இன்று கல்வி மற்றும் கலைகளின் அதிபதி ஸரஸ்வதி தேவியின்
நாளாம் சரஸ்வதி பூஜை தினம் . கல்வி சார்ந்த
பதிவு இன்று இடம் பெறுவது தற்செயல் நிகழ்வே.
நாளை விஜய தசமி முதல் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு கற்பதில் உதவுங்கள். ட்யூஷன்
போன்ற நடை முறைகளை விட உற்றார் உதவுதல் மனமும் அறிவும் விரிவடைய பெரும் உந்து சக்தியாக
விளங்கும். வீட்டில் பயிலும் சிறார் இருப்பின் இப்போதாவது அணுகுமுறையை மாற்றி அமைத்து ஏற்றம் பெறுவீர் - இதுவே
எனது வேண்டுகோள் .
ECHO OF EXPERIENCE – 2
அனுபவத்தின் எதிரொலி-2
ஆசிரியன் கேலிப்பொருளா
?
இல்லை என்று சொல் என்று
சுய கெளரவம் உந்துகிறது. உண்மையைச்சொல் என்று மனசாட்சி வழியை மறைத்துக்கொண்டு நிற்கிறது. ஆசிரியன் கேலிப்பொருள் ஆவது தனது செயலால் மட்டுமே
. கேலிப்பொருளாக தன்னை ஆக்கிக்கொள்கிறார் -இதன் அடிப்படை -பிறரை ஏமாற்றநினைத்து தானே
ஏமாந்து குமைந்து குமுறும் நிலைக்கு வந்து சேருகிறார்.
எப்படி என்று விளக்குகிறேன்
1 ஆசிரியரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
நல்ல புரிதல், ஆழ்ந்த விளக்கம்
தரும் பறந்து விரிந்த கல்விஅனுபவம் மற்றும் ஐயம் போக்கும் திறமை.
2 இந்த மேற்கூறிய பண்புகளை
எந்த அளவிற்கு ஒரு ஆசிரியர் ஈடேற்றுகிறார் என்பதேஒரு ஆசிரியனின் திறமைக்கும் வெற்றிக்கும்
அளவுகோல்.
சில ஆசிரியர்கள் தவறு செய்கிறார்கள்.
அவை என்ன ?
மாணவி /மாணவனுக்கு என்ன
தெரியும் [ஒன்றும் தெரியாது என்று தவறாக கணித்து விடுகிறார்கள்] இதில் தவறு நிகழ்வது ஆசிரியர் தன்னை பெரும் கல்விமானாக
நினைப்பதும் பிறரை ஏளனப்பார்வை பார்ப்பதும் என்ற கண்ணோட்டத்தினால் தான்.
ஒன்றை நினைத்துப்பார்க்கவேண்டும்
ஆசிரியர்கள்.
உங்களிடம் பயில வரும் குழந்தைகளில்
சிலர் மிகச்சிறந்த பின்னணியில் இருந்து அடிப்படை தகவல்களை அறிந்து கொண்டு வந்திருப்பர்.
அவர்களின் தாயோ தந்தையோ [இருவருமோ] அவ்வப்போது மொழி , கணக்கு, அறிவியல் குறித்த தகவல்களை
அழகாக புகட்டி இருப்பார்கள். சில வீடுகளில் குழந்தைகள் பேசத்துவங்கும் போதே வண்ண வண்ண புத்தகங்கள் மூலம்
ஆங்கிலம் தமிழ், பிற மொழிகளை நன்கு அறிமுகப்படுத்தி
இருப்பார்கள். அவ்வகை குழந்தைகள் உங்களிடம் மேலும் தெளிவான விவரங்களை எதிர் பார்க்கும்போது
, நீங்கள் [ஆசிரியர் A ,P C T E (yep) ‘எப்’ என்று
உளறினால் ] UKG குழந்தைகூட மதிக்காது. ஐயே இவருக்கு ஒண்ணுமே தெரியல என்று ஊர் முழுவதும் சொல்லும்.
ஆசிரியரின் அடுத்த தவறு
மாணவ மாணவியரை 'தாஜா' செய்து
அமைதியை வாங்குவது
[BUYING PEACE என்பார்கள்] உங்களிடம் அந்த மாணவர்கள் நட்பாக நடிப்பார்கள் ஆனால் சுவற்றில்
விகாரமாக உருவம் வரைந்து இவன் தான் ' என்று அந்த ஆசிரியரின் பெயரை ஊரறிய எழுதி வைப்பார்கள்.
