Sunday, April 5, 2026

COORG/ KAVERI

COORG/ KAVERI 

குடகு/காவிரி

இன்றைய பதிவை காவிரி என்பதா குடகு என்பதா என்ற சிறு குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. எனினும் ஒரு பிராந்தியம் இல்லாமல் அதன் சிறப்பை பேசுவது முறை யல்ல . ஆகவே குடகு /காவிரி என்பதே பொருத்தம்.

 குடகு என்று தமிழில் நாம் சொன்னாலும் அப்பிராந்திய வாசிகள் [கூர்கி இனத்தவர்] கொடகு என்றே சொல்வர். குடகு மொழி தமிழ்-மலையாளம் கலந்த ஒரு அமைப்பில் இயங்குவது..அவர்கள் பேசும்போது கேட்பவருக்கு இனிமையாக இருக்கும்.. அது மலைப்பாங்கான பகுதி என்பதால் இயற்கை வளம், வனம் அருவிகள் எஸ்டேட் கள்  என   வெவ்வேறு ரசிக்க வல்ல சூழல்களின் ராஜ்ஜியம் அது.

கூர்கி இனத்தவர் இயல்பிலேயே வலிமையான உடலும் தேசப்பற்றும் கொண்டவர்கள். பலர் இந்திய ராணுவம், வான் படை, கப்பற்படை போன்ற பாதுகாப்புத்துறைகளில் முத்திரை பதித்தவர்கள் . கரியப்பா , திம்மையா , போன்ற இந்திய ஜெனெரல்கள் உலகப்புகழ் கொண்டவர்கள்.. இப்படி பல சிறப்புகள் கொண்ட குடகு மலையில் ஒரு சிறிய பகுதியில் காவிரி துவங்குகிறது.

அப்பகுதி தலைக்காவேரி எனப்படுவது. குடகு மொழியில் தல காவ்ரி என்பார்கள். 800 கிலோமீட்டர் பயணித்து எண்ணற்ற மக்களுக்கு வாழ்வுதரும் 'தாய்' காவிரி. தஞ்சையின் வளம் காவிரி தரும் கொடையே . குடகு/காவிரி

குறித்த வீடியோ இதோ. அதனை நன்கு பாருங்கள். இணைப்பு இதோ   

KAVERI  

https://www.youtube.com/watch?v=IBvFlq6Ilfg 

https://www.youtube.com/watch?v=6JNqOHeIYYw  

இதை பார்க்க நேர்ந்தபோது கவிஞர் புலமைப்பித்தனின் காவிரி பற்றிய 'தொகையறா ' இதயக்கனி படத்தில் இடம் பெற்ற து நினைவுக்கு வந்தது. அதியற்புதமான வடிவில் எம் எஸ் வி இப்பகுதியை வெகு சிறப்பாக சீர்காழி கோவிந்தராஜன் குரலில் [+எஸ் ஜானகி [பாடலில் டி எம் எஸ் குரலும் ஓங்கி ஒலிக்கிறது ]  . காவிரியின் பெருமை ஒவ்வொரு முறை கேட்டதும் இயற்கையை தலை வணங்கச்சொல்லும், அற்புதமான  தொகையறா வடிவம் கேட்டு மகிழ்வீர் இணைப்பு இதோ இதில் இன்றைய சூழலுக்கு தொகையறா மிக வலிமை சேர்க்கும் இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=BLKh-M__I_c

3 comments:

  1. குடகுமலையில் ஒரு சிறு குட்டையாய் தோன்றி அகண்ட காவிரியாய் தமிழகத்தை வாழவைக்கும் நதி வாழிய வாழியவே

    ReplyDelete
  2. அழகு கொஞ்சும் குடகு. சிறிய ஊற்றாக தொடங்கி எண்ணூறு கிலோமீட்டர் பயணித்து, வழியில் பல உபநதிகளை அறவணைத்து ஜீவநதியாக ஆர்ப்பரித்து எண்ணற்ற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் காவேரி.
    முதல் இந்திய படைத்தளபதி ஜெனரல் கரியப்பா குடகைச்சேர்ந்தவர் . இந்திய பாகிஸ்தான் போரில் நம் படைகளுக்கு தலைமையேற்று வெற்றி வாகை சூடினவர். அனுமதி கிடைந்திருந்தால் எதிரி படைகளை காஷ்மீரிலிருந்து முழுவதுமாக விரட்டியடித்திருப்பார். பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் என்ற பிராந்தியமே இருந்திருக்காது. முழு காக்ஷ்மீரும் இந்திய நாட்டிலேயே இருந்திருக்கும். எல்லை தீவிரவாதம் குறைந்திருக்கும். சில முக்கியமான பகுதிகளும் இந்திய கட்டுப்பாட்டில் வந்திருக்கும்.

    ReplyDelete
  3. Nice article about the scenic Coorg blessed with Natural beauty.

    ReplyDelete

ECLIPTA PROSTRATA [False Daisy]

  ECLIPTA PROSTRATA [False Daisy]  Tamil: Karisalanganni , Telugu :Galagara, Malayalam: Kayyonni, Kannada “Garagada soppu, Hindi: Bhingar...