Tuesday, January 10, 2023

NEELAKANTA IYER

 NEELAKANTA IYER

நீலகண்ட ஐயர்

வெள்ளை வெளேர் என்ற வேட்டி -நீலம் போட்டு , தட்டி உலர்த்தி அணிந்து கொண்டு சைக்கிளி ல் மெல்ல தெருவெங்கும் அலைந்து காலை, இரவு  டிபன் , மாலை சுண்டல் வடை ,போளி என்று விற்பனை செய்து ஜீவனம் செய்பவர் நீல கண்ட ஐயர். அவரது வேட்டி யினால் சிலர் நீலம் கண்ட ஐயர் என்பார்கள். , அவர் சிரித்துக்கொள்வார். ஏன் மாமா நீலம் போடாம வேஷ்டியே கட்டிக்கமாட்டேங்களா என்றாள் ஒரு கல்லூரி மாணவி. நீ க ஐயர் சொன்னார்   'பளிச்சுனு இருந்தா தானே இவர்ட்ட டிபன் வாங்கிப்பாக்கலாம்னு தோணும் , அழுக்கும் பிசுக்குமா இருந்தா யாரும் கூப்பிடமாட்டா, தெருத்தெருவா அலைஞ்சு என்ன புண்ணியம் , வாங்கரவா வாங்கினா தானே காலட்சேபம் நடக்கும்.என்றார்"

கல்லூரி மாணவிக்கு புரியவில்லை

கதா காலட்சேபத்துக்கும், டிபன் விக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? குழம்பினாள்.

இதுதான் கால வித்யாசம். இந்தக்கால குழந்தைகளுக்கு பாதி சொற்கள் புரிவதில்லை, சினிமாவும் சீரியலும் அவர்களை ஒரு மாய உலகில் மிதக்க வைத்திருக்கிறது, உணவுகளில் கூட பிசா [அது பிசாசு ] பர்கர்  என்ற வகைகளை சுவைப்பதும் தட்டை முறுக்கு வகைகளை புறக்கணிப்பதுமாக -பாஸ்ட் புட் , ஐஸ் கிரீம் இவற்றைத்தின்று உடல் ஊதி BIO ROLLER களாக  அரை டவுசர் மாட்டிக்கொண்டு திரிகின்றனர். பெண்களும் சற்றும் மாறுபட்டவர் அல்லர்.அவர்கள் பாண்ட் சட்டை, நீண்ட வால் போன்ற பின்னலிடாத கூந்தல், பொட்டில்லாத நெற்றி என்று ஆண் பெண் பேதமின்றி இருக்கின்றனர் . அநேகம் பெண்கள் 10 வயது முதலே கண்ணாடி அணிந்தவர்கள்.

நீ க சொன்னார் "அம்மா கீரவடை சூடா இருக்கு  . 2 தரட்டுமா என்றார்” என்னது -கீரவடையா? என்று முகம் சுரத்தில்லாமல் கேட்டாள் .

நீ. க ஐயர் --"ஆமாம்மா வைட்டமின் B வகைசத்துகளும், பரு ப்பினால் ப்ரோடீன் செறிவும் உள்ளது. வளரும் பெண்கள் நிச்சயம் சாப்பிடவேண்டியது என்றார். வேண்டாம் மாமா என்று ஓடி விட்டாள்.        ஐயர் சிரித்துக்கொண்டார்.

ஐயர் சிரித்ததை பெண்ணின் தாயார் ஜன்னல் வழியே பார்த்துவிட்டாள் . வேகமாக தெருவுக்கு வந்து என்ன சிரிப்பு வேண்டியிருக்கு, வடை வேண்டாம்னா போக வேண்டியது தானே என்று கொந்தளித்தாள். இப்போதும் ஐயர் சிரித்தார் ,அம்மாவுக்கு ஆத்திரம் அதிகமாகி ,வடவிக்கறவனுக்கு இவ்வளவு திமிரா      என்றாள் “அம்மா கொஞ்சம் நிதானமா பேசுங்கோ” என்றார் ஐயர்.                           அந்த அம்மா "நான் யார் தெரியுமா"  ஸ்கூல் டீச்சர் அதுவும் சைன்ஸ் டீச்சர் என்று குதித்தாள். அதனாலே என்னம்மா? கீரை வடைல நல்ல ப்ரோடீன், பீ காம்ப்ளெக்ஸ் மற்றும் நார்ச்சத்து இருக்குனு சொன்னேன் " என்றார்.

