Sunday, June 7, 2026

MADURAI -13

 MADURAI -13

மதுரை 13                                                            

அழகர் கோயில்

முன்னரே இத்தலம் குறித்த பல தகவல்களை கேள்வியுற்ற நாம், மேலும் சில விவரங்களை இப்பதிவில் காண்போம்.. இவற்றை திரு பாலாஜி பட்டர்  விளக்குகிறார்

கேரள அரசன் ஒருவன்,அழகரை தனது ராஜ்ஜியத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டதாக முன்னர் அறிந்தோம். அதன் விளக்கம் வருமாறு . அழகரை கவர்ந்து செல்வது என்பது அவரது தெய்வீக பராக்கிரமங்களையும்,  தேஜஸ் என்னும் வசீகரம், அருள் பாலிக்கும் உயர்ந்த தன்மை இவற்றை தங்கள் வசமாக்கி அவற்றை சிறையெடுப்பது போல் கவர்ந்து சென்று , தங்கள் ராஜ்ஜியத்தில் வேறொரு தெய்வ வடிவத்திற்க்கு இப்பண்புகளை ஏற்றி  அந்த தெய்வவடிவம் பெரும் பராக்கிரம வரப்ராஸிதியாக உருவாக்கி தங்களது நாட்டில் சுபிக்ஷம் நிலைத்திடசெய்வது என்பது திட்டம்

இதற்கென்றே 18 பெரும் மாந்திரீகர்கள் அழகர்கோயில் குடி புகுந்தனர் என்று அறிந்தோம். அவர்கள் பிறர் கண்ணில் தெரியாமல் உலவிட விசேஷ மை ஒன்றினை உடலில் பூசிக்கொண்டு காற்று போல் உலவி வந்தனராம் .அதன் பின்புலம் வருமாறு.

அதென்ன கேரளாவில் மாந்திரீகம் இவ்வளவு பிரசித்தம் ? 

4 வேதங்களில் அதர்வண வேதம் விசேஷமானது. அது கேரளத்தில் வெகு சிறப்பாக பின்பற்றப்படுகிறது . அவ்வேதத்தில் மனிதனின் அனைத்துப்பருவங்கள், வளர்ச்சி, அவற்றை நிர்வகிப்பது, கட்டுப்படுத்துவது, மனநிலையில் பேதைமை உண்டாக்கி வேறொருவர் கட்டளைக்கு உட்படுத்துவது , ஏவல் என்னும் கட்டுப்பாட்டு முறை, முடக்கிப்போடுதல், பொம்மை போல நடமாடவைத்தல் போன்ற பல மாந்திரீகக்குறிப்புகள் அந்த வேதத்தில் விளக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

அத்துணை வித்தைகளிலும் கரைகண்ட 18 மாந்திரீர்கள் அழகரின் பராக்கிரமங்களை கவர்ந்து செல்ல பெரும் முன்னேற்பாடுகளுடன் செயல் பட்டனராம். அதற்கு அவர்கள் பின்பற்றவேண்டிய நியம, நிஷ்டை விரத பூஜை, மந்த்ர தந்த்ர உச்சாடன காலம் 48 நாட்கள்.

அதில் சுமார் 40 நாட்கள் கடந்தநிலையில் சுவாமி அழகர் , பிரசனையின் தீவிரத்தை அறிந்து, சில பக்தர்கள் கனவில் தோன்றி விவரங்களை உணர்த்தினாராம்.   இதற்கென மாற்று உத்திகள் செய்து , முறையான மூலிகைகளைக்கொண்டு புகையைக்கிளப்பி, அந்தப்புகையில் மாந்திரீகர்களின் உடலில் இருந்த பூச்சு 'மை'  கரைந்து வழிந்தோட அவர்கள் 18 பேரும் பிடிபட்டனர் . பின்னர் நடந்த 18 படிகளின் விவரம் நாம் அறிவோம்.

சுமார் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் வரை நீதிமன்றங்கள் மூலம் சில சாட்சிகள் விசாரணை 18ம் படி நுழை வாயில் வழியே நடைபெற்றதுண்டாம். உரிய கட்டணத்தை நீதி மன்றம் மூலம் கோயிலுக்கு செலுத்தினால் குறிப்பிட்ட        தினத்தில் 18ம் படி நுழைவாயில் நீதிபதிகள் முன்னிலையில் சாட்சி தனது விவரங்களை தெரிவித்து நுழைவாயிலை கடந்து கோயில் பகுதிக்கு வரவேண்டுமாம்

அதாவது குளித்து ஈர உடையுடன் 18 படியில் சாட்சி சொல்லி நடக்கவேண்டுமாம். பொய் சொன்னால் 3 படி தாண்டும் முன் ரத்தம் கக்கி உயிர் துறப்பாராம் . உண்மை சாட்சியம் எனில் எந்த இன்னலும் ஏற்படாதாம்.  .

  அவ்வளவு பெருமை கொண்ட காக்கும் கடவுள் 18ம் படி கருப்பண சாமி என்பது வரலாறு.  வருடத்தில் 2 தினங்கள் மட்டுமே இந்த நடை திறக்கப்படுகிறது. இந்த விவரங்கள் கொண்ட 2  வீடியோ இதோ. இரண்டிலும் கோயில் குறித்த விவரங்கள் உள்ளன. பார்த்து அறிந்து கொள்வீர். 

https://www.youtube.com/watch?v=RpK65naW2H8 18m padi karuppanasaami  Balaji Bhattar

https://www.youtube.com/watch?v=OyJWGIVVhA8 Thirumaalirumsolai

நன்றி

அன்பன்

2 comments:

  1. கரூப்பண்ணசாமியைப்பார்பதற்கே இப்போதெல்லாம் வரிசையில் செல்ல வேண்டிய நிலை

    ReplyDelete
  2. திருமாலிருஞ்சோலை மற்றும் கூடலழகர் கோவில்களின் ஸ்தலபுராணங்களையும், இதுவரை நான் அறிந்திராத பல தகவல்களையும் தொகுத்து அளித்ததற்கு நன்றி. முன்னாட்களில் கோவில் நடை சாத்தியபின் சாவியை கருப்பசாமி கதவடியிலேயே ஒப்படைப்பார்கள் என்று சொல்வதுண்டு.

    ReplyDelete

RUTA GRAVEOLENS

  RUTA GRAVEOLENS [The Rue plant] [Arruda or The Herb of Grace] Tam:   arudam [naagadhaali] Mal: Aruta, Telugu: Sadapa, Hindi: Sadab Kan:...