Wednesday, May 6, 2026

Mr R SAMPATH

 Mr R SAMPATH

திரு ஆர் சம்பத்

இவரது பெயரை பல திரைப்பட டைட்டில் களில் பார்த்திருப்பீர்கள் என்றெண்ணுகிறேன். பலர் மலங்க மலங்க விழிப்பதை இப்போதே என்னால் ஊகிக்கமுடிகிறது. ஏன் எனில் கையில் வரும் தகவல்களையே GLANCE விடும் நமக்கு நீண்ட நெடிய டைட்டிலில் ஒரு பெயர் கேட்டால் என்ன விடை கிடைக்கும்? பேந்த பேந்த என்பதே விடை.

திரு சம்பத் அவர்கள் நீண்ட காலம் வி எம் நிறுவனத்தின் ஒலிப்பதிவு கூடத்தில் சௌண்ட் என்ஜினீயர் . துவக்கத்தில் ஒரு உதவியாளராக நுழைந்து, படிப்படியாக உயர்ந்து தலைமை இடத்திற்கு வந்து எண்ணற்ற படங்களுக்கு வசனம், பாடல் பதிவு பின்னணி இசை என ஒவ்வொரு நிலையிலும் திறம்பட செயல் பட்டவர். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் மறைந்தார். மிகவும் எளிய மனிதர் ஆனால் அயராத உழைப்பு. அவர் போன்ற கலைஞர்களின் தகவல் மூலம் பல அறிய தகவல்களை  உணர முடிகிறது. பல இக்கட்டான தருணங்களில் இரவு பகல் பாராமல் அயர்வின்றி [பாவம் பெரும் உயர்வும் இன்றி ] இசை அமைப்பாளர்களும் , இசைக்கலைஞர்களும்  ஆத்ம மகிழ்வுக்கு உழைத்த தகவல்களையும், பிற பல செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார் திரு சம்பத். மிகக்குறைந்த வசதிகளுடன் ஒரே ஒரு மைக்கில் பாடல் ரெக்கார்டிங் செய்த நிலையை விளக்குகிறார். தமிழ் சினிமாவின் பொற்கால நினைவுகள் இவை.

அதே போல 'பேசுவது கிளியா' பாடலில் வரும் வயலின் ஒலி மற்றும் துல்லியம் குறித்து அவர் தரும் பாராட்டு பெருமைக்குரியது. இரண்டு வீடியோ இணைப்புகள் உள்ளன சில தகவல்கள் இரண்டிலும் வரும் ஆனால் இரண்டுமே ஆழ்ந்து உணர்ந்து ரசிக்க உகந்தவை.

 https://www.youtube.com/watch?v=MmDegqOdF5o SAMPATH RECORDING OF MSV

https://www.youtube.com/watch?v=nECc9-IHq4Y SAMPATH ON RECORDING

இந்த இணைப்பு பேசுவது கிளியா பாடல் எத்தனை வித 'ஹோய்கள்' விறுவிறுப்பு நிறைந்த பாடல்

https://www.youtube.com/watch?v=XkaWTdY4SAo&list=RDXkaWTdY4SAo&start_radio=1 qfr pesuvadhu kiliyaa

https://www.youtube.com/watch?v=uA6TltAngiM&list=RDzX5Nt2nxLnE&index=18 WATCH VIOLINS

 

No comments:

Post a Comment

ORCHESTRATION

  ORCHESTRATION [ MSV BRAND]   ஆர்கெஸ்ட்ரேஷன்   [ = ஒலிகளின் கட்டமைப்பு ]       [மெல்லிசை மன்னரின் பாணி   ] ஐயோ இது என்ன புதிய ...