Sunday, May 3, 2026

AUTOBIOGRAPHY [Equus asinus] - 2

 AUTOBIOGRAPHY  [Equus asinus] - 2

என்  சுயசரிதை -2

ஹலோ நான் கழுதை பேசுகிறேன்..

Blog  எழுதும் திரு சொன்னது சரிதான் , எவரும் எதையும் தெரிவிக்கக்காணோம்  வந்திருந்த ஒரே பதிவிலும்  ஆழ்ந்த விளக்கம் இல்லை. அது அல்ல கேள்வி. பலருக்கும் தகவல் தரப்பட்டாலும் பெரிதும் பலன் இல்லை சரி பல நல்ல தலைப்புகளுக்கே இதுதான் நிலை எனில் 'கிடக்கிறது கழுதை ' என்று பெரிய மனிதர்கள் நினைப்பதில் வியப்பில்லை.

ஆனால் சொன்ன கருத்தின் ஆழம்

 'இங்கு படிப்பது என்பது ' பொழுது கழிப்பதற்கே ' வேறு மனம் செலுத்தி உள்வாங்கி நினைவில் நிறுத்துதல் என்பதெல்லாம் கனவு மட்டும் அல்ல கனவில் வரும் புகை போன்றதே 'என்று எனக்கு சற்று முன் விளக்கி விட்டு நீ பொதி சுமக்கப்போகும் நேரம் வந்துவிடப்போகிறது அதனால் உன் விளக்கத்தை சொல்லிவிட்டு கிளம்பு என்றார் .

எங்கள் வாழ்வு உங்கள் கையில். ஆம் மனிதர்கள் இருக்கும் இடங்களில் தான் எங்களின் வாழ்க்கை இயங்குகிறது. சில ஆண்டுகள் முன் வரை சிற்றூர்களில் குதிரை வண்டிகள் இயங்கின. இப்போது அவையும் இல்லை . ஆனால் ஆறு குளம் , ஓடை நீர் நிலை பகுதிகளில் துணி துவைப்பது [சலவைத்தொழில் ] நடக்கிறது. அவ்விடங்களில் அழுக்குத்துணிகளை மூட்டையில் கட்டி முதுகில் வைப்பர் எங்கள் முதலாளி. இரவில் எங்கு சுற்றினாலும் உறங்கினாலும் காலை 7 மணிக்கு அவரவர் தலைவரின் வீட்ட ருகில் போ ய் நிற்போம் . பொதி ஏற்றும் வரை எங்கும் நகரவே மாட்டோம்.

 [யாரோ ஒருவர் கழுதை வேலை செய்யாமல் ஏமாற்றும் என்று கருத்து பதிவிட்டிருந்தாராம். அது தவறு] 

பொதி ஏற்றியபின் எங்கள் தலைவர் துணி துவைக்கும் பகுதிக்கு நாங்களே சென்று நின்று கொள்வோம் 8.மணிக்கு பின் அவரும் அவரது மனைவியாரும் வந்ததும் பொதியை எடுத்தபின் நாங்கள் வேறிடம் செல்வோம்.

ஆற்றங்கரை ஓரத்தில் ஆங்காங்கே வளரும் புற்களை உண்போம். சில வகை நல்ல தாவரங்களை [ கீரைகளை ] உண்போம்.. வேறு தும்பை , வகை களை தொடமாட்டோம். வேறு வழி இல்லை எனில் சுவரொட்டிகளை பிரித்து மேய்ந்துவிடுவோம் . எங்கள் வயிற்றில் செல்லுலோலைடிக் [cellulolytic ]  வகை பாக்டீரியாக்கள் இருப்பதால் எங்களால் பேப்பர், வைக்கோல் போன்ற பொருட்களை ஜீரணித்து வாழ முடியும். இதே திறமை மாடுகளுக்கும் உண்டு. ஆனால் மாடுகள் கூட மனிதரை முட்டித்தள்ள முயலும். நாங்கள் எவர்க்கும் துன்பம் தருவதில்லை. குதிரைகள் போன்ற பொதுவான உருவம் கொண்டிருந்தாலும் அவை மனிதரை பழிவாங்க தயாராய் தருணம் பார்த்தபடி இருக்கும். அதுவும் புல் , கொள்ளு , கொண்டைக்கடலை, பிண்ணாக்கு என்று பலவகை தீனி உண்டாலும் வளர்ப்பவருக்கு துரோகம் செய்ய தயங்காதவை குதிரைகள்.  

