Tuesday, June 30, 2026

A MULTI-PRONGED APPROACH

 A MULTI-PRONGED APPROACH

ஒரு பன்முறை அணுகுமுறை

இது என்ன தலைப்பு ? எதைப்பற்றியது ? என்றெண்ணும் அன்பர்களே இன்றைய பதிவு  இந்திய இறையாண்மை / பாதுகாப்பு அல்லது யுத்த தளவாடங்களில் மேம்பாடு  போன்றவை தானே இடம் பெறும் ? ஆம் அதுவே தான் . வெவ்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருப்பதால் ஒவ் வொன்றாக நாம் பதிவிடுவதற்குள் சுவையும் சூடும் அடங்கி பழைய செய்தியாகிவிடும் . எனவே நமது நாட்டின் தற்கால தேவை மற்றும் நிகழ்வுகளை ஒரு சிறிய பதிவின் மூலமே வெளியிட்டால் கால விரயம் இன்றி விரைந்து தகவல் பரிமாற்றம் நிகழட்டும் என்பதே இம்முயற்சி.  அன்பர்கள் மூன்று தகவல்களையும் தொடர்புபடுத்தி மிக எளிதில் புரியுந்துகொள்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இவற்றில் முதலாவதாக நாம் பார்ப்பது பாதுகாப்புத்துறையில் நமது போர்க்கருவிகள் குறிப்பாக ஏவுகணைகள் ரேடார்கள் ஒருங்கிணைப்பு எதிரி ராடார்களை குருடாக்குவது அல்லது முடமாக்குவது அல்லது மூளையை நசுக்கி பலனற்றுப்போகச்செய்வது போன்ற நுண் செயல் அமைப்புகளில் இந்திய விஞ்ஞான தொழில் நுட்பம் பலரையும் பதறவைத்து  கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. நம்மையோ நமது நட்பையுமோ விரும்பாதோர் ஒருபுறம் கதிகலங்க , இதுவே வேறு சில நாட்டினருக்கு பெரிதும் மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டும் முன்னேற்றமாக பரிணமித்துள்ளது. இதுபோன்ற யுத்தக்கருவிகளை ஐரோப்பா அமெரிக்கா , பிரான்ஸ் போன்ற இடங்களிலிருந்து வாங்குவதை விட நமது கருவிகளின் குறைந்தமுதலீடும் நிறைந்த பலனும் பெரிதும் ஈர்ப்பையும் பாராட்டையும் பெற்று அதன் மூலம் அந்நியச்செலாவணி மற்றும் சந்தையில் இந்தியா விஸ்வரூபம் கொண்டெழுந்ததோடு எவரையும் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தும் 'பெரியண்ணன்' மனோபாவம் சிறிதும் இல்லாத ஒரு அமைதி பூமி என்பதிலும்   பலருக்கும் நம் மீது மதிப்பும் பொறாமையும் இயல்பாக ஏற்பட்டுள்ளதை உணரலாம். போர்க்கருவி சந்தையில் விற்பனையை மட்டும் எண்ணாமல் இக்கருவிகள் யார் யாரிடம் இருந்தால் நமது பாதுகாப்புக்கு உகந்ததாக அமையும் என்பதையும் ஆய்ந்து செயல் படுவதால் இந்தியா குறித்து தப்புக்கணக்கு போட்டு இருந்தநாடுகள் இப்போது வழிதெரியாமல் விழி பிதுங்கி நிற்கக்காணலாம் . இந்த யுத்த தளவாட விற்பனை குறித்த சில விவரங்களை திரு நிஞ்சன் அவர்கள் தனக்கே உரிய முறையில் இயல்பாக விளக்குகிறார். கேட்டு உணரலாம்.

நாம் சந்திப்பது பலவகை எதிர்ப்புகள். கொள்கைரீதியான  குற்ற சுமத்தல்கள், குறுகிய அரசியல் நோக்கில் எழுப்பப்படும் ஆதாரமற்ற புகார்கள், அவற்றை ஊதிப்பெரிதாக்கும் சுயநலமிகள் மற்றும் அந்நிய சக்திகளின் தேவையை நிறைவேற்றி வாழ்வு தேடும் உள்நாட்டு திசைபிறழ்ந்தோர் , தீவிரவாத அணுகுமுறைகளில் அப்பாவிமக்களைக்கொன்று அதன்மூலம் இந்தியா ஒரு திறனற்ற நாடு என்று பரப்ப முயல்வது . எனவே தீவிர வாதிகளை தேடிப்பிடித்து ஒழிப்பது ஒரு கலையாகவே இப்போது நிகழ்வதை காணலாம். இவற்றின் மூலம் இந்தியாவிடம் மோதிவிட்டு வெளிநாட்டில் ஒளிந்து கொள்ளும் கோழை களுக்கு இன்னதென்றே தெரியாத திடீர் முடிவு ஏற்படுவது பெரும் வடிவெடுத்து அவர்களும் அவர்தம் தகப்பன்சாமி [GOD FATHER] களும் நிலை குலைந்து சிதறுண்டு துடிப்பதை இரு வீடியோக்களில் உள்ள தகவல்களை புரிந்து கொள்வதன் மூலம் காணலாம், தெளிவு கிடைக்கும்  . வீடியோ இணைப்புகள் இதோ .

https://www.youtube.com/watch?v=7dOk_ZQ7LH8 brahmos, akash  in UAE

https://www.youtube.com/watch?v=u9j0hbr1aXY disappeareing faces kolahalas

https://www.youtube.com/watch?v=tdrBqaagooc HUNT  MMK

நன்றி அன்பன்   

*******************************************************************

No comments:

Post a Comment

A MULTI-PRONGED APPROACH

  A MULTI-PRONGED APPROACH ஒரு பன்முறை அணுகுமுறை இது என்ன தலைப்பு ? எதைப்பற்றியது ? என்றெண்ணும் அன்பர்களே இன்றைய பதிவு   இந்தி...