I PERCEIVED THE SONG -5
பாடலை உணர்ந்தேன் -5
காதல் விளை யாட
-1974 , கவியரசர் , எம்
எஸ் வி, எஸ்பி பி , சுசீலா
எண்ணற்ற காதல் பாடல்கள் தமிழில்
உண்டு . அவை பல கவிஞர்களின் கற்பனையில்
உதித்தவை. அவை அநேகமாக வெற்றிப்பாடல்களே . முக்கிய காரணம் அவற்றிற்கு இளம் வயதினரின் ஆதரவு
எப்போதும் உண்டு. அது மட்டுமே போதுமா
? எனில் கண்டிப்பாக இல்லை . பாடலில் வசீகரம்
மிகவும் தேவை. வசீகரத்தை மேம்படுத்த இசை
அமைப்பாளர்கள் பலவித
உத்திகளை கையாள்வார்கள்..
அவற்றில் சில
மென்மையாகப்பாடுவது, குழைந்து குழைந்து பாடுவது , சிரித்துக்கொண்டே
பாடுவது , பெண் குரல் சிரிப்பது தெரியாமல்
பாடல் சொல்லோடு சிரிப்பையும் கலந்து பாடுவது, இவை அனைத்தையும் தவிர
வான் வெளி நோக்கி ப்பாயும் ஹம்மிங்
- இவை அனைத்தையும் இசை அமைப்பாளர் வடிவமைத்துப் பாட வைப்பார். அது வரை பாடகர்களின் திறமைக்கு இடம்
உண்டு.
அடுத்த நிலையில் ஆர்கெஸ்ட்ரேஷன் என்னும் இசைக்கருவிகளின் ஒலி வரிசை, பிரமாணம் , தாள ஒருங்கிணைப்பு , திடீரென்று அமைதி [உதாரணம் அழகிய தமிழ் மகள் இவள் பாடலில் இடையே 'இன்னும் நான்
சொல்ல' .............. 5, 6 வினாடிக்களுக்குப்பின் 'வெட்கம் தான் ' என்று பெண் குரல் ] இவை
தவிர பாடலில் கோரஸ் அமைப்பதும் பாடலின் உணர்வுக்கு வலு சேர்க்கும்
இவற்றில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ பாடலின் வடிவம் [structure ] மாறாமல் இணைப்பதில் எம்
எஸ் வி மாபெரும் வித்தகர் . அவர்
பயன் படுத்தியுள்ள அலங்கார வடிவமைப்புகள் தமிழ்
திரைப்பாடல்களை வேறு
உயரத்திற்கு கொண்டு சென்றதை 1960 முதல் அவரின் பாடல்களில் பார்த்து வியந்ததை
நினைவு
கூறுகிறேன்,
சரி பாடலுக்கு வருவோம்
ஒவ்வொரு பாடலும் வெற்றிபெற வேண்டும்
என்றே எவரும் முனைவார்கள். எனவே குதூகலமாக பாடக்கூடிய இளைஞன் / இளைஞி குரல் வாய்த்தால் மகிழ்ச்சி இசைஅமைப்பவர்க்கும்
ரசிகர்களுக்கும் தான்.
2
நம் கால உதாரணங்கள் எஸ் பி பாலசுப்ரமணியன்/ வாணி ஜெயராம் இருவரையும் வெகு நேர்த்தியாக உபயோகித்தவர் திரு எம் எஸ் வி அவர்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் இன்றைய கண்மணி ராஜா [1974] பாடல்
இப்பாடலின் பல்லவி குழந்தையை தாலாட்டு
வதாக
துவங்கி பின் காதல் பாதையில் பயணிக்கிறது.
ஆனாலும் பாடலின் வடிவம் தூளியில் உறங்கவைக்கப்படும்
முயற்சிகளின் அசைவுகளாகவே ட்யூன் இயங்குவதைப் பார்க்கலாம்
. நான் ஏன் தூளி
என்று சொல்கிறேன்? தூளி தான் சற்று மேலெழும்பி
பின் கீழிறங்கி [மேலும் கீழும் குலுக்கி] குழந்தையை உறங்க வைக்கும் , தொட்டிலை ஆட்டத்தான்
இயலும் குலுக்க முடியாது,
பாடலின் பல்லவி ஒரு அமைப்பிலும் சரணங்கள் பிறிதொரு அமைப்பிலும் தொடர்ந்து பயணிப்பது
இப்பாடலின் வரும் 'தொட்டிலிடு கண்ணே /தொட்டிலிடு
கண்ணா' என்ற ஆண் /பெண் நிலைகளுக்கு நியாயம் தரும் சரண வார்த்தைகளின் பயணம் .
சரணங்கள் ஒவ்வொரு வரியும்
இரு பகுதிகளாக பாடப்படுவது இந்த 'தூளித்தாலாட்டு ' போல அமைந்துள்ளது . தொட்டிலிடு என்ற
சொல்லை சரணங்கள் முழுமை க்கும் கையாண்ட எம்
எஸ் வி , காதல் மனம் கொண்ட உவகையை ஹே ஹே ஹா ஹா ல லா ல லா என்ற ஹம்மிங் மற்றும் வெவ்வேறு
சொல் கட்டு ஓவர்லாப் [overlap ] முறையில் பாட வைத்து வெகு நேர்த்தியாக இப்பாடலை அரை நூற்றாண்டுக்கு முன்
[52 வருடங்கள் ] வழங்கியுள்ளார்.
நாயகன் நாயகி காட்சிகள்
கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த பாதையின் வளைவில்
நின்று பார்த்தால் வைகை அணைக்கட்டு , பெரியகுளம் தெரியும். ஆனால் படத்தில் அடர்ந்த
பனி அந்தப்பள்ளத்தாக்கில் நிலைகொண்டுள்ளது. இன்றைய கொடைக்கானல் வெகுவாகமாறி தன பொலிவையும்
மரங்களையும் இழந்து ஒரு வாடிய நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. அந்த நடைப்பகுதியில்
எஸ் பி பி -சுசீலா ஹம்மிங் பாடலின் ரொமான்ஸ்
எலிமெண்ட் எனும் காதல் வீரியம் மேம்பட அமைந்துள்ளது.
பாடலின் சிறப்புகளை கண்டு
கேட்டு மகிழுங் கள் . QFR பதிவில் திரு அரவிந்த் முகுந்தன் பாடிய நேர்த்தியான
பதிவு/ இதர சிறப்புகளை விளக்க காணலாம் ஆழ்ந்து ஊன்றிக் கேளுங்கள். இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=m-NdHa-Cr-A
kadhal vilaiyaada spb ps msv 1974
https://www.youtube.com/watch?v=xeWRKcuyDck
QFR SONG Aravind Mukundan
நன்றி அன்பன் ம வ
No comments:
Post a Comment