மட்டுமல்ல குதிரைகளை கண்ணை மறைக்காமல் வண்டியில் பூட்ட முடியாது. அப்படியும் வண்டியோடு சாய்த்து அனைவரையும் கீழே தள்ளிவிடும் குணம் கொண்டது குதிரையினம் 

நாங்கள் எந்த நிலையிலும் மனிதர்களை தாக்க நினைப்பதில்லை. ஆனால் ஈவு இரக்கமின்றி சில ஏமாந்த கழுதைகளின் வாலில் பட்டாசு கட்டி வெடிப்பார்கள், உயர்ந்த அறிவுகொண்டோர் செயல் இது.

எங்களால் தாக்க முடியும். எங்களது தற்காப்பு என்பது பின்னங்கால்களால் எட்டி உதைப்பதுதான். அறிவில் சான்றோரே அறிந்து கொள்ளுங்கள் அப்படி உதை பட்டால் தீர்க்கவொண்ணாத காயம் ஏற்பட்டு நீங்கள் படாத பாடு படுவீர்கள். எனவே நாங்கள் பொறுமை காத்து அமைதியாய் இருக்கிறோம். தப்பு கணக்கு போடாதீர்கள்.

எங்களது பின்னங்கால் உதை என்பது எங்கள் [ கழுதை/குதிரை ] இன தழைப்புக்கும்  அடிப்படை என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள். பெண் உறுப்பினர்களை துரத்தி வரும் ஆண் எதுவாயினும் பெண் உறுப்பினர் விரும்பினால் அன்றி எதுவும் நிறைவேறாது.  . பெண் உறுப்பினர் விரும்பினால் பின்னா ல் தொடரும் ஆண் [கழுதை/  குதிரை எதுவாயினும்] கழுத்தும் நெஞ்சும் இணையும் பகுதியில் எட்டி உதை விடும். இப்படி 4 அல்லது 5 முறை  உதை வாங்கினால் தான் ஆணின் உணர்வுகள் தூண்டப்படும் அதன் பின்னரே முறையான உறவு நிகழும். பெண் உறுப்பினர் உதைத்தால் தான் ஆண் உணர்வும்  செயலும் விரைவு படும். இல்லையேல் ஊர்வலம் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான். குதிரைகளை இனப்பெருக்கம் செய்விப்போர் ஆண் குதிரைகளுக்கு மருந்து மாத்திரை ஊசி மூலம் உணர்வுகளைத்தூண்டி நினைத்த போது  குட்டிகளை உருவாக்குகின்றனர். இயற்கை முறையில் நிகழ்வுக்கு ஆண்டுக்கு ஒரு முறை என்பது தட்ப வெப்ப நிலை மூலம் நிகழ்வது அதற்கும் பெண் உறுப்பினர் பின்னங்காலால் எட்டி உதைத்தால் தான் வாய்ப்பு உண்டு.அந்த உதைக்கு அவ்வளவு வீரியம் என்பதை தெரிவிக்கிறேன்.  .  அதே சமயத்தில் உடல் வெப்பம் தணிப்பதற்கே எங்களுக்கு நீண்ட காது மடல்கள் உள்ளன. அவற்றை அசைத்து அசைத்து உடல் வெப்பத்தை குறைத்துக்கொள்ள இயலும்.

இவை மட்டுமல்ல நாங்கள் எவ்வளவோ பெருமை கொள்ளலாம்..

