POETIC SPLENDOUR -2
கவி [தை] யின் நளினம்
-2
பெண் அத்திக்காய்
காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ
பெண் ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
எங்கள் வாழ்வு ஏலக்காய் நறுமணம் போல வாழ வாழ்த்தி நீ ஒளி வீசு
ஜாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனிய க்காய்
இவ்வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை. ஆனால் ஜாதிக்காய் உள்ளிருக்கும் விதைபோன்ற பகுதியை எடுத்தபின்னரும்
ஜாதிக்காய் மணம் அந்த ஓடு போன்ற பகுதியில் தொடர்வது போல் எங்கள் வாழ்வு மணம் பெற்று
வாழ [வாழக்காய்] ஒளிவீசு
ஜாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனிய க்காய்
ஆண் சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா சொன்னதெல்லாம்
விளங்கிக்கொண்டு தூது வழங்கு [என்று கேட்க] தூது வளை காயின் பெயரை பயன் படுத்தியுள்ளார்
கவி அரசர்.
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ
ஆண் உள்ள மெல்லாமிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
என்று
ஆண் பாடுவது
மிக கவனமாக பதம்
பிரிக்க
வேண்டிய
பகுதி
உள்ள மெல்லாம் மிளகாயோ
= உன்
உள்ளம்
என்ன
காரமும்
கொடூரமும்
கொண்ட
மிளகாயோ
உள்ள மெல்லாமிளகாயோ= உள்ளமெல்லாம்
இளகாயோ
= மனம்
இரங்கமாட்டாயா
என்றும்
பொருள்
படுகிறது.
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
= உனது
ஒவ்வொரு
பேச்சும்
சுரைக்காயோ
[விசேஷ
சுவையில்லை
என்று
பொருள்படும்
]
ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ [சிறிது
கூட
பேச
மாட்டாயா
என்பதே
பேச்சு
உரைக்காயோ
= பேச்சுரைக்காயோ
என்று
சேர்த்து
ஒலிக்கிறது
.
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ
இது அந்தப்பெண்ணிடம் 'அவன்'
கேட்கும்
சலுகை
கொஞ்சம் சிரி
யேன்
, அப்போது
வெள்ளரிக்காய் பிளந்தாற்போல் உன் சிறிய பல்வரிசை தெரியுமே என்று [ கொ
][கெ]ஞ்சுகிறான்
பெண்
கோதை
எனை
காயாதே
கொற்றவரைக்காய்
வெண்ணிலா என்னைக்காயதே
கொற்றவரைக்காய் =கொத்தவரை யின்
காய்
என்பதாக
தோன்றினாலும்
இங்கே
'கொற்றவரை'
கொற்றவன் அதாவது தலைவன்
[கொற்றவரைக்காய்
எனில்
தலைவனை] நன்கு காய்ச்சு என
பெண்
வேண்டுகோள்
வைக்க
திடீரென்று சமரசம்
வந்து
விட்டது
போலும்
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய்
வெண்ணிலா
என்று இருவரும் பாடி மீண்டும் பாடல் பல்லவிக்கு திரும்புகிறது
இப்பாடல் திரைத்துறையில்
ஒரு
மைல்
கல்
ஆம்
இலக்கிய
நயமும்
இலக்கணத்தரமும்
கவியரசரின்
மின்னல்
வேக
யாப்புத்திறனுக்கும் ஒரு முற்றான சான்று
இப்பாடல்.
2 இரட்டை
டூயட்
- 2 ஜோடிகள்
திரையிலும்
, பாடலிலும்
டி
எம்
எஸ்,சுசீலா
, பி
பி
ஸ்ரீனிவாஸ்
, ஜமுனா
ராணி
, காட்சியில்
சிவாஜி
கணேசன்,
தேவிகா
, பாலாஜி
வசந்தி
, இசை
அமைத்த
ஜோடி
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
.
பாடலைக்கையில் வாங்கிய எம் எஸ்வி கவிஞரிடம்
யோவ் என்னய்யா ஒரே கொத்தவால் சாவடி விஷயமா அவரை , வாழ, அத்தி . கொத்தவரை அப்பிடி இப்பிடின்னு போய்யா நல்லாவே இல்லை என்று சொல்ல
கவிஞர் எம் எஸ் வியிடம்
டேய் உன் வேலையப்பார்றா போய் ட்யூன் போடுடா பாட்டு பயங்கர ஹிட் ஆகும் என்று சொல்ல [ Lyric first, tune
next assembly ]
எ ம் எஸ் வி
ட்யூன் தானே இப்பவே போட்டுர்றேன் என்று ம ள ம ள என்று காரியத்தில் இறங்க 10-12 நிமிடத்தில் பாடல் ரெடி அப்புறம் என்ன
ரெடி ஒன் டூ என்று பாடல் பதிவேறியது. பட்டி தொட்டி எங்கும் இப்பாடல் அந்த1962
இல்
தொடங்கி
இப்போதும்
ஆங்காங்கே
முழங்கிக்கொண்டிருக்கிறது .
அப்போது சிவாஜி கணேசனின் அமெரிக்கப்பயணம் இருந்ததால் ஒரு 2 ம் தேதி தொடங்கி 12 ம் தேதிக்குள்
[11 நாட்களில்] மூன்று வேடங்களில் அன்றைய மெட்றாஸ் பாஷை பேசி நடித்தது இப்போதும் பேசு பொருள் .
எம் ஆர் ராதா 2 வே டங்களில் , 3 இடங்களில் படப்பிடிப்பு ஏக காலத்தில் செய்து ஒரு 15-16 நாட்களில் படம் தயாரானது. இன்று கோடிகளில் புரளும் எவராவது இப்படி உழைப்பார்களா ? மனசாட்சிப்படி நி னைத்துப்பாருங்கள்.
பி ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய படம்.
இவை அனைத்தையும் தொலைத்துவிட்டு ஜெர்மனியில் பாடல் எழுதுகிறேன் பெல்ஜியம் நகரில் பாடல் பதிவிடுகிறேன் , ஐரோப்பாவில் ஆடுகிறேன் அமெரிக்காவில் ஓடுகிறேன், எப்படியோ தமிழ் சினிமாவை மூடுகிறேன் என்று கிளம்பாமல் இருந்தால் போதும் ஆண்டவா .
https://www.youtube.com/watch?v=PIhxavNyRwQ
https://www.youtube.com/watch?v=xtadbhZ_ISQ&t=278s
movie scene
நன்றி அன்பன் ம வ
No comments:
Post a Comment