ஓ நீர் பெரிய சைன்டிஸ்ட் ப்ரோடீன் பீ காம்ப்ளெக்ஸ் அது இது னு அள்ளிவிட்டு வடைய எங்க தலைல கட்டப்பாக்கறீராக்கும் , வேறிடம் பாரும். என்றாள் . மேலும் என் பொண்ணு பீ எஸ் ஸி நியூட்ரிஷன் படிக்கறா என்று பெரிய லெக்சர்   அடிக்க கூட்டம் கூடி விட்டது.

ஐயர் விடுவதாக இல்லை , நியூட்ரிஷன் படிக்கறவாளுக்கு கீரைல என்னென்ன இருக்குனு தெரிஞ்சிருக்குமே அதுவும் நம்மள விட நிறையவே தெரிஞ்சிருக்கும் என்று [மறைமுகமாக சும்மா கத்தாதே] சொன்னார். "கவிதா இங்கே வா" என்று தன்  பெண்ணை க்கூப்பிட்டாள்    . "இந்த ஆளு என்னவோ அளக்கறாரே நீ கொஞ்சம் பதில் சொல்லு" என்றாள் . ஐயர் " பீ காபிளெக்ஸ் பத்திசொல்லிண்டிருந்தேன்" என்றார். உடனே டீச்சர்  "நீ கொஞ்சம் சொல்லேண்டி" என்றாள் .

அம்மா-- பீ காம்ப்ளெக்ஸ் பத்தி படிச்சிருப்பாயே ? என்றார்ஐயர் .

பெண் பேந்தப்பேந்த விழித்தாள், டீச்சர் முகம் சாணி உருண்டை போல் கறுத்து , வெட்கம் பிடுங்கித்தின்றது. கூட்டத்தில் இருந்த நர்ஸ் ஓமனா  “ஈ வடா , வல்லிய மெடிசனாணு, ஒரு 6 எண்ணம் கொடுங்க” என்று வாங்கிக்கொண்டு நர்சிங் ஹோமில் இருந்த பெண்ணிடம் டெய்லி ரண்டு ரண்டு சாப்பிட்டெங்கில் நிங்கள்க்கு புஷ்டி ண்டாகும் என்றாள்.

மீண்டும் ஓடி வந்து தனக்கு 3 வடை வாங்கிக்கொண்டாள். டீச்சர் பேயறைந்த மாதிரி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள் .     நர்ஸ் “சாமி நிங்கள்க்கு பீ கோம்பளக்ஸ் ஞானம் எங்ஙன ண்டாயது ?

ஐயர்  “நான் மைசூர் CFTRI ல எல்லா டெபார்ட்மெண்டுலயும் 30 வருஷம் , FOOD FORMULATION ல 8 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆகி இப்போ சும்மா இருக்கக்கூடாதுனு QUALITY ITEMS செஞ்சு நியாயமா விக்கறேன்”.

கூட்டம் மிரண்டு அமைதியானது.                                                                                            "துள்ளிக்குதித்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் என்று "என  ரேடியோ வில் பாட்டு ஒலிக்க , சாணி உருண்டை அவமானத்தால் குன்றியது.  மீண்டும் இப்போது  ஐயர் சிரித்தார் .

K.RAMAN

Monday, January 9, 2023

PHOTOGRAPHY -7

 PHOTOGRAPHY -7

TLR CAVED IN , SLR MOVED IN

The caption summarises the change in fortune of the 2 camera versions-The TLR and The SLR.

