Wednesday, October 21, 2026

I PERCEIVED THE SONG -4

 I PERCEIVED THE SONG -4

பாடலை உணர்ந்தேன் -4

தேடி வரும் தெய்வ சுகம் - வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ் , பி எஸ் 1969                             [ 56 ஆண்டுகள் முன் ]

இது ஒரு வினோதமான பாடல் ம் பாடலும் இசையும் போட்டி போடும் களம் . கருவிகளில் துவங்கி குருவிகளின் குதூகலம் போல் குரல்களின் நர்த்தனம் . ஆ நர்த்தனம் என்றால் தாளம் தானே ஆதாரம் . அது இல்லாமலா?

. இந்த ஒலிகளை எவ்வாறு கற்பனை செய்தார் எம் எஸ் வி. அது தான் கற்பனையின் உச்சம் . ஏனோ தானோ ஒலிகள் அல்ல. அற்புதமான ஒலித்தொகுப்பு. ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்தாலும் ஒவ்வொரு ஒலி யும்  வெகு நேர்த்தியாக வெளிப்படும் சிறப்பு.

என்னை பொறுத்தவரை பாடலின் ஜீவநாடி ட்ரம் -போங்கோ கூட்டு ஒலி , பின்னிப்பிணைந்த பாம்புகள் போல் இரண்டு ஒ லி களும் தெளிவாக ஆ னால் இணைந்தே ஒலிப்பது இசை அமைப்பின் சாதுர்யம். அது / மேலும் பாடல் முன்னேறிச்செல்ல செல்ல தாளத்தின் வேகமும் படிப்படியாக அதிகரித்து ஏதோ கம்பியூட்டர் வேகம் போல் திரு நோயல் க்ராண்ட் அவர்களின் அதிதீவிர ஆனால் மென்மையான ட்ரம் வாசிப்பு. சொல்லவே என்னிடம் மொழித்திறன் இல்லை. 

இப்பாடலில் இருவேறு நடைகள் கொண்ட அமைப்பு உள்ளது.

 இரண்டிலும் 'டெம்போ' வேறுவேறு வகையானது. மேலோட்டமாக பார்த்தால் புரியாது. நமது blog வாசிகளுக்கு நிச்சயம் பலமுறை சொ ல்லவேண்டும் சொன்னாலும்   இந்த காதில் வாங்கி...  .....  அவ்வளவு தான். இவையெல்லாம் பாடல் உணர முறையான அரிச்சுவடி  . சரி இப்போது பாடலின் சிறப்புகள் என்ன என பார்ப்போம்

நன்றாக கவனித்தால் புரியும் ---இரண்டு பாடல்கள் இருப்பது. ஆனால் இரண்டிலும் பல்லவி ஒன்றே சரணங்கள் வேறு , ஆனால் ராக பாவம் ஒன்று தான், தாள நடையில் வேறுபாடு. ஆனால் இரண்டிலும் இயக்கப்பட்டுள்ள கருவிகள் ஒன்றே . இதென்ன விந்தை , பல்லவி , ராக பாவம் , கருவிகள், குரல்கள் அனைத்தும் ஒரே வகை

சரணம், கவிதை, தாள நடை எனும் டெம்போ, பாடும் நுணுக்கம் வெவ்வேறு.

இதை ஆக்கிய கவிஞன் [வாலி] , இசை அமைப்பாளர் [எம் எஸ் வி] ஒரே நபர்களே . ஒரே கூட்டணியில் ஒரே படத்தில் ஒரே பல்லவியைக் இரு வேறு நடையில் ஒரே நடிகர்களுக்கான 2 பாடல்கள். 2 வேறு காட்சி அமைப்புகள்,

ஒன்று கிட்டார் அக்கார்டியன், இசையில் துவங்கிட , மற்றது மெல்ல குரலில் இசை பாவமே இல்லாமல்

'தேடி வரும் ' என துவங்க பெண் குரல் தெய்வ சுகம் என்று ஒலி த்து மீண்டும் பல்லவி யில் பயணிக்கிறது.

சாந்தி படத்தில் மென்குரலில் பாட தயக்கம் காட்டிய டி எம் எஸ் இப்பாடலில் சிட்டுக்குருவி போல் மென்மையாக ஜமாய்த்துள்ளார். சுசீலா பெரும் வித்தகர் எவ்வளவு அனாயாசம் குரலில் ?

பல்லவியி ன் துவக்கம் முதலே பரபரக்கும் ட்ரம் ஒலி கூடவே அடங்கி ஒலிக்கும் போங்கோ இரண்டும் இணைபிரியாமல் பயணப்பட , பின்னர் ஒலிக்கும் கருவிகள் விசேஷ ஜால முத்திரைகள். அதிலும் ஒவ்வொரு பல்லவியுடன் ஒலி க்கும் கிட்டார் ஏதோ சொர்க்கபுரியின் நாதமாய் பரவு கிறது ; சிறிய நோட் தான் பெரிய தாக்கம் ஒலியில் .

அதுபோன்றே ஆங்காங்கே தனித்து துள்ளும் குழல் ஒலி ஒவ்வொன்றும் விசேஷ முத்திரை எனில் வேறில்லை. அதுதான் மன்னர் தரும் இசை அலங்காரம். வஞ்சனை இல்லாத பஞ்சணை இசை எவ்வளவு நளின அமைப்பு. பாடல் சீராக பயணித்தாலும் சீறிப்பாயும் ட்ரம் வாசிப்பு அதுவும் மெஷின் வேகத்தில் துடிப்பான வாசிப்பு [நோயல் க்ராண்ட் ]. அவ்வளவு எனர்ஜி தாள நடையில். கேட்டு கேட்டு உணருங்கள் நுணுக்கங்களை   இணைப்புகள் இதோ

 

https://www.youtube.com/watch?v=pq4A2mwV29c THEDIVARUM DEIVA SUGAM 1068 VALI MSV TMS PS

https://www.youtube.com/watch?v=hvOyEMnEB5E AS ABOVE  ON A DIFFERENT  LYRIC / TEMPO

நன்றி அன்பன் ம வ

No comments:

Post a Comment

I PERCEIVED THE SONG -4

  I PERCEIVED THE SONG -4 பாடலை உணர்ந்தேன் -4 தேடி வரும் தெய்வ சுகம் - வாலி , எம் எஸ் வி , டி எம் எஸ் , பி எஸ் 1969        ...