Saturday, April 8, 2023

RENGAA RENGAA -11

RENGAA RENGAA -11 

ரெங்கா ரெங்கா -11

11-40 க்கு மாடசாமி டூட்டி ஆஃபீசரை பார்த்து தனது ரிட்டர்ன்  பயணத்தை ஞாயிறு இரவு ராக்போட் ட்ரெயினுக்கு வாங்கிக்கொண்டார். அதிகாரி மாடசாமியிடம் ரொம்ப தேங்க்ஸ் சண்டே நைட் ட்ரெயின் வேண்டாம் வேண்டாம் னு ஓடறா எப்பிடி சமாளிக்க போற ன் னு கவலையா இருந்தது நீங்க சண்டே கேட்டது எனக்கு ரொம்ப ரிலீஃப் அப்பாடான்னு இருக்கு என்றார் [விழுப்புரம் நரசிம்மன் ] நேரம் காலம் சரியாய் இருக்கும் போது எது செய்தாலும் எல்லாருக்கும் பெரிசா தோணும் என்று மாடசாமி மனசில் நினைக்க மாசா வைத்தேடிக்கொண்டு ரா  .சா வர , வாங்கோ ராமசாமி சார் என்றார் நரசிம்மன் [அவர் முன்னர் திருச்சி ஜங்க்ஷனில் இருந்தவர்]. ராமசாமிக்கு திரும்பிய பக்கமெல்லாம் நட்பு வட்டம். நரசிம்மனுக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றனர் .

12 35 க்கு ஐயர் மெஸ்ஸில் மூவரும் நுழைய இப்போது ஐயரும் அவர் மகனும் அன்புடன் வரவேற்று , க ரெ வைப்பார்த்து பரீட்சை பாஸ் பண்ணிட்டேங்களா  என்று ஐயர் மகன் விசாரிக்க க ரெ , ஓ என்று தலை ஆட்டினான். இன்னிக்கு         காலி ப்ளவர் ப்ரை , மற்றும் மிளகு ரசம் [ஊரெல்லாம் வைரஸ் ஜுரம், அதுக்கா கவே இது ] இந்த சார் புதுசா இருக்கார் உங்க சொந்த அண்ணாவா ? என்று ராமசாமி குறித்து வினவ , மாடசாமி எங்க அண்ணா , குரு , வழிகாட்டி எல்லாம் னு சொல்லலாம் என்றார். இன்னிக்கு மெஸ்ஸுக்கு கூட்டம் லேட்டா தான் வரும் எல்லாம் நங்கநல்லூர் உத்சவம் பாக்க போயிருக்கும் 2.30 க்கு மேல தான் வரும் . அப்புறம் இன்னிக்கு சாயங்காலம் கடை லீவு , நீங்க வேற எங்கயாவது பாத்துக்கறேளா இல்ல உங்களுக்கு மட்டும் ஏதாவது பண்ணி தர சொல்லட்டுமா என்றார் பெரியவர். புதுசா மனுஷா வர நாள் ல இப்பிடி நேர் ரதே னு எனக்கே வருத்தமா இருக்கு. சம்பளக்காராளுக்கு இன்னிக்கு லீவு விடறதாக தீர்மானிச்சாச்சு , அவனவன் கிளம்பத்தயாரா ரெடியா இருக்கான். 3.30- 4 மணியோட சவாரி விட்ருவாங்கள்  என்றார் அய்யர்..

மாடசாமி சொன்னார் ஒன்னும் வேணாம் சாமி , இவனுக்கு இன்டர்வ்யூ 2.00 மணிக்கு [ரயில்வே ஆஃபீஸ் ல ] அவனுக்கு உங்க கையால  சாப்பாடு போட்டு ஆசீர்வாதம் பண்ணுங்க. அப்படியா சரி நானே பரிமாற ரே ன் . ஆங் சொல்ல மறந்துட்டேனே கல்கத்தா லே ந்து நம்ப சொந்தக்காரன் சுந்தரம் வந்திருக்கான். சாப்பாடு கொண்டுவரச்சொல்லிருக்கான் , நான் தான் போகணும் [மெல்லிய குரலில் அவன்தான் இன்டர்வ்யூ கமிட்டி ச்சேர்மன்] - நான் ஒரு வார்த்தை காதுல போட்டுடறன் -யோக்கியதை சரியா இருந்தா உதவி பண்ணுடா னு சொல்லிட்டா த் தட்டாம பாத்துருவான்]. எல்லாம் மலைக்கோட்டை பிள்ளையார் சித்தம் இல்லேன்னா எனக்கு தெரிஞ்சவா  எல்லாம் ஒரே காரிய நிமித்தமா இங்க எப்படி வர முடியும் ? என்று போட்டோவில் இருந்த பிள்ளையார் மற்றும் அகிலாண்டேஸ்வரி படங்களில் பார்த்து கண்ணீர் மல்க கை  கூப்பினார்  அய்யர். இதெல்லாம் யாருக்கும் தெரிய வேண்டாம் , ஆயிரம் பேர் என்னென்னவோ ப்ராட் பண்றான் நான் வெறும் ஹெல்ப் தான் கேக்கப்போறன் அதுவும் எனக்கில்லை , சினேகிதாளுக்கு -அதுல எந்த அதர்மமும் இல்லை. என்று மிகுந்த அக்கறையுடன் பரிமாறினார் அய்யர்.

