலைக்கழிப்பது என நீங்களும் வெய்யில் வீண் போகாமல் சுற்றும் இனம் தானே? அதனால் நம் 'இனப்பெருமைகளை' உலகினருக்கு அறிவிக்க ஒரு 10 வரி குறிப்பு எழுதச்சொன்னார் அவர் பெயர்         அன்பன் என்று அறிவிப்பில் இருக்கிறது..

நான் ஒரு வழியாக 'அன்பன் யார் என்று பார்த்தால் 'நம்ப மதுரை ஆசாமி . அவரை கேட்டேன் ஏன் சார் இன்னும் யாரும் பேசவில்லையா எழுதவில்லையா என்றேன்

சிரித்தபடியே சொன்னார் இன்னும் ஒரு மாமாங்கம் ஆனாலும் எழுத்தமாட்டார்கள். எல்லாம் கலியுக முனிவர் போல் நிஷ்டையில் இருப்பார்கள் , கேள்விக்கு விடை சொல்லாமலே வாயால் வடை சுடுவார்கள் எனவே என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் உன் இனம் பற்றி நீயே எழுதினால் உண்டு இல்லையேல் கிடக்கிறது கழுதை என்று கடந்து போவார்கள். என்றார் . மதுரை வெய்யிலில் சுற்றி ஆனார் போலும்

மேலும் சொன்னார் உன் அருமை பெருமைகளை ஒளிவு மறைவு இல்லாமல் திறம்படச்சொல். எழுத்தாளர் ஆர் கே நாராயணன் சொல்லியிருப்பதாக சில நுண் தகவல்களை [ஜாம்பவான் அனுமனுக்கு சொன்னது போல்] நினைவூட்டினார் மண்டை வரண்டாலும் நினைவு பசுமையாக இருக்கிறது நம்ம வுக்கு.

எனவே தந்த குறிப்புகள் கொண்டு இதை “என்  சுய சரிதை என்ற தலைப்பில் தருகிறேன். .

எங்கள் இனத்திற்கு மிகப்பெரிய பரிணாம வரலாறு [ Evolutionary History ] உண்டு  ஆகவே எங்களின் மூதாதையர்கள் ஆங்கில மொழி மரபில் ASS என்று வருணிக்க பட்டனர். பின்னர் வந்த சந்ததியினர் Donkey  என்றும் பின்னர் வீட்டு விலங்கின [DOMESTICATED] பட்டியலில் இணைக்கப்பட்டனர் . பல மேற்காசிய நாடுகளில் எங்களின்  சகோதர உறவுகளே பல வித பணிகளிலும் பங்கேற்கின்றனர். இது ஒரு புறம் இருக்க பெருமை மிக்க குதிரை இனத்தவர்க்கும் எங்களுக்கும் கலப்பு நிகழ்வதும் உண்டு. அதாவது தாயோ தந்தையோ குதிரை ஆகவும் மற்ற இணை எமது கழுதை இனமாகவும் இருக்கும் அவ்வாறு உருவாகும் சந்ததியினர் [offspring ] மலடுகளாகவே இருப்பதால் ஒரு மூன்றாவது குழுதை அல்லது கதிரை என்ற ஒரு பிறவி தோன்றாமல் இயற்கையே தடுத்துவிட்டது.

[கலப்பின பிறவிகளுக்கு 63 குரோமோசோம்கள் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கு வழியின்றி மலடுகளாக அமைந்து விடுகின்றன]. அறிவில் செழிக்கும் மனிதப்பிறவிகளாகிய உங்களுக்கு போய் இவற்றை நான் விளக்கவேண்டுமா என்ன?            கழுதைத்தனம் இடையில் வந்துவிட்டது மன்னியுங்கள்.

சரி இந்த வகை மலடுகளுக்கு பிரத்தியேக பெயர்கள் உண்டு .    அவை

தாய் [கழுதை-Jenny ] X தந்தை குதிரை -Stallion  = HINNY ஹின்னி] குதிரை போன்ற வாலும் , முகமும் கொண்டது

தாய் –[குதிரை Mare] x தந்தை கழுதை [Jack ] = MULE [கோவேறு கழுதை] குதிரை போன்ற உருவமும் பலமும் அறிவும் கொண்ட பிறவி.

