Tuesday, May 26, 2026

AN IMPORTANT SETTLEMENT

 AN  IMPORTANT  SETTLEMENT

முக்கிய தீர்வு

எப்போதும் போல் இன்றையபதிவிலும் நமது இறையாண்மை மற்றும் நலன் சார்ந்த துல்லியமான நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதை மேஜர் திரு மதன் குமார் விளக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் விவரங்கள் அச்சுறுத்தும் வகையானவை எனினும், தீமைகள் இருக்கும் இடங்களுக்கே சென்றோ செல்லாமலோ, சொல்லாமலே அழிக்கும் உத்தி அமைதியாக ஈடேறி அதன்மூலம் தீர்வு காணப்படுவது என்பது ஒரு நூதன அணுகுமுறை.

. இவை இன்றைய தேவை என்னும் அளவிற்கு குற்றம் புரிவோர் மலிந்து விட்டனர் என்பதையும் விட பல ஊடுருவல் நகர்வுகளுக்கு உதவ பல அமைப்புகள் இயங்கிவருவதால், பாதுகாப்பு மேற்கொள்வோரின் பணி  கடுமையாவதும் தேவையற்ற விமரிசனங்களுக்கு உள்ளாவதையும் முற்றாகத்தவிர்த்திட  , அந்த அமைப்புகளுக்கு இருக்கும் வழி அந்த கொடூரர்களை  அவனவன் இருக்கும் பகுதியிலேயே பகலில் களைவது என்பதே.

இது மிக நுட்பமான /ஆபத்து மிகுந்த நடை முறை தான். ஆனால் இதற்கென சிறப்பு அணுகுமுறைகளை வகுத்து திடீரென்று ஆளைக்காணோம் என ஒரு நிலையை ஏற்படுத்தும் சூழலில் குற்றவாளிகளுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த அந்தந்தநாட்டு அமைப்புகள் பெரும் குரல் எழுப்பவோ பன்னாட்டு அமைதி நிறுவனங்களிலோ முறையிட முயலாமல் அரசினர் பங்களிப்புடன் ஈமக்கிரியைகள் செய்யப்படுவதிலிருந்தே இந்த அமைதிவிரோத அணுகுமுறை சில அரசுகளா லேயே செயல் வடிவம் பெறுவதை புரிந்து கொள்ளலாம்.

இவ்வகை நிகழ்வு குறித்து மேஜர் திரு மதன் குமார் கூறும் விவரங்களை நுணுக்கமாக புரிந்துகொள்ள வீடியோ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=opdWDPmkOe0 imp settlement Maj. Madan Kumar

                   ***********************

 

No comments:

Post a Comment

BAMBOO

  BAMBOO  [ BAMBUSA ARUNDINACEA =GIGANTICHOLA MAXIMA ] Bamboo is a grass known for its gregarious growth [90 cm a day =3 feet a day] It is...