Twin lens reflex systems have 2 lenses for viewing and registering the image as two segregated functions ; the SLR was a revolution in design in that both viewing and registering of image was handled by a single lens—hence Single Lens Reflex. Other than reducing the number of lenses, has there been any advantage?  To consider the question in all criticality it is sensible to assess the limitations of TLR design, so as to recognize the need or relevance for SLR as a concept.

TLRs are served by two independent lenses one each for viewing and ‘image registering’. The two operations left to the care of 2 different optical outfits was a limitation in determining the critical pictue quality in terms of composition.

‘Composition’ is the term used to refer to ‘placement’ of objects in a picture to give the effet of harmony among picture elements. This demands a high degree of ‘exactitude’ between the view ‘seen’ and the image ‘registered’. The final picture should be what is preferred by the photographer and not inclusion of views or objects that tend to disrupt harmony in the picture. To recognize the suggestion made, try the following study, using your ‘vision’ in studying image composition.

Sit steady in a place and watch the scene before you, without changing place or position; do not move the eyeball. Now, close one of the eyes and see the objects –using the ‘unclosed Eye’. Retain in memory the objects noticed and their positions in the ‘frame’. After a few seconds , open the ‘closed eye’ and close the other eye. Repeat the exercise a few times; there is difference in the two views –as the two eyes are separated by a small distance. This is the ‘drawback ‘ in using two lenses –one for viewing and the other for ‘picture taking’. Thus, some difference between the viewed image and the one registered necessarily creeps in. This is termed error of parallax or parallax error.

Camera designers resolved the issue by opting to use a lens common for viewing and ‘taking’. A snag had to be overcome to permit light rays on to film without their being diverted to the viewfinder. For this, designs were made to provide a high quality mirror that would guide light rays on to the viewfinder but move out of light path to help the light reaching the film. Earlier designs had a mini crank to reset the mirror for picture taking. However, soon ‘instant-return mirror-designs’ were mandatory on SLR Cameras.

With the advent of single lens designs, rapid application of optical types-Tele/WA caught up with photographers –professionals or amateurs. All these design –oriented alterations threw up the prospects of employing 35 mm film format for making a larger number of images [36] on a roll, with the innate advantage of using all lenses on a single film to suit any requirement. It was quite a time lag for Indian enthusiasts to catch up with the West, largely due to financial constraints. All these design shifts resulted in an over whelming desire to make colour photos , as automated colour laboratories that sprang up [1983 on]could deliver good products at moderate cost. That in brief was the broad survey of photo industry in my late thirties when I was too involved in colour-processing strategies at the user level.

To Continue..    K. Raman

Sunday, January 8, 2023

PHOTOGRAPHY- 6

 PHOTOGRAPHY- 6

LENSES- III  and Camera

Well, it is only now, I deem it fit to touch upon ‘Normal /Standard’ lenses. There is no specific reason as to why should I do it after the other kind of lens varieties. As the nomenclature goes, other lens kinds are ‘away’ from normal, while the ‘Normal’ is termed the ‘Standard’ . Simply the image generated through ‘Normal’ corresponds to the average perception by human eye.

As laid out earlier, focal length more than 35 mm comes under the definition of ‘Standard lens’.

This gave a lot of ‘leeway’ to manufacturers to fit optics of focal length 45 mm, 47mm, 50mm, 55mm –all as ‘standaed optics’ on their Camera brand.  There was nothing of any specific advantage to the buyer , except to tempt him/her saying ‘no need to look for tele lense’ as our basic lens has focal length close to that of a low end Tele lens. But picture taking can intoxicate beginners and drive them to go for other optics sooner or later/

At tis juncture it is relevant to remind readers that an invention of sorts    was behind the surge in optical sophistications  leading to a global demand for refined equipment capable of very high versatility. It was a camera design popular as SLR- an abbreviation for a highly venerated assembly known as SINGLE LENS REFLEX Camera design.

