A LABYRINTH OF CONFUSION
இடியாப்ப சிக்கல்
இரு தேச அமைப்புகளுடன் நல்லுறவு பேண , மிகவும் வலுவான நடுநிலை வகுப்பும், ஆபத்துக்காலத்தில் நன்றி மறவாத செயல்பாடும் சர்வதேச குழப்பங்களில் தவறான செயல் திட்டங்கள் மூலம் நல்லுறவை தொலைத்துவிடா மல் மிகவும் கவனமாக அடி எடுத்து வைப்பது மொத்தமாக DIPLOMACY என்ற ராஜதந்திரம் எனப்படுவது.
அதை மேற்கொள்ள ஓரு நாட்டின் வெளியுறவுத்துறை எண்ணற்ற சமன்பாடுகளை கணக்கில் கொண்டு எந்த அளவுக்கு பிற நாட்டவருடன் கை குலுக்க வேண்டும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு நடந்து கொள்வதுடன் வருங்காலத்தில் என்னென்ன தேவைகளுக்கு பிறருடன் நல்லிணக்கம் கொள்ளவேண்டும் என்று உணர்தல் அவசியம்.
இவற்றை திட்டமிட அதற்கென அமைந்த செயலர்கள் [SECRETARIES] இருக்கிறார்கள். ஆனால், இறுதி நிலையில் சந்திப்புகளை சுமுகமாக நிறைவேற்ற அரசியல் வாதிகள் [அமைச்சர்கள்] முன்னணி பெறுவது வழக்கம்.
எனவே அமைச்சர் என்ற உயர் நிலைக்கு ஒருவர் வரவேண்டுமெனில் அந்த நாட்டின் முக்கியஸ்தர்கள் அனைவரிலும் சிறப்பான திறமையும் சட்டென புரிந்துகொள்ளும் திறனும் மிக மிக தேவை. இவற்றின் பலதரப்பட்ட பரிமாணங்களை புரிந்து கொள்ள எதுவாக ஒரு விவரமான பதிவினை மேஜர் திரு மதன்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். ஆழ்ந்து கவனித்து தகவல்களை அறிந்து கொள்ள இணைப்பு இதோ .
hhttps://www.youtube.com/watch?v=KslDSU2WxWk MAJOR Madan kumar
இந்த இணைப்பில் உள்ள இரண்டாவது விடியோவும் மிக முக்கியமானது. இதுவும் இன்றைய சூழலில் இந்தியா பல்வேறு சூழல்களை எதிர்கொள்ளவும் எதிர்க்கவும் பலதரப்பட்ட முன்னெடுப்புகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. இதை வெகுவாக அலசுகிறார் மேஜர் மதன் குமார் அவர்கள். நன்கு கவனித்து புரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் உள்ளன. இணைப்பு இதோ
நன்றி ம வ .
https://www.youtube.com/watch?v=jpxtPtWyxf8 Maj.Madan kumar
Very clear narrations by the Major.
ReplyDeleteIndia is fortunate to have had a very efficient Minister for External Affairs and Security Advisor. They are boon to our P.M. With these stalwarts India stands high and above in the world today.