Sunday, May 24, 2026

MADURAI-11

MADURAI-11

 மதுரை-11

சித்திரைத்திருவிழா

சித்திரைத்திருவிழாவில் அன்னை மீனாட்சி பங்குபெறும் நிகழ்வுகள் அனைத்தும் மதுரை நகரிலேயே நிகழ்வதை அறிவோம். முத்தாய்ப்பாக சித்ராபௌர்ணமி தினத்தில் சுந்தரராஜ பெருமாள் [அழகர்கள்ளழகர் ]       வைகை ஆற்றின் வடக்கு பகுதியில் ஆழ்வார்புரம் பகுதியில் நீரில் இறங்குவது [அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வாக]  மதுரை வட்டாரத்தில் ஆண்டுதோறும் நிகழும் பெரும்விழா.

ஆனால் இந்நிகழ்வு அழகர் கோயில் என்னும் திருமாலிருஞ்சோலை  அழகர் மலை கோயிலில் 10 தினங்களுக்கு முன் 'பவித்ரோத்சவம்' என்று துவங்கி இறுதியில் மதுரையில் இருந்து அழகர் தனது இருப்பிடம் திரும்பி வரும்  வரை நடைபெறும் நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கியது.

இந்த 10 நாள் நிகழ்வில் முதல் மூன்று தினங்கள் அழகர்கோயில் வளாகத்திலேயே புறப்பாடு அலங்காரம் என நடைபெறும். நான்காம் நாள் அழகர் கள்வன் வேடம் தரித்து பல்லக்கில் மதுரை  நோக்கி  பயணித்து போகப்போக எண்ணற்ற பக்தர்கள் புடைசூழ ஆங்காங்கே மண்டகப்படிகளை ஏற்றுக்கொண்டு பௌர்ணமிக்கு முதல் நாள், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சந்நிதானத்திற்கு எழுந்தருள அதன் பின் இரவு அங்கேயே எழுந்தருளி மறுநாள் அதிகாலையில்  

தங்கக்குதிரையில் ஆரோகணித்து மிகுந்த ஜாஜ்வல்யமாக வைகை நதியில் இறங்கி சில மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்து, அவர்களின் காணிக்கை பூஜை ,கைங்கரியங்களைப்பெற்று கரை ஓரமாகவே பயணித்து ராமராயர் மண்டபம் சென்றைடைதல்   முற்பகலில் நிறைவேறும்.

பவித்ரோத்ஸவம் குறித்த பல முக்கிய தகவல்களை அழகர்கோயில் திரு. பாலாஜி பட்டர் விடியோபதிவாக வழங்கியுள்ளார்.. நல்ல பயனுள்ள விவரங்கள் உள்ளன.  

கேட்கக்கேட்க வியப்பு தரும் விழாவாக சித்ராபௌர்ணமி விளங்குகிறது. திரு பாலாஜி பட்டர் விளக்கிய முக்கிய கருத்து .’கள்ளழகர் பக்தன் இருப்பிடம் தேடி சென்று அருள் பாலிக்கிறார்’ . எனவே தான், வேறெந்த கோயிலிலும் இல்லாத நடை முறையாக இந்த விழாவில் பக்தர்கள் தரும் பிரசாதம் [அவரவர் தயாரித்து தரும் கேசரி, பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை] எதுவாயினும் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. பொதுவாக எல்லா தெய்வங்களுக்கும் கோயில் மடப்பள்ளி தயாரிப்புகள் மட்டுமே நிவேதனம் செய்வர் . இந்த விழாவில் அழகர் எந்த அன்பு தயாரிப்பையும் மனமுவந்து  ஏற்றுக்கொள்வதாக பாலாஜி பட்டர் தெளிவாக குறிப்பிடுகிறார் . மக்களும் இறைவனும் நெருங்கி உறவாடும் விழாதான் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். மேலும் இவ்விழாவில் இறைவன் மீது நீர்பாய்ச்சும் நிகழ்வு குறித்து பல முக்கிய விவரங்களை பேசுகிறார் பாலாஜி பட்டர் அவர்கள். 

அன்றிரவில் தசாவதார சேவை நிகழும் . உண்மையில் 7 அவதாரங்கள் மட்டுமே அலங்கரிக்கப்படுவன. 3 உக்கிர அவதாரங்கள் தவிர்க்கப்படுகின்றன. இது தொடர்பான பல அரிய தகவல்கள் வீடியோ விளக்கமாக திரு பாலாஜி பட்டர்  விரிவாக விளக்குகிறார், எண்ணற்ற தகவல் களஞ்சியம் இந்த வீடியோ. நன்கு கேட்டு பயன் பெறுவீர்

நன்றி  அன்பன்

வீடியோ

https://www.youtube.com/watch?v=Fq_5omDyC18 PAVITHROTHSAVAM –BAALAJI BHATTAR

                                                               *************

2 comments:

  1. மதுரையின் சிறப்பே கள்ளழகர் மதுரை விஜயம் தான்

    ReplyDelete
  2. அருமையான விளக்கம். பல ஐயங்களுக்கு விளக்கம் கிடைத்தது.
    என்றும் திகட்டாத மதுரை அமுதம் படைத்ததர்க்கு நன்றி.

    ReplyDelete

BAMBOO

  BAMBOO  [ BAMBUSA ARUNDINACEA =GIGANTICHOLA MAXIMA ] Bamboo is a grass known for its gregarious growth [90 cm a day =3 feet a day] It is...