1 நாங்கள் திருடி தின்பதில்லை 2 இயற்கையில் விளையும் புல்  கீரை  இவை கிடைத்தால் போதும் இல்லையேல் இருக்கவே இருக்கு காகிதம் . இந்த          இருக்கவே இருக்கு நிலைப்பாடு எங்கள் வாழ்வுக்கும் ஆசிரியப்பணிக்குமே பெரும்பாலும் எழுதப்படாத விதி.. போகட்டும்

 நாங்கள் சுத்தமான நீரை மட்டுமே பருகுவோம், கண்ட அழுக்கு  நீரையோ , கெட்டுப்போனஉணவுகளையோ தீண்ட மாட்டோம். இறைவன் எங்களுக்கு வெகு சிறப்பாக புரிந்து கொள்ளும் 'வாசனை திறனை' வாரி வழங்கியுள்ளார். அதைக்கொண்டே நாங்கள் நல்ல நீர் என்று உணருகிறோம் . எந்த வித உணவையும் தின்று விட்டு வயிற்றுப்போக்கு வந்து அலறும் மனிதர்கள் எண்களைப்பார்த்து ஏளனம் பேசுகிறீர்கள் "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று

கர்நாடக   மக்கள் "கழுதைக்கு தெரியுமா கஸ்தூரி வாசனை " என்று கிண்டல் செய்கிறீர்கள். கற்பூரமும் கஸ்தூரியும் உணவுப்பொருளாக இருந்தால் தானே அவற்றை முகர்ந்து பார்த்து நல்லது கெட்டது பகுத்துப்பார்க்க? தேவைக்கு அறிய வேண்டிய நன்மை தீமைகளையே உங்களால் இனம் பிரிக்க முடியாத போதும் எங்களை கேலி பேசுகிறீர்கள். இந்த  சந்தர்ப்பத்தில்சொல்லிக்  கொள்ளாவிடில் நீங்கள்  கழுதை கற்பூரம் கஸ்தூரி என்று எதுகை மோனை வேடிக்கை செய்வீர்கள்.           எனவே வீணாக எங்கள் மீது கோபம் கொள்ளாதீர்கள்

எங்களால் 'குரல் வழி' தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்

சுமார் மூன்று கிலோ மீட்டர் எல்லைக்குள் எங்கள் குரல் பரவும் , அதன் மூலம் தகவல் சொல்லிக்கொள்வோம் அவை பெரும்பாலும் எங்கள் பாதுகாப்பு பற்றியே இருக்கும். மிகுந்த மகிழ்ச்சி அல்லது கோபத்தில் மட்டுமே நாங்கள்  குரல் எழுப்புவோம் அப்போது வெகு வேகமாக ஓடுவோம்.

 பன்றி , நாய்களை சிறைபிடிக்கும் மாநகராட்சி எப்போதாவது எங்களை தேடியதாக வரலாறு உண்டா  ? மக்களிடையே சுற்றித்திரிந்தாலும் நாங்கள் தான் மரியாதைக்குரியவர்களே என்பதை உணர்வீர் .

மேலும் எழுத்தாளர் திரு ஆர் கே நாராயண் பதிவிட்டுள்ள சிலதகவல்களை இங்கே தருகிறேன் [இவையும்    தெரிவித்தவையே எங்கே போ ய் திரு ஆர் கே நாராயண் எழுத்துகளை தேடுவது [பேப்பரை பார்த்தவுடன் வாய் வேலையை துவக்கி விடும்]  எடுத்த எடுப்பிலேயே கழுதைகள் மிகவும் வியத்தகு பொறுமை சாலிகள் என்கிறார் RKN .[Donkey is an animal of monumental patience ]

1 கழுதைகள்  மிகவும் நேர்மையான [sincere ] பிராணிகள், கடமையை தாங்களே செய்யும் பண்புடையன.

2 அவற்றை தேடுவது எளிது [எங்கேனும் பாழடைந்த சுவர் இருப்பின் அங்கேயே அவை நிற்கும் [.They always stand near abandoned walls and stand parallel to each other but facing oppoisite directions.] தண்டவாளங்கள் போல் இரட்டையாகவே நிற்கும் ஆனால் அவை எதிரும் புதிரும் என்ற அமைப்பில் நிற்பது கழுதைகளின் ப்ரத்தியேக சிறப்பு.