இவ்வளவு வகை எமது இனத்தில் உண்டு ஆயினும்ஹின்னி   என்ற வகை மிக அரிது. அது ஏன் என்று புரிந்து கொள்ளுங்கள்

எமது மரபியல் தொடர்புகள் இவ்வாறிருக்க , குதிரை போன்ற வடிவம் கொண்ட நாங்களும் வளர்ப்பு இனப்பிறவிகளே .ஆனால் எங்களை கட்டிப்போட்டு வளர்ப்பதில்லை ஏன் ?  குதிரை, மாடு நாய் என எதையும் கட்டி வைக்கும் உரிமையாளர் பூனையையும் , எங்களையும் சுதந்திரமாக விடுவது ஏன்?  நீங்கள் தான் அறிவில் உயர்ந்த மானுடர் ஆயிற்றே விடை சொல்லுங்களேன் பார்ப்போம்.

ஆனால் திரு சொல்கிறார்  "அவர்கள் சுயம்புகள் விரும்பினால் பதில் சொல்வர் இன்றேல் நிஷ்டையில் அமிழ்ந்து அவ்வப்போது ஒரு கண்ணை திறந்து கடிகாரம் பார்த்து நேரத்திற்கு உண்ணவும் உறங்கவும் செல்பவர்கள். பதில் சொல்லமாட்டார்கள் .நீ ஏதாவது சொல்லாமல் விட்டால் உடனே வருமான வரித்துறையினர் போல் உன் ஜாதகத்தை எடு என்று கொடூர நிபந்தனைகளுடன் சுற்றி வளைப்பார்கள். நீ வேண்டுமானாலும் பார்  பதிலே சொல்லாமல் கடந்து போவார்கள்." 

எங்கள் இனம் குறித்து திரு வழங்கிய தகவல்கள் வியப்பும் பெருமையும் கொள்ள வைக்கின்றன. அட நமது இனத்தவரை அறிவிற்சிறந்த மனிதர்கள் இழிவாகப்பார்க்கும் போது இந்த வறண்ட மண்டைக்குள் இவ்வளவு தகவல் தொகுப்பா, ஐயோ மலைப்பாக இருக்கிறது  இந்த மண்டைமட்டும்  வரளாமல் இருந்திருந்தால் ----     -நினைக்கவே  கதி கலங்குகிறது.

 என் மௌனத்தை உற்றுப்பார்த்த    சொன்னார்

"'மனிதர்கள் வினோதமானவர்கள். தெரியாவிட்டாலும் தெரிந்தது போல் ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்து மகிழ்வார்கள். சகல விவரங்களுடனும் பேசத்துவங்கினால் காற்றுப்போன பலூன் போல சிறுத்து சுருங்கி ஒடுங்குவார்கள். ஆனால் எந்த வினாவுக்கும்  விடை சொல்லாமல் கடந்து செல்வர். பொறுத்திருந்து பார் நான் சொன்னது எவ்வளவு ஆழமானது என்று உனக்கும் விளங்கும்."

என்ன எனக்குமா ? என்றேன்.

ஆம் என்று அவர் சொன்ன முதல் கருத்து என்னை புரட்டிப்போட்டது

கூற்றில் அறிவு இல்லாவிடினுயம் அனுபவம் இருக்கும் அதனால் பதில் வரும்வரை பொருத்திருக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

சிரிக்கிறார் [அட ஜடமே என்பது போல்].

உங்கள் விளக்கம் வந்தபின், நான் தொடரும் வரை அமைதி காப்பேன்

நன்றி  தற்கால உறுப்பினர் [DONKEY ]

No comments:

Post a Comment

AUTOBIOGRAPHY [Equus asinus]

  AUTOBIOGRAPHY   [ Equus asinus ] என்   சுயசரிதை ஹலோ நான் கழுதை பேசுகிறேன் .. என்னை பற்றி ஒரு 10 வரி எழுதச்சொல்லி BLOG இல் ஒர...