Well, the onus has descended on me to define the ‘why and what’ of camera design. In its native form, the camera was a near rectangular black box, with 3 eyes. Of them  2 used to be smaller along the 2 l edges on the front face , while the third was a bigger circular lens in the centre of the frontal face. The larger lens was the “Taking lens” [as it helps ‘taking the picture’] and the smaller ones were ‘VIEWING LENSES’ [AS THEY PERMIT VIEWING THE SCENE –as is likely to be registered as ‘image’. The two lenses were independent of each other in throwing up the view on the viewfinder. There used tobe 2 separate viewfinders helping to choose a vertical or a horizontal image by turning the camera flat on broadside or keeping it vertical while shooting. Most such designs were mere compromises without serving fine picture needs. Thereafter, refined Cameras named REFLEX MODELS Came about. [Reflex meant throwing up an image to a viewfinder [fresnal screen/ Ground glass  by a finepolished mirror held at 45o angle , making viewing and focussing far more effective. Consequently the camera had 2 lenses [Viewing/ Taking] by independent lenses but of identical optical features like focal length, sharpness, resolution andabilty to yield images composed on the view finder.

So, they were named TLR [Twin lens reflex] Cameras.

Saturday, January 7, 2023

PHOTOGRAPHY- 5

  PHOTOGRAPHY- 5

LENSES –II

Next in line comes the category of lens- the Wide Angle. Though, a self-explanatory name, very few exhibit true mastery in handling Wide angle optics. The ‘not-so-happy’ outcome from inept use of WA lenses can be explained as a ‘product revealing perspective distortion’. The image so derived makes the viewer believe that the scene has a very broad foreground while too many items clutter in the interior of the picture. In other words a WA lens gobbles up maximum area of coverage to be presented on a single frame. Consequently, the ‘front end’ of the picture looks wider and items at the far end ‘converge’ into the picture; so, items in the foreground are larger as against the tinier ones at the inner corridor of the picture. Unless, thoroughly ‘well-trained’ using WA lenses and making appealing images may prove tricky. Instead appalling pictures can be made effortlessly with WA lenses.

Does it mean that using WA lenses is a nightmare by itself ? No, not at all. The mere strategy of successful use of WA requires ‘choosing the correct viewpoint’ to avoid ‘vacant foreground leading into a crowded array inward. Simply, routine use of WA lenses and other format optics would teach ‘what to use- when?’ Obviouly, on scenes like vast landscapes, sea scape, snow mountains and carnivals of a variety of activity, WA is an obvious advantage to register most items in just 2 or 3 frames, taking care not to include objects that were registered on previous frame[s]

TECHNICAL INFORMATION

As was laid out earlier ,WA  implies wide angle of vision due to shorter focal length [shorter than that of the standard [Normal] lens

Focal lengths lower than of 35 mm are rated –WA

Ideally, lenses at 28 mm are true WA optical devices by virtue of their ability to render perspectives nearer to human vision [or very low exaggeration of image characteristics].

Items of f l 24 mm are honestly Wider angle lenses with ability to ‘import’ more segments of a scene on to the primary image record.

Focal lengths of 18 mm are called ULTRA WIDE ANGLES

Items of less than 15 mm focal length are SUPER ULTRA WIDE ANGLES

By around late 1970, Camera /Film industry went crazy if not berserk, to keep flooding the market with optics of focal lenghs dropping to 6 mm [FISH EYE LENS]

In extreme cases 3mm lens was used by Crazy American photographers claiming to have used ULTRA FISH EYE Lens.              In my perception, the then Japanese giants NIKKOR, ASAHI made THE BEST OF American frenzy;but later the Camera / Film industry crashed to the greedy DIGITISATION, throwing off gear the entire trade of Photo imaging, Dark room technicians and all related Chemistry, Album, Studios , why that much Camera in its original form is an Antic now-the world over.

To continue….

Friday, January 6, 2023

LASER IN SRIRANGAM -13

 LASER IN SRIRANGAM -13

ஸ்ரீரங்கத்தில் லேசர் – 13

இத்தொடர் இவ்வளவு நாட்களை விழுங்கும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் ஏதோ கதை என்பதாக மட்டுமே இல்லாமல் மனித மனங்களைப்புரிந்துகொள்ள இதை ஓரளவிற்கு பயன் படுத்தியுள்ளேன்                          

நிறைகள் இறைவனின் செயல் குறைகள் அடியேனின் வெளிப்பாடு                  என க்கொள்க எனத்  தெரிவித்து , தொடரை நிறைவு செய்கிறேன் .

