Sunday, September 27, 2026

SNAKES AND SNEAKS

SNAKES  AND   SNEAKS

அரவமும் அரவமில்லா ஜீவனும்

இது என்ன தலை வேதனை ? 

அரவம் என்கிறாய் அரவமில்லா என்கிறாய் அறவே புரியவில்லை. மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறதே என்று தலையைப்  பிடித்துக்கொண்டு  மூலையில் இருவர் அமர்ந்து கோபக்கனல் கொப்பளிக்க இருப்பதைப்பார்க்க வேடிக்கையாய் இருக்கிறது. 

அரவம் என்று ஒரு சொல் தெரியாவிடில் எவ்வளவு இன்னல் பார்த்தீர்களா ? இந்த அவலத்துக்குத்தான் எதையுமே படிப்பதோ பார்ப்பதோ கிடையாது என்று தனது blog பாராமுகம் குறித்து ஒரு நியாயம் கற்பிக்க முயலுகிறார் ஒருவர். புரிந்தால் மட்டும் என்ன படிக்கவா போகிறீர்கள் ? அப்படியே படித்தாலும் ஒழுங்காகவா படிக்கப்போகிறீர்கள் -ஏனோ தானோ  அல்லது 'பாதி' படித்திருக்கிறேன் என்று சமாளிப்பு. அது சரி பாதி படிப்பது என்பதை எங்கே எப்படிக்கற்றீர்கள் ? ஒருவேளை 'பாதி' சாப்பிட்டுவிட்டு பின்னர் 'மீதி' சாப்பிடுவீர்களா? இப்போது என் மண்டை வெடித்துவிடும் போல் இருக்கிறது . ஏற்கனவே "மண்டை வறண்டவன்"  என்ற பெயர் வாங்கியாயிற்று சென்னை வெய்யில் சொல்லவே வேண்டாம் -காய்ந்த  மண்டை பட் டீர் என்று வெடித்து விடும். 'பாதி' படிப்பது என்ற கலை குறித்த கவலையில் காலையிலேயே மண்டை டமார் என்றுடயர் வெடிப்பது போல் நடந்து விடக்கூடும். காய்ந்த மண்டை எவ்வளவு இன்னல் ?  

அட போய்யா , உன் மண்டை காய்ந்தால் எங்களுக்கென்ன?  அதானே உங்களுக்கென்ன?

சரி அரவத்துக்கு வருவோம் , அரவமில்லாமல் தப்பித்துவிடலாம் என்று நினைத்தீர்களா ?

அக்  கங் அப்படியெல்லாம் விட் ருவமா ? அது க்கு வேற யாரையாவது பாருங்க .

 அரவம்  என்றால் பழைய சொல் வழக்கில் 2 பொருள்படும்  1 பாம்பு  2 சப்தம் /ஒலி . இப்போதும் தென் மாவட்டங்களில் என்ன 'அரவமில்லாம 'போற என்று சப்தமில்லாமல் போவதை கேட்பது வழக்கம் . எனவே இன்றைய  பொருளை நிறுவ “அரவம்”  என்ற சொல்லை தேர்ந்தெடுத்தேன்                                        

 அரவம் என்பது பாம்பைகுறிக்கும்  அரவமில்லா ஜீவன் என்று பூனை யை சொல்லலாம் . எப்போதும் பூனையின் நடமாட்டம் மிக அமைதியாகவே இருக்கும். 

இன்று களத்தில் போரிட பாம்பும் -பூனையும் இயற்கையில் மோதும் காட்சிகளை காணலாம் .

கீரியும் பாம்பும் பிறவி எதிரிகள் எனில் பூனையும் பாம்பும் அவ்வாறே . எவ்வளவு பெரிய பாம்பாயினும் பூனை சற்றும் தயங்காது , பயந்து விலகாது : மாறாக பாய்ந்து   தாக்கும் . அப்படி என்றால்  பாம்புடன் சண்டையிடுவதில் கீரிக்கு இணையானதா பூனை எனில், ஆம் .                                                                                                                                                                      ஆனால்  போரிடும் உத்திகளில் [பூனை யின் அணுகுமுறையும் , கீரியின் செயலும்]    வெவ்வேறானவை .                           

கீரி பாம்பை போக்குக்காட்டி சுற்றிச்சுற்றி வந்து, பாம்பை அசரவைத்து சமயம்பார்த்து முகத்தைக்கடித்துக்குதறி சாய்த்துவிடும் . 

பூனை நேருக்கு நேர் மோதும் , முன்னங்கால் கொண்டு ஓங்கி பாம்பின் முகத்தில் பட் பட் என்று அறையும் . அப்போது பூனையின் கால் நகங்கள் பாம்பின்    முகத்தைப்   பதம் பார்த்துவிடும்.

ஆக்ரோஷமாக பாம்பு கடிக்க  [கொத்த]  முயலும் . ஆனால் பூனை எகிறிக்குதித்து தப்பிக்கும். அந்த மோதலில் கடி பட நேர்ந்தால் பூனையோ கீரியோ பாம்பின் விஷத்திற்கு பலியாகும் . 

பெரும்பாலும் கடிபடாமல் தப்பிக்க வெகு நேர்த்தியாக பாம்பை எதிர் கொள்வது வியத்தகு அணுகுமுறை. இன்றைய வீடியோவில்  இந்த யுத்தத்தை காண்பீர் . அரவமும் அரவமில்லா ஜீவனும் ஜீவன் போகும் வரை மோதுவதை காண்க இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=gvFmo-6VQFs  Cat  Vs  Snakes  

https://www.youtube.com/watch?v=1R0t1mMpN2Y&t=422s  snake-mongoose  

ஒரு போனஸ்  வீடியோ [    கே வி எம் -எம் எஸ் வி ]

எதிர் பாராத விதமாக 1988 ம் ஆண்டில் வெளிவந்த வீடியோ ஒன்று கிடைத்தது அதில் திரு கே வி மஹாதேவன் அவர்களும் எம் எஸ் வி அவர்களும் "மன்னவன் வந்தானடி "  என்ற கல்யாணி ராகப்பாடல் குறித்து பேசுகிறார்கள்.                      கே வி எம் மின் உதவியாளர் திரு புகழேந்தி உடன் பாடுகிறார் . அவ்வுரையாடலில் ஒவ்வொரு ஸ்வர அசைவுக்கும் எவ்வாறு எம் எஸ் வி கை அசைவுகளை காட்டுகிறார் என்பது முக்கிய  தகவல். அதாவது பாடல் என்று வந்துவிட்டால் அவருக்கு வேறெந்த உணர்வும் தோன்றாது. இந்த ஒரு பாடல் குறித்து எம் எஸ் வி எவ்வளவு சிலாகித்துப்பேசுகிறார் என்பதை கவனியுங்கள். சமகாலத்து இசை அமைப்பாளர்கள் எவ்வளவு நட்பு பாராட்டி வாழ்ந்தனர் என்பதை நாம் உணர ஒரு நல்ல வாய்ப்பு.

https://www.youtube.com/watch?v=K7tHM-s0t1I KVM MSV DISCUSS ‘MANNAVAN VANDHAANADI’  SONG

நன்றி அன்பன் ம வ

 

 

No comments:

Post a Comment

SNAKES AND SNEAKS

SNAKES   AND    SNEAKS அரவமும் அரவமில்லா ஜீவனும் இது என்ன தலை வேதனை ?  அரவம் என்கிறாய் அரவமில்லா என்கிறாய் அறவே புரியவில்லை ...