Sunday, July 26, 2026

MADURAI -20

 MADURAI -20

மதுரை -20      திருப்பரங்குன்றம்

மதுரையின் புற நகர் பகுதியாகிய திருப்பரங்குன்றம் விசேஷ முருகஸ்தலம் ஆகும். முதல் படை வீடென பெருமை கொண்டது. அப்பகுதியில் அமைந்த மலைக்குன்றின் வடக்கு முகத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் ஒரு. குடைவரைக்கோயில் .

ஆம் கோயிலின் முன் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இருந்து பல கட்டங்களாக மேல்நோக்கி நடந்து பயணிக்க எதுவாக படிக்கட்டுகளும் , மண்டபங்களும் அமைக்கப்பட்டு இக்கோயில் வெவ்வேறு உயரங்களில் அமைந்த மண்டபங்கள், இறை சன்னதிகள் என்று கடந்து கடந்து மேலே செல்ல எதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாந் நிலப்பகுதியில் இருந்து இடப்புறத்தில் [கிழக்கில்] இருப்பது புண்ணிய தீர்த்தம் சரவணப்பொய்கை. இப்பகுதியில் இருந்து கடந்து படிக்கட்டுகள் வழியே மேலேறிச்செல்ல இறுதியில் அமைந்த சன்னிதானம் முருகன் இருப்பிடம்.

அருகில்    பரங்கிரி நாதர் [சிவன்], துர்கை, விநாயகர் மற்றும் தெய்வானை திருவுருவங்களும் இப்பீடத்தில் அமைந்துள்ளன. மேலும் இங்கு நடந்தேறும் பால் அபிஷேகம் முருகப்பெருமானின் வேல் ஆயுதத்திற்கே. அநேகமாக ஒவ்வொரு நாளும் பல பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுவது வழக்கம். வைகாசி விசாகம் கிருத்திகை போன்ற நாட்களில் கட்டுக்கடங்காத பக்தர் குழுமி தரிசனம் செய்வது இத்தலவிசேஷம் .

பல முக்கிய தல ங்களைப்போல  அழகு குத்திக்கொள்ளுதல் காவடி எடுத்தல், முடி காணிக்கைசெலுத்துதல் போன்ற அனைத்து வழிபாடு முறைகளும் உண்டு. கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற சன்னதிகள் உண்டு  எனவே ஆங்காங்கே பிரார்த்தனை நிறைவேற்றுதல் நிகழ்ந்தேறிய வண்ணம் இருக்கும். கோயில் குறித்த வீடியோ இணைப்புகள் இதோ

https://www.youtube.com/watch?v=FQbnGTtd7DI    TPK

https://www.youtube.com/watch?v=rpdHTqvLXio      TPK VIDEO TAMIL

 

 

5 comments:

  1. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

    ReplyDelete
  2. ஆஆ , இது பெங்களூர் ரமணி அம்மாள் பாடல் அல்லவா?

    ReplyDelete
  3. அருமையான ஆன்மிக காணொளி சுற்றுலா. தமிழகத்துக்கே உரித்தான கலைவண்ண திருத்தெய்வங்களின் சிற்பங்கள்,பிரம்மாண்டமான கட்டமைப்பு, புராண ஐதீக விளக்கங்கள்.
    அந்தநாள் ஞாபகங்கள்:
    திருக்கார்த்திகைகளில் குமிழும் பக்தர்களுடன் முருக தரிசனம்.
    மலைமேல் நடந்துசென்று சிவ தரிசனம். சமணர்கள் வாழ்ந்த குகைகள்.
    அருகிலுள்ள திருநகரிலிருந்து அதிகாலை நடுக்கும் குளிரிலும் சைக்கிளில் தெங்கா கம்மா கரையோரமாக மதுரை கல்லூரி பள்ளிக்கு N C C பரேடுக்கு சென்றது.
    திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திலிருந்து ஹார்விபட்டி தொழிலாளர்களுக்கான ரயிலில் பள்ளி சென்றது.
    அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை.
    அங்கு பணிபுரிந்த மருத்துவரிடமே மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான மருத்துவ சான்றிதழ் பெற்றது.(அம்மருத்துவர் பின்னாளில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர்).
    மீண்டும் அந்த இனிய மதுரை வாழ்க்கை வராதா என்று ஏங்குகிறேன்.

    ReplyDelete
  4. மதுரையின் நினைவு அங்கு வாழ்ந்து பின்னர் புலம் பெயர்ந்த எவரையும் தொடர்ந்து ஏக்கம் கொள்ள வைக்கும், எளிய வாழ்க்கை. இன்றும் மகிழ்வு தரும் விலை வாசி எண்ணற்ற உணவகங்கள், சுக்குமல்லி காபி, 1/-ரூபாய் 15 பைசாவுக்கு பால்கனியில் இருந்தபடி சினிமா , டெல்லிவாலா , சுவீட்லண்ட் , ஐஸ்லான்ட் , கோபு அய்யங்கார், ராஜேந்திரா காபி , விசாலம் காபி, , தள்ளு வண்டி நொறுக்குத்தீனி என ஒரு நாள் பொழுதை 5 ரூபாயில் வாழ உதவிய மீனாட்சிபட்டணம் அல்லவா ? எவ்வாறு மறக்க இயலும்? மதுரைக்கல்லூரியின் அந்நாளைய பேராசிரியர்கள் மாபெரும் ஆளுமைகள் இனி எங்கு தேடினும் கிடைக்குமா?

    ReplyDelete
  5. முற்றிலும் உண்மை.

    ReplyDelete

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...