காலை மணி 11. 40. அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டுவிட்டு , ஹாலில். நாற்காலி களில்  வட்டமாக அமர்ந்திருக்க , குதிரை வாலி மற்றும் காசிம் சில நிமிட இடை வெளியில் வந்தனர்.

என்ன காசிம்? என்றான் கழுகு. சாப்பிட்டுட்டு ஐயா வைப்பாத்து உத்தரவு வாங்கிக்கலாம் னு வந்தோம் என்று அவர் பின்னால் இருந்த நாதஸ்வர கோஷ்டியை கை காண்பித்தார் காசிம் . 

இன்னும் சாப்பிடவே இல்லையா ? பின்ன அதுக்குள்ள எங்க போயிட்டீங்க? என்றான் ராமசாமி.

உடனே காசிம்

"சாமி கோவிச்சுக்கப்படாது. முஹூர்த்தம் ஆனதும் ஒரு போன் வந்தது தில்லை நகருக்கு உடனே வாங்க னு . சரி னு நான் கிளம்பிப்போய்ட்டேன் இப்பதான் வரேன்”  எல்லாம் நல்ல விஷயம் தானே என்று குழம்பியவாறே ராமசாமி கேட்டான். "நல்ல விஷயம் தான், வர சான்ச  விடமுடியாதுங்க இல்லையா "-  காசிம்

ராமசாமி வியந்து பார்த்தான் .

காசிம் சொன்னான் "உங்களுக்கு தெரியாதது இல்ல. பாருங்க இப்பல்லாம் கோயில், ப்ராமின் இந்த ரெண்டு இடங்கள் ல தான் எங்களுக்கு வேலையே. பாக்கி ஜனங்க எல்லாம் செண்டை மேளம் அடிச்சா  போதும் னு தமிழ் நாட்டு ல நடை முறை ஆயிடுச்சு. ரொம்ப பெரிய பார்ட்டி யா இருந்தா அமெரிக்க கனடா, தமிழ் மக்கள் மார்கழி உத்சவம்  கூப்பிடுவாங்க.   இல்லேன்னா எங்க பாடு திண்டாட்டம் பெரியவர் இருந்த நாள் ல [சின்ன மௌலானா சாஹிப் ] டயரி நிரம்பி சில இடங்களுக்கு எங்களை போய் வாசிச்சுட்டு வரச்சொல்லி அப்பிடித்தான் நாங்க பெரிய இடத்துக்கு வந்தோம். இப்ப காலக்கோளாறு, ஒண்ணும் பேச முடியாது " என்று துயர நிலையை விளக்கினான்.  மாபெரும் கலைஞர்கள் கூட போராட வேண்டிய நிலையை என்னென்று சொல்வது? இத்தனையையும் மிக விஸ்தாரமாக கவனித்த குதிரை வாலி , கண்களை அகல  விரித்து , காசிமை ப்பார்த்து உங்க கார்ட் குடுங்கோ என்றாள்

[[ராமசாமி, அம்ஜம், , லேசர் வேதாந்தம் அனைவரும் கூர்ந்து பார்த்தனர்]

காசிம் தன்னுடன் சுருதிப்பெட்டி வாசிக்கும் பையனை 'கார்டு கொடுப்பா'          என்றான். பையன் கார் டை நீட்ட , கார்டு குதிரை வாலி கையில், காசிம் மின் பெயருக்குப்பின்னால் ஏகப்பட்ட உயர் பட்டங்கள் , விருதுகள் -பார்த்து குதிரை மிரண்டது.. சட்டென்று நினைவு  வந்தவனாக ராமசாமி அனைவரையும் அழைத்துச்சென்று சிறப்பாக விருந்து பரிமாறி கௌரவித்தான் . குதிரை வாலி உள்பட அனைவரும் மகிவுடன்   உண்டு மகிழ, ஒரு மூலையில் கே.கு இரண்டு கவளம் சாற்றமுது சாதம், ஒரு தம்ளர் நீர் மோர் அருந்தி மகிழ்ந்தான். மாபெரும் நளன் கள் இப்படித்தான் குறைவாக சாப்பிட்டு நிறை காண்பார்கள்.

