Thiru . KANNADAASAN
திரு. கண்ணதாசன்
திரு.கண்ணதாசனின் புதல்வர்களில், திரு அண்ணாதுரை யூ ட்யூப் நேயர்களுக்கு நல்ல தெரிந்த முகம். நல்ல தகவல்களை தங்கு தடையின்றி பேசக்கூடியவர்.
அவர் பேசுவதைக்கேட்டவர்களுக்கு நிச்சயம் ஒரு எண்ணம் மேலிடும். இவ்வளவு இயல்பாக பேசும் இவர் போன்ற மனிதர்களிடையே நான் ஜர்னலிசம் படித்தவன் என்று சொல்லிக்கொண்டு ஏதாவது ஒரு ஊடக அமைப்பின் செய்தி சேகரிப்பவர் என்று சொல்லிக்கொண்டு ஒரு தகவலை 3 வரிகளில் சொல்லும் முன் 'வந்து' 'இப்போ ' வந்துட்டு' 'அதாவது' பாத்தீங்கன்னா , வந்துட்டு, என்று ஒரு 30 முனகல் இல்லாமல் தமிழில் பேசும் நபர்கள் வெகு சிலரே. இளைஞர்கள் பலர். தாங்கள் படித்துவிட்டதாக உள்ளூர கொள்ளும் உவகைக்கு சற்றும் பொருந்தாத உளறல் நாயகர்கள். நல்லவேளை ஆங்கிலம் பேசுகிறேன் என்று கிளம்பவில்லை. நாமும்/ ஆங்கிலமும் பிழைத்தோம் -இறைவனுக்கு நன்றி.
திரு அண்ணாதுரை பல அரிய தகவல்களையும், வெவ்வேறு நிகழ்வுகளையும் தொகுத்து தருவது கேட்கவே மிகவும் மகிழ்ச்சியும் நிறைவும் தரவல்லது .அப்படி அவர் விளக்கும் ‘அத்தான் என் அத்தான்’ பாடல் மற்றும் சினிமா இயக்கம் பற்றிய சில விவரங்கள் மிக சுவையானவை
https://www.youtube.com/watch?v=I8aFB6sCZPs ATHAN EN ETHAN ANNADURAI KD –THE
SONG
பின்னணிப்பாடகி திருமதி வாணிஜெயராம் குறித்து திரு கண்ணதாசன் கொண்டிருந்த மதிப்பு குறித்தும் திரு அண்ணாதுரை விளக்குகிறார் . அதற்கான இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=K6GmSP1UUBY
VJ ANNADURAI KANNADAASAN -A RARE INFORMATION
நன்றி
அன்பன் ராமன்
--------------------------------------------
கல்லைத்தான் மண்ணைத் தான்பாடலில் இருந்து தோன்றறியதுதான் அத்தான் என் அத்தான் பாடல் என்று இன்றுதான் தெரியும்
ReplyDelete