இது போன்ற ஒரு நிலைமை தோன்றுவது
கூட ஆசிரியன் ஆழம் தெரியாமல் காலை விட்டவன் போன்ற நிலைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டது
தான். அதாவது ஒருவன் எந்த நிலையில் [லெவல்] ஆரம்ப, நடு நிலைக்கல்வி, உயர் நிலை, மேல்நிலை
, பட்டப்படிப்பு , பட்டமேற்படிப்பு [PG] போதிக்கவேண்டுமானாலும் அந்த நிலையைவிட 2, 3 படிகள் உயர்ந்த நிலைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு
வகுப்புகளுக்கு செல்வது சரியான அணுகுமுறை. உதாரணமாக 10 ம் வகுப்பு ஆசிரியர் கல்லூரி
முதலாம் ஆண்டு வகுப்பு பாடம் என்ற நிலைக்கு தகவல்களைத்திரட்டிக்கொண்டு பின்னர் போதிக்க
துவங்கவேண்டும் அப்போது அவர் வசம் இருக்கும் பாட திறன் அதிகம் என்பதால் , சிறிதும்
தயக்கம் நடுக்கம், ஐயம் மூன்றும் இன்றி வெகு இயல்பாக பேசி விளக்க முயல்வர். அவரது தன்னம்பிக்கை
அவருக்கு தரும் பாதுகாப்பு -அது அளவிட முடியாதது. அந்த திறமை இருக்கும் ஆசிரியரை கேலி,
கிண்டல் நையாண்டி போன்ற துன்புறுத்தலுக்கு
உள்ளாக்க மாணவர்கள் அஞ்சுவர். அதிக உயர் நிலை தகவல் அவரிடம் இருப்பதால் அவர் மரியாதைக்குரிய
ஆசான் என்ற அந்தஸ்தை பெறுவார்.
அதைவிடுத்து முறையாக தன்னை
தயார் படுத்திக்கொள்ளாமல் வகுப்புகளுக்கு செல்லும் ஆசிரியர்களால் எவனையும் கட்டுப்படுத்தவோ
அடக்கவோ இயலாது. மாறாக அவ்வகை ஆசிரியர்கள் மாணவ
மாணவியரிடம் ஹி ஹீ ஹீ என்று 'தாஜா' செய்து வாழ வேண்டிய நிலைக்கு வீழ்வதை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
அதாவது முறையான உழைப்பின்றி எளிதாக வாழ்ந்துவிடலாம் என்று கற்பனையில் துவங்கிய ஆசிரிய
வாழ்வு முதல் 2 ஆண்டுகளுக்குள் எண்ணற்ற புனை பெயர்கள் கேலிப்பேச்சுக்கள் ஆங்காங்கே
சுவர் சித்திரங்கள் என்று விரிவடையும். இவர்களை எளிதாக பந்தாடலாம் என்று மாணவர்கள்
ஊரெங்கும் பரப்பி இவர்களால் மீண்டெழவே முடியாத
நிலைக்கு சரிந்து 'கேலிப்பொருள்' ஆகின்றனர்.
உழைப்பின்றி வாழ நினைத்தால் இதுதான்
கைகூடும்.
இவர்களின் ஒவ்வொரு அசைவும்
முற்றாக கேலிப்பொருள் ஆவது உறுதி. வார்த்தை
உளறுவது, தவறான ஸ்பெல்லிங் , இலக்கணப்பிழை என ஒவ்வொன்றும் மாணவர் கையில் சிக்கி கேலிப்பொருள் ஆகும்
ஒருவர் வாய் தவறி க்ளூகோஸ்
என்பதை குல் கோஸ் என்று சொல்லி அவரையே குல் கோஸ் வரான் பாரு என்று சொல்வதை பார்த்திருக்கிறேன். இன்னொருவர் ஏதோ ஒன்று சந்தர்ப்பத்தில் வகுப்பறையில்
இருந்த போட்டோ வில் இருப்பவர் 'அத்திம்பேர் ' என்று சொல்லப்போக அவரையே 'அத்திம்பேர்’ 'அத்திம்பேர் ' என்று பிரபலப்படுத்திவிட்டனர் மாணவர்கள்.
