Wednesday, May 27, 2026

LET US PERCEIVE THE SONG 67

 LET US PERCEIVE THE SONG 67            

பாடலை உணர்வோம் –67

கண்ணிலே நீர் எதற்கு ?  போலீஸ்காரன் மகள், 1963,                                                                                                       கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி , சீர்காழி கோவிந்தராஜன், எஸ் ஜானகி

 

அன்பர்களே

தமிழ் சினிமாவை சரித்திர ஆய்வு செய்ய நினைப்பவர்கள் நிச்சயம் இந்தப்பாடலை சகல புலன்களையும் முழுமையாக பயன்படுத்தி பல விவரங்களையும் உள்வாங்கி , எந்த உச்சத்தில் இருந்த சினிமா , கதை, கவிதை, இசை, காட்சி ஒளி அமைப்பு, இயக்கம் அனைத்தையும் அநேகமாக தொலைத்துவிட்டு அமோகமாக செலவு செய்து படத்தலைப்புகளில் கூட  தெளிவில்லாத குழப்பக்கூடாரமாய் அலங்கோலமாய் தெரிகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

அன்பர்கள் போல் 'அதான் எனக்கு தெரியுமேன்ற நுனிப்புல் முறைகள் சுத்தமாக வேலைக்கு ஆகாது.  

சரி, இப்பாடல் சொல்வது என்ன ?   அபலைகளே--- அறிமுகம் இல்லாத நட்புகளை வளர்த்து நிலை                      குலையாதீர் என்ற எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலிக்கிறது

அண்ணன் [முத்துராமன்] குரலுக்கு பி பி ஸ்ரீனிவாஸ் பிற பாடல்களில் குரல் கொடுத்திருந்தாலும் இங்கே சீர்காழியை என் களம் இறக்கினார் மன்னர்எச்சரிக்கை மணி அல்லவா?  இப்பாடல் ஓங்கி ஒலித்து ஊனை உருக்கிய கயமையை வெளிச்சம் போடத்தான் வேறெதற்கு?  

அது அசரீரிக்குரல்  வழியே  ஒலித்தால் தான் சோகமும் கம்பீரமும் தோன்றும்.

இப்பாடலின் சிறப்பு யாதெனில்

தங்கை வஞ்சிக்கப்பட்டுவிட்டதை கணித்த அண்ணன் உள்ளம் குமுற தொடங்குகிறான்

கண்ணிலே நீர் எதற்கு ?  தங்கை சொல்லும் பதில் 'காலமெல்லாம் அழுவதற்கு'

நெஞ்சிலேநினைவெதற்கு?                                                  பதில் வஞ்சகரைமறப்பதற்கு                                                                               [நினைப்பவர் மறக்கவும் வேண்டிவரும் என்ற பூடக விளக்கம் பெண் துயரின் உச்ச கொடுமை ]  

பல்லவி க்கு பின்

இன்பமெனும் மொழி எதற்கு?

பதில்: துன்பத்தில் மிதப்பவர்க்கு

துன்பமனெனும் சொல் எதற்கு?

பதில் : உள்ளமென்பதுள்ளவர்க்கு 

பல்லவி

கையிலே வளை வெதற்கு?

பதில் :    காதலியை அணைப்பதற்கு

காலிலே நடை எதற்கு?

பதில்: காதலித்து பிரிவதற்கு

பாசம் எனும் சொல் எதற்கு?

பதில் :காத்திருந்து துடிப்பதற்கு

ஆசையெனும் மொழி எதற்கு?

பதில்: அன்றாடம் சாவதற்கு

பல்லவி

பூவிலே தேன் எதற்கு?

பதில்: வண்டு வந்து சுவைப்பதற்கு

வண்டுக்கு சிறகெதற்கு?

பதில்: உண்டபின்பு பறப்பதற்கு

பல்லவி

இருமுறை பல்லவி இருவரியின் குரலிலும் ஒலி க்க  காட்சி முடிவுறுகிறது.

ஆண் குரலில் கோபம் கலந்த சோகமும், பெண் பதிலில் ஏமாற்றத்தின் விரக்தியும் குமுற பாடவைத்த ட்யூன் அமைப்பு.

இது போன்ற பாடல்களில் பாவம் முதன்மை பெறுவது மிக அவசியம். எனவே இசை உணர்வுகளுக்கு உதவி, உடன் வந்தால் போதும் என்ற அளவிலேயே வெகு சிறப்பாக கட்டமனைத்துள்ளனர் மெல்லிசை மன்னர்கள். இது ஒரு சோகம் ததும்பும் சொல்லாடல் தான் ஆனாலும் இங்கு பல்லவியிலேயே மன்னர் 'ஹோய் ' முத்திரையை சேர்த்து ஆனால் அதிலும் சோகம் இழையோட பாட வைத்த வித்தகம் அவருக்கே உரியது. இத்தனை தசாப்தங்கள் கடந்தும் எந்த இசை அமைப்பாளராவது 'ஹோய்' என்று எட்டிப்பிடிக்கவாவது முயன்றதுண்டா ? முயன்றால் சறுக்கல் தான். மதுரை மொழியில் சொன்னால் சத்தியமா சறுக்கல் தேங்.

இவ்வகைக்காட்சிகளுக்கு உயிர் தருவது ஒளிப்பதிவு அதிலும் முக பாவங்களை தவறாமல் மிளிரவைப்பது ஒரு உன்னத கலை..   வின்சென்ட்-சுந்தரம் இக்காட்சிக்கு வெகுவாக வலு சேர்த்திருப்பதைக்காணலாம்.  இருப்பதே தெரியாமல் பூரணமாக வியாபித்துள்ளாரே இயக்குனர் ஸ்ரீதர் -அவர்தான் ஸ்ரீதர்.

இருப்படி பல ஜாம்பவான்கள் உருவாக்கிய காட்சி சோடை போகுமா? முகபாவங்களில் முத்துராமனும் விஜயகுமாரியும் சரியான எல்லையில் நின்று பாவங்களை தந்துள்ளனர்.பலமுறை கேளுங்கள், ஒவ்வொரு அம்சத்தையும் ஆழ்ந்து உணருங்கள் முன்னோர்கள் உழைத்த உழைப்பின் மகத்துவம் புரியும் /. பாடலுக்கு இணைப்பு இதோ  

https://www.youtube.com/watch?v=njLdGD__hb4 kannile neer edharku PK M KD V R SG, SJ 1963-

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG 67

  LET US PERCEIVE THE SONG 67              பாடலை உணர்வோம் –67 கண்ணிலே நீர் எதற்கு ?   போலீஸ்காரன் மகள் , 1963,                    ...