COORG/ KAVERI
குடகு/காவிரி
இன்றைய பதிவை காவிரி என்பதா குடகு என்பதா என்ற சிறு குழப்பம்
இருக்கத்தான் செய்கிறது. எனினும் ஒரு பிராந்தியம் இல்லாமல் அதன்
சிறப்பை பேசுவது முறை யல்ல . ஆகவே
குடகு /காவிரி என்பதே பொருத்தம்.
குடகு என்று
தமிழில் நாம் சொன்னாலும் அப்பிராந்திய வாசிகள் [கூர்கி
இனத்தவர்] கொடகு என்றே சொல்வர். குடகு மொழி தமிழ்-மலையாளம்
கலந்த ஒரு அமைப்பில் இயங்குவது..அவர்கள் பேசும்போது கேட்பவருக்கு இனிமையாக இருக்கும்.. அது மலைப்பாங்கான பகுதி என்பதால்
இயற்கை வளம், வனம் அருவிகள் எஸ்டேட்
கள் என வெவ்வேறு ரசிக்க வல்ல சூழல்களின் ராஜ்ஜியம் அது.
கூர்கி இனத்தவர் இயல்பிலேயே வலிமையான உடலும் தேசப்பற்றும் கொண்டவர்கள். பலர் இந்திய ராணுவம்,
வான் படை, கப்பற்படை போன்ற
பாதுகாப்புத்துறைகளில்
முத்திரை பதித்தவர்கள் . கரியப்பா , திம்மையா , போன்ற இந்திய ஜெனெரல்கள் உலகப்புகழ் கொண்டவர்கள்.. இப்படி பல சிறப்புகள் கொண்ட குடகு
மலையில் ஒரு சிறிய பகுதியில்
காவிரி துவங்குகிறது.
அப்பகுதி தலைக்காவேரி எனப்படுவது. குடகு மொழியில் தல காவ்ரி என்பார்கள்.
800 கிலோமீட்டர் பயணித்து எண்ணற்ற மக்களுக்கு வாழ்வுதரும் 'தாய்' காவிரி. தஞ்சையின் வளம் காவிரி தரும்
கொடையே . குடகு/காவிரி
குறித்த வீடியோ இதோ. அதனை நன்கு
பாருங்கள். இணைப்பு இதோ
KAVERI
https://www.youtube.com/watch?v=IBvFlq6Ilfg
https://www.youtube.com/watch?v=6JNqOHeIYYw
இதை பார்க்க நேர்ந்தபோது கவிஞர் புலமைப்பித்தனின்
காவிரி பற்றிய 'தொகையறா ' இதயக்கனி படத்தில்
இடம் பெற்ற து நினைவுக்கு வந்தது.
அதியற்புதமான வடிவில் எம் எஸ் வி இப்பகுதியை வெகு சிறப்பாக சீர்காழி கோவிந்தராஜன் குரலில்
[+எஸ் ஜானகி [பாடலில் டி எம் எஸ் குரலும் ஓங்கி ஒலிக்கிறது
] . காவிரியின்
பெருமை ஒவ்வொரு முறை கேட்டதும் இயற்கையை
தலை வணங்கச்சொல்லும்,
அற்புதமான
தொகையறா வடிவம் கேட்டு மகிழ்வீர் இணைப்பு இதோ இதில் இன்றைய சூழலுக்கு
தொகையறா மிக வலிமை சேர்க்கும் இணைப்பு இதோ
No comments:
Post a Comment