MADURAI- 9
மதுரை
-9
என்னது மீண்டும் மதுரையா? ஐயோ என்ற அலறல் ஒலிக்கிறது. ஏன்அலற வேண்டும்.? வேறு ஏதேனும் ஊர் குறித்து நீங்கள் கூட எழுதலாம் . எழுதுவீர்களா? எழுதினால் தெரியும் ஏன் மண்டை வரள்கிறதென்று. . துடிப்பான மனமும் தீவிர அலசி ஆராயும் திறனும் கொண்ட நமது வாசகர்கள் மண்டை வரள முயல்வார்களா என்ன?. மாட்டார்கள் ஆனால் வேகமாக யார் யாருக்கு மண்டை வறண்டுவிட்டது என்று பட்டியல் தயாரித்து வைத்திருப்பார்கள்.
சரி
போகட்டும்.
மதுரையின் எண்ணற்ற பெருமைகளின் மையப்புள்ளி மீனாக்ஷி அம்மன் ஆலயமும் அதை சார்ந்த எண்ணற்ற சமய சமூக ஒருங்கிணைப்பான கோயில் திருவிழாக்களும் என்றால் முற்றிலும் உண்மை.
அது மட்டுமல்ல ஆண்டு முழுவதும் சுவாமி புறப்பாடும், ஊர்வலங்களும் மற்றும் நவராத்திரி கொலு நிகழ்ச்சிகளும் மாறி மாறி மதுரையில் நிகழ்ந்துகொண்டே இருப்பதும் இந்த தூங்கா நகரின் மற்றுமோர் சிறப்பு. இதற்கு அடையாளம் என்ன என்றல் மதுரையின் [ஒரிஜினல்] அமைப்பே சாட்சி. மதுரையின் சரியான மையப்புள்ளியே
மீனாட்சி
அம்மன்
ஆலயம்
தான்..
4 கோபுர
வாயில்கள்
வழியே
உள்ளே
நுழைந்ததும்
இருக்கும்
பிராகாரங்கள்
ஆடி
வீதிகள்
என்பன.
அவை
ஒவ்வொன்றும்அமைந்த திசையின்
அடிப்படையில் கீழ ஆடி, தெற்கு ஆடி , மேல ஆடி , வடக்கு ஆடி வீதி என்றே பெயரிடப்பட்டுள்ளன . அதே போல கோபுரங்களுக்கு வெளியே அமை ந்த நான்கும்
கீழ, தெற்கு , மேல மற்றும் வடக்கு சித்திரை வீதிகள். இவை ஒவ்வொன்றும் கோயில் சார்ந்த மற்றும் சுற்றுலா பயணிகள் சார்ந்த வகை தங்குமிடங்கள், பூஜை பொருட்கள், உணவகங்கள் போன்ற வசதிகள் கொண்டவை. இவற்றில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
இதற்கு
அடுத்த
வெளிப்பகுதி
நான்கு
திசைகளுக்கான
ஆவணி
வீதிகள்
[அவை
ஆவணி
மூல
வீதிகள்]
என்றழைக்கப்படுகின்றன. . இதற்கடுத்த வெளிச்சுற்றுகள் நான்கு திசைகளுக்கான மாசி வீதிகள், இவற்றைத்தாண்டி வெளியே அமைந்தவை நான்கு திசைகளுக்கான வெளி வீதிகள். மதுரைக்கு ரயிலில் வருபவர்கள் கால் பதிப்பது மேல வெளி வீதி என்னும் WEST VELI STREET பகுதியில் தான். இங்கிருந்து நேராக மீனாக்ஷி அம்மன் கோயில் நோக்கி செல்லும் பாதை தான் டவுன் ஹால் ரோடு , அதன் தொடர்ச்சியாக அமைந்த மேலகோபுரத்தெரு
. இந்த
கோயிலுக்கு
வெளியே
அமைந்த
அனைத்து
பகுதிகளிலும்
எப்போதும்
சாரி
சாரியாக
ஜனத்திரள்
ஜே
ஜே
என்று
இருந்து
கொண்டே
இருக்கும்
-தூங்கா நகர் அல்லவா? முக்கியத தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயரால் வழங்குவது ஏன் எனில் கோயில் தொடர்பான சுவாமி புறப்பாடு
அந்தந்த
மாதங்களில்
அந்தந்த
பெயர்கொண்ட
வீதிகளில்
நடை
பெறும்.
. ஒரு
விதி
விலக்கு சித்திரை திருவிழா மாசி வீதிகளில் நடப்பது தான். இதற்கொரு வரலாறு உண்டு.
இந்த
வரலாறு
குறித்த
தகவல்களை
அறியும்
முன்
அன்னை
மீனாக்ஷி
அம்மனின்
ஆலய
பகுதிகள்
குறித்த
வீடியோ
இணைப்பு
கீழே
உள்ளது.
அவற்றை
தரிசித்து
வாருங்கள்.
பின்னர்
அடுத்த
பதிவில்
தொடர்வோம்.
நன்றி
ம
வ
அன்பன்
வீடியோ
இணைப்பு
https://www.youtube.com/watch?v=NqsGoZ7eDDs MEENAKSHI TEMPLE KEY SPOTS
https://www.youtube.com/watch?v=JA-Hy7ON0yk MEENAKSHI TEMPLE
-------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment