Wednesday, June 24, 2026

Understanding musical frames

  Understanding musical frames  

Squeezing   a life is MSV’S NOTE

இசையின் வடிவ அமைப்பை புரிந்துகொள்ள 

-ஊனை உருக்கும் இசைக்குறியீடுகள் மற்றும் சிறப்புக் குறியீடுகள்

நேற்று [24 ஜூன்] திரு எம் எஸ் வி அவர்களின்  98 வது பிறந்த தினம்

திரைப்பாடல்களின் வெற்றிக்கு உதவ 3  அடிப்படை தேவைகள்

1 பொருத்தமான சொல்லாடலில் யாப்பு

2 காட்சியின் உணர்வுகளுக்கு உதவும் சொற்கட்டுகள் [பெரும்பாலும் 2 அல்லது 3 எழுத்து சொற்கள் வாய்த்தால் பாடல்களை வடிவமைப்பதில் சில அனுகூலங்கள் அமையும்]

3 உரிய ராக அமைப்பில் அமரும் சொல் அமைப்பு கையாள்வதற்கு மனம் லயிக்கும் பிற காரணிகளை அடுக்கலாம் .

ஆனால் இந்த முதல் மூன்றும் பாதி வெற்றிக்கு வித்திடுவன என்பது எவர்க்கும் புரியும்.

இவை ஒருபுறம் இருப்பினும் பாடல்,  பாவம் என்ற உணர்வினை சரியாக வெளிப்படுத்துவது , சொல் அல்லது ராகத்தினால் மட்டுமே வாய்த்துவிடுவதல்ல. மாறாக குறிப்பிட்ட இடங்களில் தொடவேண்டிய ஸ்தாயி என்ற உயரம் அல்லது அமிழ்ந்து முழுகும் ஆழம் போன்ற வீழ்ச்சி  மற்றும் வெடித்துக்கொப்பளிக்கும் ஆற்றாமை போன்ற குரல் நடுக்கம் இவை சோகத்தின் வலுவான பிடியை உணர்த்தவல்லவை. நேர்மாறாக,  குதூகல தருணங்களில் சிரிப்பும் மகிழ்ச்சியும் பிணைந்த உச்சரிப்பு , குறும்பு,, சொல்லின் இறுதி எழுத்தை பட்டும் படாமலும் பாடுவது  போன்ற செயல் முறைகள் பாடலின் தன்மையை முதல் முறை கேட்கும் போதே தவறாமல் அடையாளம் காட்டி விடும் அணுகு முறைகள்.

இவ்வனைத்திற்கும் பொறுப்பு இசை அமைப்பாளர் [கள் ] மட்டுமே. எனவே பாடல் பயிற்சியின் போது நிச்சயம் உயிரை எடுத்துவிடுவார்கள் இசை அமைப்பாளர்கள்.

ஆழ்ந்து கவனம் செலுத்தும் இசை அமைப்பாளர் முதலில் தன உயிரையே உரசிப்பார்க்கும் பாவத்தை ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படும் வண்ணம் ஏற்ற இறக்கங்களோடு பாடிப்பார்த்து சரியான ஒரு வடிவத்தை பிடிப்பார். தேவைப்பட்டால் ஸ்வரங்களை குறித்து வைப்பார் அல்லது நேரடி ஹார்மோனிய த்வனிகளை டேப்பில் பதிந்து கொள்வார் அல்லது உதவியாளர்களை சரியாக குறிப்பெடுத்துக்கொள்ள           ஏதுவாக பலமுறை பாடியோ, ஹார்மோனியம் வாசித்தோ அல்லது பாடிக்கொண்டே ஹார்மோனியம் வாசித்தோ செம்மையாக அந்த 'நோட்' கள் .   இசைக்குழுவினர் மனங்களில் ஆழமாக பதிந்து விடும். படி செய்து விடுவார். இந்த வழிமுறை அந்நாளைய வழிமுறை.. இன்றைய அணுகுமுறைகள் பற்றி நான் அறியேன் .

இவ்விடத்தில் ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும் . அது தான் உதவியாளர்களின்  பங்கு. . ஒவ்வொரு நோட் எனும் குறியீடையும் புகைப்படக்கருவிபோல் மனதில்  பதித்துக்கொள்வார்கள்.  பாடகர்களுக்கோ, இசைக்கலைஞர் களுக்கோ தடுமாற்றம் இல்லாமல் உடனே பாடிக்காட்டுவார்கள் அல்லது அந்த ஸ்வரங்களை நினைவு படுத்துவார்கள்.              திரு எம் எஸ் வி கால கட்டத்தில் அவரின் உதவியாளர்கள்    திரு ஜி எஸ் மணி, திரு  கோவர்தனம் , திரு ஹென்றி டேனியல். பின்னர் கோவர்தனம் ஜோசப் கிருஷ்ணா.