3 உச்சி வெய்யிலில் நின்று  கொண்டு தனது நிழலையே வைத்த கண் வாங்காமல் பார்த்து மகிழும் பரம ரசிகர்கள் கழுதைகள். வேறெதுவும் இடர்ப்பாடு இல்லாத வரை அங்கேயே நின்று கடிகாரப்படி இயங்கும் விலங்கு கழுதைதான். [ Donkeys enjoy sheepishly watching their shadows in the hot noon Sun].

4 நாம் நினைப்பதை விட சுத்தமான பழக்கங்கள் கொண்டவை கழுதைகள் என்று வருணித்துள்ளார் 

முக்கிய தகவல்

இன்றைய நாளில் ஒரு லிட்டர் 800/- முதல் 1000 /-ரூபாய் வரை விற்பனை ஆவது கழுதைப் பால் என்பது உங்களுக்கு தெரியுமா? 

இன்றும் பல ஊர்களில் கழுதைப்பால் கிடைக்காதா என அலையும் மனிதர்கள் தமிழ்நாட்டில் நிறையபேர் உள்ளனர்.

மதுரையில் ஆங்காங்கே கழுதைப்பால் விற்பனை இல்லங்கள் உள்ளன. சிறு குழந்தைகளுக்கு தேவையான 1 சங்கு பால் 100/- ரூ . கழுதைப்பாலுக்கு நோய் எதிர்ப்பு மற்றும் மாந்தம், வலிப்பு, காமாலை , சொறி சிரங்கு போன்றவற்றை குணமாக்கும் வலிமை உண்டு. இதனை அறிந்த சிலர் கழுதைகளை ஊர் ஊராக ஒட்டி சென்று  பால் விற்று மாதம் 50, 00/0- முதல் 60, 000/- ரூ வரை சம்பாதிக்கிறார்கள். இது குறித்த வீடியோ இப்பதிவின் இறுதியில் இடம் பெறுகிறது. இவ்வளவு எங்கள் பெருமைகளை பேச வாய்ப்பு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.

ஒரு வேண்டுகோள்

எங்கள் மீது உள்ள வெறுப்பில் உங்கள் குழந்தைகளை விளையாட்டாகக்கூட 'கழுதை' என்று வசையாக சொல்லாதீர்கள். அறிவில் குறைந்ததனால் தான் குழந்தை -நாங்களும் குழந்தை கள் போன்றே தீமை நினைக்காதவர்கள். ஆனால் பொருத்தமில்லாமல் குழந்தைகளை வசை பாட 'கழுதை'; என்கிறீர்கள்.

யார் கழுதை? புரியாமல் பேசும் மனிதர்களா ? அறியாமல் தவறு செய்யும் குழந்தைகளா ? மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள். நீங்கள் தான் பேச மாட்டீர்களே -மனசாட்சி பேசினால் தான் உண்டு .     

என்றும் நன்றியுடன் கழுதை

கழுதைப்பால் குறித்த வீடியோ

https://www.youtube.com/watch?v=hkZZ5ScwSTM  Donkey’s  milk across TN

PS    "பாடாண்டிணை"   என்பது என்ன என்று விளக்கி விட்டு கையோடு ஒரு 10 வரியில் 'கழுதை’  குறித்து   ஒரு குறிப்பு வரையுங்கள் பார்ப்போம்' .

இந்த விவரம்  22-04-26 ல் வந்த பதிவில் இடம் பெற்றது.                                         “மூச்வாய் திறப்போமா ? மாட்டோம் மாட்டவே மாட்டோம் தேர்தல் , வெய்யில், அழகர் ஆற்றில் இறங்கினார், எங்கள் ஊரில் மழை என்று எத்தனையோ காரணங்கள் .சரி 'பாடாண்டிணை ' என்ன ஆயிற்று ?

 

No comments:

Post a Comment

AUTOBIOGRAPHY [Equus asinus] - 2

  AUTOBIOGRAPHY   [ Equus asinus ] - 2 என்   சுயசரிதை -2 ஹலோ நான் கழுதை பேசுகிறேன் .. Blog   எழுதும் திரு ம வ சொன்னது சரிதான்...