சார் ராத்திரிக்கு என்ன மெனு என்றான் கே.கு.

நானே சொல்லட்டுமா என்றாள் அம்ஜம் . வெந்தய குழம்பு காய்ச்சின [சுட்ட] அப்பளாம் , வேற ஒண்ணு ம் எறங்கும் னு தோணல -என்றாள் . ஏக மனதாக ஒப்புக்கொண்டனர்.

ஹாலில் வந்து காசிம் பார்ட்டி க்கு   பணம், தாம்பூலம் பக்ஷணம் கொடுத்து நிறைவாக அனுப்பி வைத்தனர்.

குதிரை கிளம்பத்தயாரானது. உடனே லேசர் வேதாந்தத்துடன் கண்ணால் ஏதோ சொல்ல, அவன் உள்ளே ஓடினான். லேசர் குதிரையின் கைகளைப்பற்றியபடி ரொம்ப தேங்க்ஸ்  exceptional talent உங்களுக்கு என்றாள் . அதெல்லாம் ஒண்ணுமில்லை என்றது குதிரை. “என்னஒண்ணுமில்லை, அடுத்தவாளுக்கு உடுத்திவிடறது லேசுல வராது எல்லாருக்கும் என்றபடியே-- உங்களுக்கு என்ன கொடுக்கணும்” என்றாள். ஒண்ணும் தர வேண்டாம், அதோ அவர் சொன்னா நான் அப்பிடியே கட்டுப்படுவேன் என்று ராமசாமியை காட்டினாள். லேசர் வியக்க அம்ஜம் வியர்க்க , ராமசாமி பதறாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தான்.”சரி ப்ளீஸ் என்ன கொடுக்கணும் சொல்லுங்கோ” என்றாள் லேசர்.

குதிரை பேச்சை மாற்றியது "வாட் ஆர் யூ "? லேசர் மெல்லிய குரலில் "HEAD -DEPT OF LASER APPLICATIONS -- MINISTRY OF DEFENCE - DELHI என்று சொன்னாள் . உடனே குதிரை 'NICE -உங்க CARD -IF  NOT  OF SECURITY CONCERNS -கொடுங்கோ . இல்லேன்னா AT LEAST போன் NUMBER எனக்கேட்டு இரண்டையும் வாங்கிக்கொண்டு நமஸ்தே என்று விடை பெற்று கழுகுக்கு கை  அசைத்தாள். கையில் பணப்பையுடன் வந்த வேதாந்தம் ஒண்ணும் வேண்டாமாமா என்று விக்கித்தான்.

இப்போது முதல் முறையாக லேசர்,  ராமசாமியை “சார்” என்று அழைக்க ராமசாமி பவ்யமாக எழுந்து நின்று என்னம்மா? என்றான்

அவா ஒண்ணும் வாங்கிக்கமாட்டேங்கறாளே ரொம்ப EMBARRASSING ஆ இருக்கு என்று இழுத்தாள்.

"ஒண்ணும் வேண்டாம், .வாங்கிக்கணு ம்னா அவ வாங்காம போகவே மாட்டா. இன்னொரு FRIEND கிடைச்சாச்சுன்னு நினைச்சுக்கோங்கோ என்று கழுகு சமாதானப்படுத்தினான் 

சிறிய ஊர்களில் வாழும் மக்கள் நட்புக்கு தரும் மதிப்பில், பணம் மதிப்பிழந்து போகிறதென்பது உணர்த்தப்பட்ட தருணம் அது.

