Wednesday, July 1, 2026

Understanding musical frames-2

 Understanding musical frames-2    

Squeezing life is MSV’S NOTE

இசையின் வடிவ அமைப்பை புரிந்துகொள்ள 

-ஊனை உருக்கும் இசைக்குறியீடுகள்-2

'என்னை எடுத்து தன்னைக்கொடுத்து-2

சென்ற பதிவில்  வாலியின் கவிதையாய் மலர்ந்த "என்னை எடுத்து"  பாடலை குரல் வடிவில் கேட்டிருப்பீர்கள்.  ஆனால் திரைப்பாடல்  எனில் அது தனது முழு வடிவும் தோன்ற அதை நாம் கண்டு/கேட்க வாய்ப்பு அமைந்தால் நமது அனுபவமே வேறல்லவா?  ஏன் எனில், இசை தரும் ஆதரவு, மற்றும் ஒலி மூலம் பாவம் உச்சம் பெற கிடைக்கும் நமது மன லயிப்பு  மற்றும் இரண்டு வினாடிகளே ஒலித்தாலும் அந்த நுண் ஒலி கிளர்த்தெழவைக்கும் பச்சாதாபம், பரிவு போன்ற மன நிலையில் பாடலும்  ரசிகனும் சேர்ந்து இயங்கும் ஒன்றிவிட்ட தன்மை இவற்றை குரல் மட்டுமே வழங்கிட இயலாது. அந்த நுணுக்கமான                ஒலிக்கல வையே .பின்னிசை என்ற பெயரில் பாடலை சுமந்து செல்லும் உத்தி.. சொல்லப்போனால் அது பாடலோடு பின்னிப்பிணையும்போது தான் நாம் பாடலுக்கு அடிமை ஆகிறோம்.. அதுபோன்ற  பிணைப்பே இல்லாத ஒலிகளை சிலர் ஆஹா ஓஹோ என்று சிலாகிக்கும்போது இவர்கள் நல்ல இசை அமைப்புகளை அறிந்தவரில்லை என்று புரிகிறது.. போகட்டும். இன்றைய பதிவில் திரையில் மிளிர்ந்த வடிவில் பாடலைக்கேட்டு பாடலில் பூரணத்துவம் என்பது என்ன என்று உணரலாம்.

நமது அடிப்படைத்தவறு

நமக்கு பாடல் தெரியும், படம் தெரியும் இடம்பெற்ற கலைஞர்கள் தெரியும் .இவை மட்டுமே பாடல் ஆகிவிடாது ஆனால் நாம் இங்கு 'அதான் எனக்கு தெரியுமே' என்று கடந்து போகவே மனம் முற்படும் . எனது பரிந்துரை வேறு வகையானது. ஆமாம்  அதான் எனக்கு தெரியுமே அதான் எனக்கு தெரியுமே  என்று சொல்லிக்கொண்டே எப்போதும் அறிந்த காட்சியையே மீண்டும்மீண்டும்  பார்ப்பது என்ற செயலால் , பாடலை அக்கு வேறு ஆணி வேறு என்று உள்ளார்ந்த சூட்சுமங்களை ரசிக்காமல் கடந்து போவதை  தவிர்க்கும் வழிமுறைகளை பின் பற்றுங்கள். அதற்காகவே இந்த ஒரு பாடலை 3 வெவ்வேறு வடிவங்களில் தனித்தனி பதிவுகளாக கேட்கும் வகையில் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் உணர்த்த முயல்கிறேன். இன்றைய பதிவு திரை வடிவம்

இதற்கும் முந்தைய பதிவிற்கும் உள்ள 'தாக்க பலன்'’ எப்படி இருக்கிறது உணருங்கள் வேண்டுமானால் இன்றைய பதிவை முதலில் கேட்டு விட்டு , சென்ற பதிவை இன்று கேளுங்கள் இரண்டும் இரு வேறு உலகம் என்பது தெளிவாகும். . இதையும் கடந்து இன்னும் விளக்க விவாதங்கள் மீதம் இருப்பதால் இதே பாடல் அடுத்த பதிவிலும் தொடரும். இணைப்புகள் கீழே

நாம் அறிந்த திரை வடிவம்

https://www.youtube.com/watch?v=v1U8cKAC40ov ennau eduththu val vr ps

பாடல் -வெறும் குரல் வடிவம்

2 https://www.youtube.com/watch?v=BchQc8cucmY  QFR

இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு அல்லது மூன்று முறை ஒரே நேரத்திலோ /இடைவெளிகொடுத்தோ கேட்டுப்பாருங்கள்  வெறும் மேனிக்கும் ஆடை அணிந்த நிலைக்கும் உள்ள வேறு பாடு பளிச்சிடும் 

நன்றி           அன்பன்  

No comments:

Post a Comment

Understanding musical frames-2

 U nderstanding musical frames-2      Squeezing life is MSV’S NOTE இசையின் வடிவ அமைப்பை புரிந்துகொள்ள   -ஊனை உருக்கும் இசைக்குறியீட...