LET US PERCEIVE THE SONG 65
பாடலை உணர்வோம்
–65
தத்தை நெஞ்சம்
-கண்ணதாசன்
, வி
ரா
, சுசீலா,
சதன்
இந்தப்பாடலுக்கு என்ன சொல்லி விவாதிப்பது என்ற தயக்கம் ஏற்படுவது ஒன்றே இப்பாடல் ஏனோ தானோ வகையினது அல்ல. இது ஒரு ஆழ்ந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டது என்பதையும் தாண்டி ஆழ்ந்து அணுகவேண்டிய ஒரு "முன்னும் பின்னும்' வந்ததில்லை வரப்போவதில்லை ரகம். 1964 ன் எண்ணற்ற நன் முத்துக்களில் இது தனக்குவமை இல்லாதது. எப்படி ?
சொற்களைப்பாருங்கள் அதிகம் பேசப்படாத 'தத்தை' ஆனால் அது பேசும். அதுதான் தத்தை. சரி தத்தை யாருடன் பேசும்? உற்றாரிடம் மட்டுமே பேசும். ஆனால் இங்கே தத்தையை துணைக்குவைத்து உரையாடலை துவக்குவது -மனித தத்தை. ஆம் உள்ளத்தில் உவகையும் குதூகலமும் பொங்க நாயகி துவங்க , பறவை தனது பங்குக்கு ஒத்திசைக்க பாடல் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது -எந்தக்காலத்தில் ? 1964ல் [62 ஆண்டுகளுக்கு முன்].
அன்று ஒலிப்பதிவுக்கருவிகள் எண்ணிக்கை, வசதி , நுணுக்க கட்டுப்பாடுகள் இல்லாத மிக சாதாரண ஒலிவாங்கியும் பதிவிடும் அமைப்புகளும் கொண்ட மோனோ டிராக் வகை ஒரு பாதை அமைப்பு மட்டுமே. இப்போது 18, 20 அதற்குமேல் பாதைகள் உள்ள அமைப்பு. ஆகவே கருவிகளை ஒலி குன்றாமல் துல்லியமாகப்பதிவிட முடியும். மோனோ டிராக்கில் . இவ்வளவு நேர்த்தியாக குரலும், கருவிகளும் கிளி யும் குழப்பமில்லாமல் ரசிக்க வைத்த இசை குழுவினர், ஒலி ப்பதிவாளர்கள் அனைவரும் பெருமைக்குரியவர்கள். சரி
கவிஞர் எதுகை மோனையில் பாடலை மிளிர வைத்துள்ளார். தத்தை , முத்தத்திலே , தித்தித்ததா போன்ற ஓசை வரிசையாக ஒலிக்க இது போன்ற வேறோர் பாடல் தேடினாலும் கிடைக்காது. அது ஒரு புறம் இருக்க அவ்வப்போது நாயகி கிளியை உற்சாகமாக 'கொத்தும் கிளி 'என்றழைக்க , கிளி மகிழ்ச்சியில் குரல் எழுப்புவது இசை அமைப்பில் ஒரு பெரிய உத்தி அதாவது அனைவரையும் பாடலுக்குள் ஈடுபடவைக்கும் ரசனை மிக்க கற்பனை..
எந்த இடத்துகிலும் இசை ஒலிகள் வெகு இயல்பாக உரசல் இன்றி பயணிப்பது பாடலின் சிறப்பு. இடை இசை அனைத்தும் இன்றும் கூட எளிதில் வாசித்துக்கடந்து போக இயலாத நுணுக்கமும் நளினமும் பின்னிப்பிணைந்த மகோன்னதம். கிளிக்கு குரல் கொடுத்து நீங்காப்புகழ் கொண்ட சதன் , [எந்த வகை இசைக்கும் முழு பங்கை வழங்கிய சுசீலா] மற்றும் ஒவ்வொரு பாடலுக்கும் முக்கிய கவனம் செலுத்தி இசை வழங்கிய மெல்லிசை மன்னர்கள் என அந்தக் கிளி உள்பட பலரும் மறைந்து விட்டாலும் பாடல் மட்டும் மங்காப்புகழுடன் முழங்கிக்கொண்டிருக்கிறது.
எம் எஸ் வி அடிக்கடி சொல்வார் "MORTAL MEN அண்ட் IMMORTAL MUSIC என்று. அப்படி அவர் படைத்த பல IMMORTAL MELODIES வகைகளில் இப்பாடல் வெகு வித்தியாசமானது.
திரைப்பாடல்கள்
எங்கே
போய்க்கொண்டிருக்கின்றன
என்ற
விடை
யில்லாத
கேள்வி
எழத்தான்
செய்கிறது.
பாடலை
மனம்
ஒன்றி
க்கேளுங்கள். இப்பாடலின்
எழிலில் லயித்த பலரும் ஏமாறுவது -இரண்டு நிலைகளில் . ஆம் ட்யூன் நம்மை மயக்கி இழுக்க
, நம் கவனத்தில் இருந்து தப்பிவிடுவது 1 கவிஞரின்
நேர்த்தியான சொல் வரிசை, அது மட்டுமா?
2 ஒவ்வொரு சொல்லும் அதன் சுவையை பாவம்
என்னும் உணர்வு கொண்டே தன்னை அடையாளம் காட்டும். அப்படி அமைந்த ட்யூன் பாவம் காட்டுவதை
கவனிக்க இயலாமல் நம்மை அமைதியின் களிப்பில்
அமிழ்த்திவிட நாம் காட்சியில் லயிக்கிறோம். பாடல் முடிந்ததும் நம்மை மீட்டுக்கொள்கிறோம்.
அப்படி ஓர் வசீகரம் இப்பாடலின் கட்டமைப்பு.
வயதானாலும் யவனம்
குன்றாத
தன்மையை
உணரலாம்.
பலமுறை
கேளுங்கள்
தமிழும்
இசையும்
நம்மை
உத்வேகம்
கொள்ள
வைக்கும்
.
இணைப்பு இதோ
. நன்றி ம வ
https://www.youtube.com/watch?v=Itoc9VIF1Aw&t=4s thaththai nernjam kd msv ps sadan
https://www.youtube.com/watch?v=xtWqIeaRcA4 QFR 705 .
நன்றி ம வ
தத்தை என்றால் கிளி என்று இப்பாடல் கேட்டுதான் தெரீந்தேன்
ReplyDeleteஎந்தா சாரே
Deleteநிங்ஙள்க்கு மலையாளம் அறியுல்லே பின்ன அவடே 'தத்த ' அன்னு பரஞ்ஞெங்ஙி ல் அதே parrot ஆணு அதெங்ஙன மிஸ் ஆயி ?
A song close to my heart for ages.. கவிதை, இசையின் தனித்துவம் இணையற்றது.
ReplyDeleteகேட்பவரை இளமையில் துள்ளவிடும். டோலக் நடை வேகம் என் போன்ற பயில்வோர்க்கு உச்ச பாடம்.. அதிலும் கடைசி சரணத்துக்கு முன் வரும் உருட்டல்... Only MSV can conceive and only Gopalakrishnan can play...
Sir
ReplyDeleteKindly post a write-up about C Gopalakrishnan, Pandit Visweswaran , Mandolin Raju and other legends from MSV GROUP. Readers who really read would stand the benefit. Regards