 . திரு கேவி எம் அவர்களுக்கு உற்ற உறுதுணை திரு புகழேந்தி அவர்கள். இவர்கள் அனைவரும்  ஒரு எழுத்து பிசகாமல் மீண்டும் மீண்டும் சொல்லித்தரும் வித்தகர்கள்.தவறு நிகழ அனுமதிக்கவே மாட்டார்கள் என்ற பெரும் புகழ் கொண்டவர்கள்.   இந்த மாதிரி ஒரு உதவியாளராக பல இசை அமைப்பாளர்களிடம் பணியாற்றிய            திரு எம் எஸ் விக்கு பலவகை இசை தோரணங்கள் சர்வ சகஜமாக உடம்பில் ஊறிப்போனதில் வியப்பென்ன? 

இப்படி பலமுறை ஒத்திகை பார்த்து ப்பார்த்து மெருகேற்றி இறுதியாக பதிவு செய்யப்படும் பாடல் எப்படி சோடை போகும்? அதனால் தான் அன்றைய பாடல் பலமுறை கேட்டாலும் அலுப்போ சலிப்போ தோன்றாமல் இருப்பது மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் அதே பழைய குதூகலம் நம்மை பற்றிக்கொள்கிறதே அதுதான் அந்த மகத்தான உழைப்பு நமக்கு வழங்கிய சர்வகால பொக்கிஷம்..

சரி இந்த விளக்கங்களை பாடலின் அமைப்பைக்கொண்டு விளக்கினால் மேலும் விளங்கும். ஆனால் 'நீர் யானை' அணுகுமுறைகள் நமது முயற்சிக்கு உதவாது. எனவே ஒவ்வொரு புள்ளியும், குறியீடும் நுணுக்கமாகப்பின்பற்றினால் இசை அமைப்பின் மகோன்னதம் ஓரளவுக்கேனும் புலப்படும். எனது விவாத மையப்புள்ளியை விளக்கும் விதமாக 'படகோட்டி' [1964] வாலி  எழுதிய 'என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன் போனாண்டி'  [பி சுசீலா]   பாடலை   தேர்ந்து QFR பதிவாக வழங்குகிறேன் இது அவர்களின் ஆரம்பகால தயாரிப்பு என்பதால் இசைக்கருவிகள் இல்லாமல் வெறும் குரல் மட்டுமே பதிவிட்டுள்ளனர். . இசை இல்லாமல் கேட்பதால் பாடுபவரின் திறன் தெரிகிறது . அதுவே கூட இசையின் பங்களிப்பின் தேவை/ வலிமை இரண்டையும் உணர்த்துவதை காணலாம். ஆனால் விவாதம் இன்னும் விரிவாக தொடர உள்ளது . மேலும் தகவல்கள் தெரிந்த பின் பாவம் எப்படி செதுக்கப்படுகிறது என்று உணரமுடியும் அதுவரை எந்த புள்ளியையும் தவற விடாமல் பாருங்கள் மீண்டும் தொடர்வோம் 

https://www.youtube.com/watch?v=BchQc8cucmY  QFR

'என்னை எடுத்து தன்னைக்கொடுத்து

நன்றி           அன்பன் 

3 comments:

  1. இசையுலகின் ஜாம்பவான்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்

    ReplyDelete
  2. சுசீலா அம்மாவின் இனிய குரலால் ஒரு பெண்ணின் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும், வாலியின் பாடல் வரிகளால் உணர்ச்சி ததும்ப இசைவழியே வெளிக்கொணர்ந்த இரட்டையர்களின் மற்றுமொரு சாதனை படைப்பு. QRFன் வர்ணனை பாடலின் சிறப்பை பறைசாற்றுகின்றது. பாடகியும் பிரமாதம்.

    ReplyDelete
  3. Prof.. Your elaboration about how a song is felt and taken by yesteryear MD (MSV in particular), how a musical interpretation is conceived for the lyrics, Bhaavam, Storyline etc by Him and taught to Singers, musicians until He gets what is in He has in.mind is amazing. How MSV gave His life to bring out every song is a explained so well by you.
    The song you.have taken to explain this bery apt. Ananthu's demonstration about the song is extraordimary and I.would have listened to this 100 times for the feel with which he talks. Amazing number...

    ReplyDelete

CENTELLA ASIATICA

  CENTELLA ASIATICA    [Asian penywort / Indian penny wort] Tamil : Vallaarai, Hindi: Manduka parni, Tel: Saraswathiaaku Mal: Kodangal Kan...