தேவையற்ற செயல்கள் ஆசிரியர்
பணிக்கு உகந்ததல்ல. இவ்வகை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய தொழிலில் திறன் குன்றியோர் என்பதால்
கேலிப்பேச்சுக்கு ஆளாகிறார்கள். எனவே ஒரு ஆசிரியர் 'கேலிப்பொருள் ' ஆவது அவரது தரக்குறைவான
அணுகுமுறைகளால் தான் என்பது எனது புரிதல். இப்போது நான் ஆரம்பத்தில் கூறிய "மாணவர்களுக்கு என்ன தெரியும்? " என்ற வீரவசனத்திற்கு விடை இது போன்ற நிகழ்வுகளே. மாணவனுக்கு என்ன தெரியுமோ தெரியாதோ , ஆசிரியருக்கு என்ன தெரியும் என்று தெளிவான முடிவுக்கு விரைவாக வரத்தெரியும். ஆசிரியன் பேச துவங்கிய 2 நிமிடங்களிலேயே அவர் மிகச்சரியாக 'எடைபோடப்படுவார்' என்பதே பயில்வோரின் பலம். அவனுக்கு தெரியுமா என்பதைவிட ஆசிரியனுக்கு என்ன தெரியும் என்று உணரும் திறன் உண்டு. அது 99% சரியாகவே இருக்கும். ஆசிரியரை ஒப்பீடு செய்தல் கலையில்
வேறெந்த நடைமுறைகளையும் விட பயில்வோரின் கருத்தே
நம்பகமானது என்பதே என்பது எனது புரிதல்.
வேறு பல முக்கிய நிலைகளை
பின்னர் விவாதிப்போம்
ஆசிரியப்பணியின் சிறப்பு மாணவர் தரும் அன்பும் மரியாதையும் பாராட்டும். ஆசிரியருக்கு 'உரிய'
பாராட்டு
கிடைக்கும்
மாணவர்களிடம்
. அவ்வகையில்
ஒரு
மாணவர்
கருத்து
கீழே
பதிவிட்டுள்ளேன் அவர் Vizag நகரில் வாணிப கப்பலில் Cdr நிலை வரை
உயர்ந்து பின்னர் ஓய்வு பெற்று அதே நகரில் வசிக்கிறார். சென்ற பதிவில் இடம் பெற்றிருந்த
திரு லெஸ்லி ஆண்டனி யின் வகுப்பு தோழர் [B
.Sc PHYSICS 1974-77] இல் மதுரைக்கல்லூரியில் பயின்றவர். அவரது 'பார்வை'
கீழே இடம் பெறுகிறது நமது BLOG தொடரில் Cdr கிருஷ்ணன் எனும் பெயரில் கருத்து சொல்பவர்
இவரே.
My
impressions on Professor K Raman
My
interaction with Professor K Raman dates back to 1975 when I joined the
Photography Club, mentored by Prof Raman at my Alma mater ‘The Madura College’,
Madurai. I was doing my B.Sc., in Physics major.
Myself and my friend Leslie Antony, always
looking for something interesting to
learn,
joined this club. Prof. Raman made the subject very attractive both by
systematic theoretical lessons and practical classes. He used to invest lots of
time and efforts to make the learning interesting.
At
first, we started with Black &White photography - different types of
cameras and lens attachments, different grades of films and their developing
techniques, printing of positive images and enlarging the images were taught.
An appreciable quality of Prof. Raman is that he used to freely allow the students
to handle sophisticated photo equipment. I used to borrow his Twin Lens Reflex
camera to cover my family functions.
Later
we learnt colour processing. The basics that I learnt at that time stood with
me for a long time.
Now,
I am able to take decent photographs with DSLR camera that I have.
The
Radio project:
It was the same time that Antony and myself
were interested in assembling radio sets.
Prof.
Raman placed an order for a radio set with 3 bands and 5 thermionic valves. He
funded the project while we procured the necessary spare parts available at
Town Hall road market. We worked almost day and night in a room at Antony’s
terrace.
Finally,
after about a month, we completed the assembly and took it for a demonstration
to the Professor’s home at Thiru Nagar, a distance of about 10 kilometres in a cycle.
To our surprise, when we switched on the
radio, there was only squeaking noise instead of Radio Ceylon as expected!
During the transit on cycle, some component had become loose. We set it right
and handed over a working radio receiver.
What is interesting is that Prof. Raman was taking risk while
encouraging us to learn and complete the project.
We
were happy that we were able to assemble a 5 valve, radio set from the scratch.
As
We Realise Blog:
Post
retirement many people find it hard to spend time. But Prof Raman chose
writing
a blog - a very useful way to spend time.
He
started “As we realise” blog in September 2021 during covid time and has
completed an incredible 1881 blogs till date covering various interesting and
useful topics.
He
has been doing it meticulously and by 6 am every day publishes the blog. He has
been enlightening us daily with these short, sweet and educative topics.
I appreciate his enthusiasm and energy in
writing this blog every day.
I
wish Prof. Raman a happy and a long healthy life. From
Cdr. Krishnan
No comments:
Post a Comment