இப்போதுஅனைத்து வேலைகளையும் முடித்துவிட்ட கேப்டன் குக் பணம் பெற்றுக்கொள்ள காத்திருக்கிறான்.ஒரு தட்டில் பழங்கள் பக்ஷணம், சம்பாவனை அனைத்தும் தூக்கிக்கொண்டு வந்த லேசர் "அதி அற்புதமா எல்லாம் செஞ்சுட்டேள் . எனக்கு பேச வார்த்தையே இல்ல" என்று குக்கிடம் சொல்லிக்கொண்டே வேதாந்தத்தை அழைத்தாள் .

கேப்டன்குக்  நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆஸீர்வாதம் பண்ணுங்கோ என்றான்.வே-வி நெகிழ்ந்தனர். சேவித்து எழுந்து குக் " என் தங்கை பெண் கல்யாணத்துக்கு இருக்கா. உங்கள மாதிரி பெரியவா ஆசீர்வாதம் இருந்தா அவளைக்கரை ஏத்திடுவோம். நீங்களோ உங்க சொந்தக்காராளோ ஆதரவு கொடுத்தா போதும் , நாங்க உழைச்சு முன்னுக்கு வந்துடுவோம் என்று கை  கூப்பி தனது ஊதியத்தை வாங்கிக்கொண்டு விடை பெற்றான்

அடுத்தடுத்த நிகழ்வுகள் மள  மள  என்று நடந்து ராமசாமி தம்பதியினர் வே-வி தம்பதியைப்பார்த்து ஜாக்கிரதையாப்போய்ட்டு வாங்கோ அடுத்த தரம் ஒரு நாலு நாள் ஆத்தில தங்கற மாதிரி வாங்கோ என அழைப்பு விடுத்தன ர். ஒரு நிமிஷம் என்ற வேதாந்தம் ஓடிப்போய் ஒரு தட்டில் வேஷ்டி புடவை ஒரு செவ்வகபாக்கெட் என்று லேசர்  கையில் கொடுத்து வைத்து தனது இரு கைகூப்பி ஆசீர்வாதம் பண்ணுங்கோ என்றான்.

நான் என்னடா உனக்கு ஆசீர்வாதம் பண்ண -இதோ பெருமாள் இருக்கார் சேவி என்று சொல்லிவிட்டு, இதென்ன பாக்கெட்?

வே-வி இருவரும் திகைக்க கழுகு சொன்னான்

பணக்கட்டு, மோதிரம் சங்கிலி னு எதையாவது கொடுத்து எங்களை       சின்னவாளா க்கிடாதே

வேதாந்தம் "நான் உனக்கு ஏதாவது செய்ய ஆசைப்படறேன்” என்றான்.

கழுகு சொன்னான் "அப்படியா இதோ இங்க மூலைல நிக்கறானே கஸ்தூரிரங்கன்   அவனுக்கு ஒரு நிரந்தர வருமானத்துக்கு ஏதாவது செஞ்சா ஒரு குடும்பத்தை கரையேத்தின புண்ணியம் வாய்க்கும் அதைச்செய் என்று கறாராக சொல்லிவிட்டான்.

 கஸ்தூரிரெங்கனின் தகுதிகள் பேப்பர் வடிவில் வேதாந்தம் கைகளில் இப்போது

விடை பெற்றனர் நண்பர்கள்   .

அதிகாலை டெல்லி flight ல் கேப்டன் ராகுல் சர்மா "IN A  MINUTE FROM NOW   WATCH  DOWN TO  HAVE A  GLIMPSE OF SRIRANGAM ISLAND அண்ட் TEMPLE " என அறிவித்தார் . 

மிகுந்த கனத்த மனதுடன் பறந்து கொண்டிருந்தனர் வேதாந்தம் குடும்பத்தினர்.டெல்லி நோக்கி.                                                                               இறைவனின் கருணை எவ்வளவு மகத்தானது!

                                                                          சுபம்

நன்றி யுடன் அன்பன்  ராமன்












WILLIAM BLAKE -5

  WILLIAM BLAKE -5                     Quotes-5 The tigers of wrath are wiser than the horses of instruction This quote chooses Tiger an...