Friday, October 2, 2026

MELLISAI AARAADHANAI

 MELLISAI AARAADHANAI            NYM and TEAM 26-01-25

மெல்லிசை ஆராதனை

[-திரு எம் எஸ் வி அவர்களின் இசை சேவைக்கு அன்பர்களின் காணிக்கை].

மெல்லிசை ஆராதனை எனும் நிகழ்வு கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் நடைபெறும் ஒரு இசை அஞ்சலி.

 இதனை முன்னின்று அமைத்து ஒத்திகைகள் பார்த்து நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துவோர் திரு என் ஒய் முரளி குடும்பத்தினர். பல அன்பர்களின் உதவியும் பங்களிப்பும் இணைய,  இந்நிகழ்ச்சி நடந்துவருகிறது. திருவையாறு த்யாகப்ரம்ம ஆராதனை போன்றே இது மெல்லிசைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நிகழ்வு.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் எவரும் தொழில் முறை கலைஞர்கள் அல்லர். ஆயினும் தன்னார்வ அடிப்படையில் அவரவர இசைக்கவோ, பாடவோ முன் வந்து சிறப்பு செய்வது இந்நிகழ்ச்சியின் தனித்தன்மை. ஆண்டுக்கு ஆண்டு பங்களிப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருவது இந்நிகழ்ச்சி மெல்லிசை அன்பர்களின் கவனத்தையும் பாராட்டினையும் ஈர்த்துள்ளது என்று தெளிவாக நன்கு நிரூபணமாக்கும் ஒன்று.

சென்ற ஆண்டில் இந்நிகழ்விற்கான கரு " ராக அடிப்படையில்" எழுந்த திரைப்பாடல்கள் என்ற பொருளில் அமைந்த "ராகப்பிரயோகம் " என்ற ஆராதனை. பொதுவாக இவ்வாராதனை சுமார் 6 -7 மணி நேரம் நடைபெறும். நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை. இசையார்வர்கள் எவரும் கலந்து கொள்ளலாம்.

சென்ற [2025] ஆண்டின் நிகழ்ச்சி தொகுப்பு வீடியோ வடிவில் வந்துள்ளது அன்பர்கள் ஊன்றி கவனித்தால் இக்கலைஞர்கள் பாடலை எப்படி உள்வாங்கியுள்ளார்கள் என்பது புரியும். மீண்டும் சொல்கிறேன் ஏ னோ தானோ ரசனை எவ்வகையிலும் உதவாது என்பதை நாம் உணர வேண்டியது அவசியம்   .. அதற்கான இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=zm6EStKzTds&t=250s AARADHANAI 1

நன்றி அன்பன் ம வ .

No comments:

Post a Comment

MELLISAI AARAADHANAI

  MELLISAI AARAADHANAI              NYM and TEAM 26-01-25 மெல்லிசை ஆராதனை [- திரு எம் எஸ் வி அவர்களின் இசை சேவைக்கு அன்பர்களின்...