Monday, October 5, 2026

VALI VATHAM

 VALI   VATHAM

வாலி வதம்

வாலி வதம் எனும் பொருள் நெடுங்காலமாகவே ஒரு விவாத பொருள் எனில் மிகை அல்ல. ஏன் எனில் பாமரர் தொடங்கி புலவர் வரை இது ஒரு விவாதப்பொருள். இதில் தமிழ் ஆர்வலர், சம்ஸ்கிருத விற்பன்னர்கள், மேடைப்பேச்சாளர், பட்டிமன்ற சான்றோர், பொது மக்கள் என பலரையும் ஈர்த்து வந்துள்ளது. எண்ணற்ற முறை பேசப்பட்டுவிட்டாலும் மீண்டும் மீண்டும் முகம் காட்டும் கருப்பொருள் இது.

இந்த தலைப்பில் 'கம்ப இராமாயண' அடிப்படையில் முன் வைக்கப்படும் பல கருத்துகளை  தனக்கே உரிய முறையில் எளிய தமிழில் திரு ஜோசப்  அவர்கள் விளக்குகிறார். இந்த ராம காவியத்தில் உலாவரும் பாத்திரங்களின் பூர்வாசிரம தொடர்புகளையும் அவற்றிற்கிடையே அமையும் தார்மீக அற நெறிகளையும் கோடிட்டுக்காட்டி திரு ஜோசப் அவர்கள் ஆற்றிய உரை பல முக்கிய தகவல்களை வழங்குகிறது.

இதற்கிடையே சென்ற செவ்வாய் அன்றே 'ஐயோ ஜோசப் அவர்களின் 'வைணவம் ' உரை முடிந்துவிட்டதே என்று கவலை தோய்ந்த தொனியில்சிலர்  பேசினர். . எனவே இப்போது நமது வாசகர் மத்தியில் திரு ஜோசப் மிக முக்கிய ஈர்ப்புப்புள்ளியாகி விட்டார் என்பது பட்டவர்த்தனம் . எனவே வெகுஜன தேவையை முன்னிட்டு மீண்டும் திரு DA ஜோசப் நமது பதிவுகளில் வருவார். கேட்றது பயன் பெறுவீர் அவரது 'வாலி வதம்'  பற்றிய வீடியோ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=3qA5T3W_HG0&t=183s VAALI VATHAM

நன்றி

அன்பன் ம வ

No comments:

Post a Comment

VALI VATHAM

  VALI   VATHAM வாலி வதம் வாலி வதம் எனும் பொருள் நெடுங்காலமாகவே ஒரு விவாத பொருள் எனில் மிகை அல்ல. ஏன் எனில் பாமரர் தொடங்கி புலவர் வரை இத...