A NEW TOPIC
ANOTHER
REQUEST AND MY EFFORT TO CLARIFY
மீண்டும் ஒரு கோரிக்கை யம்
அடியேனின் விளக்க முயற்சியும்
நமது வாசக அன்பர், திரு
ராகவன் சம்பத் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
ஆசிரியப்பணியின் அனுபவங்களை
எழுதினால் நன்றாக இருக்குமே என்று.
நான் அறிந்தவரை கல்வி, ஆசிரியப்பணி போன்ற தலைப்பில் எதையாவது சொல்ல விழைந்தால் --இரண்டு
வகையான பங்களிப்புகளை
[responses] எதிர்நோக்கலாம்
1 அதான் எனக்கு தெரியுமே
2 இதிலென்ன இருக்கு ? இருக்கவே இருக்கு வாத்யார்
வேலை என்ற மன நிலை.
இவ்விரண்டு கருத்துகளும் நிலவுவது ஏன்
என்று சற்று சிந்தித்தால் சில அடிப்படை உண்மைகள் புலனாகும்.
நல்ல திறமையான ஆசிரியர்கள் என்போரை
இன்றைய தமிழ் சமுதாயம் அதிகம் எதிர்கொண்டதில்லை.
மாறாக, இவரே ஆசிரியர் என்றால்
அதைவிட நானே சிறப்பாக 'பாடம் நடத்துவேனே ' என்று பொதுமக்களை நம்பவைக்கும்
திறன் குன்றிய நபர்கள் ஆசிரியப்பணியில் அமர்த்தப்படுவதும், அவர்களிடமே ட்யூஷன் பெறவேண்டிய நிர்ப்பந்தமும் இருப்பதால் 'அதான் எனக்கு தெரியுமே' என்று போகிறபோக்கில் பேசும்
நிலைப்பாடு வலுப்பெறுகிறது.
இதிலென்ன இருக்கு -இருக்கவே இருக்கு
வாத்யார் வேலை என்ற மன நிலை. இது தோன்றுவதற்கு அடிப்படை பள்ளிகளில்
ஆசிரியர்கள் வகுப்பில் செலுத்தவேண்டிய கவனத்தை கல்வி யில் இருந்து விலகி அரசின ரின் திட்டங்களுக்கு தகவல் திரட்ட, வாக்காளர் பட்டியல்
சரிபார்ப்பு, தடுப்பு ஊசி குறித்த விழிப்புணர்வு
பட்டறைகளில் பங்கேற்க என்று திசை திருப்பினால் --ஓஹோ ஆசிரியப்பணி இவ்வளவு
தான் போலும் என்றே மாந்தர் எண்ணுவதில்
வியப்பென்ன? அதனால் நாம் ஆழ்ந்து புரிந்து
கொள்ளவேண்டிய எண்ணற்ற நுணுக்கம் நிறைந்த தொழில்,
ஒவ்வொரு வினாடியும் கோபத்தைக்கிளறும் சேஷ்டைகள் செய்யும் மாணவ
மாணவியர் .இவர்களைகையாள்வது 4000 வோல்ட் மின் கம்பியை பற்றிக்கொண்டு
பணியாற்றுவதற்கு இணையானது.
எதற்கு எப்போது பிரச்சினை வெடிக்கும் என்பது
வானில் தோன்றும் மின்னல் போன்றது. வெகு
யதார்த்தமாக பேசப்படும் சொற்கள் பலவித வண்ணப்பூச்சுகள்
பெற்று திசை திரும்பி பெரும் சிக்கலை தோற்றுவிக்கும். உதாரணம் "நீ எல்லாம் எதுக்கு
படிக்க வருகிறாய் ? என்று தனி நபர் குறித்த கேள்வி ஒரு சமுதாயத்தை இழிவு படுத்திவிட்டதாக
சித்தரிக்கப்பட்டு விசாரணை
வளையம், தாற்காலிகமாக வேலையில் இருந்து இடைநீக்கம் , சம்பளம்
நிறுத்திவைக்குக்கப்படுதல் என்று விஸ்வரூபம் கொள்ளும்.
இருக்கவே இருக்கு வாத்யார் வேலை
என்று வீரவசனம் பேசும் எவரும் இதுபோன்ற பணிக்கூட இன்னல்களுக்கு விளக்கமோ
தீர்வோ தர இயலுமா?
எனவே ஆசிரியப்பணியின் அனுபவம் என்பது நடந்து முடிந்த நிகழ்வு. அவற்றிலிருந்து பிறர் அறியவேண்டிய அணுகுமுறைகள்,
மனநிறைவு தரும் வகையில் நம்மைக்கட்டமைத்துக்கொள்ள எவற்றை பின்பற்றவேண்டும் என்று வேண்டுமானால் எழுதலாம். அன்பர்களுக்கு
அது பயன் /பலன் தருமா என்ற கேள்விக்கு அன்பர்கள் தரும்
வரவேற்பை கொண்டே இந்த தொடரை தொடலாமா தொடரலாமா என்று முடிவு செய்ய இயலும்.
அன்பர்களின் மௌனம் பூடகமான எதிர்ப்பு
என்றே புரிந்துகொள்கிறேன்.
மௌனம் சம்மதம் என்பது பெண் பார்க்கும் படல த்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் . கல்வி குறித்த கட்டுரைகளுக்கு அல்ல.
Respond through W A BEFORE 5.00
PM ON 07-10-26
என்ன பதில் வருகிறது என்று
பார்ப்போம் .
அன்பன் ம வ
Though i hsve completed M. Syc Zoology in the year 1964 after joining Madura college through my Ptof. SrinivasanI l learnt the subject and the methof of teaching. I have attended certificate course in Biochemistry and in my MPhil course I learnt Immunology.. To some extent i could teach Both these subjects in MSc levelCredit goes to. My professor and later due to my interest in the sulbject.
ReplyDeleteThose days senior teachers would guide young teachers to tune the teaching methodology, most unreservedly. The then young teachers took it a blessing to learn from wizards. Now the scenario is different. The new crop of teachers find a mortal fear for interaction .They pretend to maintain prestige by avoiding any discussion a strategy of shielding abyssmal ignorance from public gaze.
ReplyDeleteIt's always nice and will be interesting to listen to the experience of senior's in their profession irrespective of what field it is. There will be a lot of good things to learn too. We are ready to listen to you. Pls write
ReplyDelete