சாப்பிட்டு விட்டு உரிய தொகையைக்கொடுத்துவிட்டு புறப்பட ஆயத்தமாயினர். அப்போது அம்பீ என்று க. ரெ வை அழைத்து அவன் பெயரை கேட்டு குறித்துக்கொண்டு ரயில்வே ஆபீஸ் அதிகாரிகளுக்கு பெரிய டிபன் காரியர்களில் உணவு எடுத்துக்கொண்டு 2 சிப்பந்திகளுடன் கிளம்பினார் அய்யர்.                    போகும் முன் க ரெ வை நன்னா இருடா கொழந்தே என்று வாயார வாழ்த்தினார் . " நன்னா இருடா கொழந்தே' என்ற வார்த்தைகள் அம்புஜத்தை நினைவு படுத்தியது இருவருக்கு.

2. 40 க்கு கஸ்தூரி ரெங்கன் அழைக்கப்பட்டான் இந்திய ரயில்வே யின் உயர் அதிகாரிகள் 4 பேர் மற்றும் இடை நிலை அதிகாரிகள் 4 பேர் , சென்னை கோட்ட நிர்வாகிகள் மூவர்  [தமிழ் மட்டும் அறிந்த வர்களுக்கு உதவியாக ] அநேகமாக கேள்விகளுக்கெல்லாம் உரிய பதில் சொன்னான் க. ரெ .                                               உனது ஆங்கில பேச்சு ஆற்றலை மேம்படுத்திக்கொள் என்றார் உயர் மட்ட அதிகாரி சுந்தரம்.. அவர் க ரெங்கனை  நன்றாக அளந்து வைத்துக்கொண்டார். ஏகமனதாக அநேகருக்கு இந்தப்பையனை தேர்வு செய்யலாம் என்ற நிலைப்பாடு ஏற்பட்டது . SHOULD WE CALL HIM  AGAIN TOMORROW ? என்று அதிகாரிகளுக்குள்  பேசிக்கொண்டனர்.  . அப்போது சுந்தரம் [சேர்மன்] சொன்னார். “The boy is eminently suitable ; but  as a  committee "we should not be  accused of partiality or favouritism , we will duly  screen all the best eligible candidates” . So, we will ask him to face the 'hands on ' session tomorrow ".

OK என்றனர் ஏனையோர் .சென்னை கோட்ட அதிகரி தங்கவேலு  "தம்பீ நீங்க காலை 11.00 மணிக்கு ஒரு சிறிய ட்ரெயினிங் செக் அப் அட்டெண்ட் பண்ணுங்க என்றார்

சரி சார் என்று வணங்கி விடை பெற்றான் கஸ்தூரி ரெங்கன்  சுந்தரம் அவனை ஏற இறங்க பார்த்தார். வணங்கி விடை கொடுத்து அனுப்பினார் சுந்தரம்.

4.00 மணிக்கு ரூமுக்கு வந்து நடந்தவற்றை இரண்டு சாமிகளுக்கும்  தெரிவித்தான் கஸ்தூரி ரெங்கன்,

மணி 4. 15  ஏண்டா என்னமோ ஜீராபோளி , ராயர் மெஸ் ஸுனு என்னை கிளப்பினயே இப்ப மூச்சு காட்ட மாட்டேங்கறே நீ எத்தன்  டா  டேய் என்றார் ராமசாமி.                                             “ நானாடா எத்தன் , நீ எமகாதகன் டா “. -- மாடசாமி

இப்ப என்ன ஜீரா போளி தானே போவோம்  வா என்றார் மாசா. அதெல்லாம் இல்ல , ராயர் மெஸ் அது தான் எனக்கு போகணும். . அதென்ன ராயர் மெஸ் முக்கியமா , போளி  முக்கியமா என்றார் மாசா

ரா சா " போளி , கீளி ளெல்லாம் ராயருங்கள அடிச்சுக்க முடியாதுடா என்றரர் . அப்பிடியா என்றார் மாடசாமி.    ரா சா கேட்டார் “.ஒனக்கு ஞாபகம் இருக்கா நம்ம க்ளாஸ் ல ராகவேந்திரன் ரகோத்தமன் என்று 2 பேர் இருந்தானே ? ராகவேந்திரன் தெரியுது இன்னொர்த்தன் ? என்றார் மாசா . வாயில முன் வருசையிலேயே  20 பல்லோட இருப்பானேடா அவன் தான் டா ரகோத்தமன் . அவனுக ரெண்டு பேரும் சரியான போளிப் பண்டாரங்கடா . சும்மா விளையாட்டா போளி குடுறா னு கேட்டால் இத்துனூண்டு பிச்சு குடுத்தாண்டா , என்ன டேஸ்டு அம்மாடியோவ், இப்ப நெனச்சாலும் ஆசையா இருக்குடா என்றார் ராமசாமி . அடுத்த 20 நிமிடங்களில் 4.40 க்கு மைலாப்பூர் ராயர் மெஸ்ஸில் மூவரும் ஆஜர் .

ராயர் --ஜீரா போளி தரட்டுமா என்றார் . குடுங்கோ என்றார் ராமசாமி. அது என்ன நெய்யா தேனா , இரண்டுமா அப்படி ஒரு சுவை தலைக்கு 4 போளியை உள்ளே தள்ளி விரலை நக்கினர்.. ஒரு தட்டில் ராயர் புது மிக்ஸ்சர் தந்தார் அற்புதமான சுவை. இந்த கடையை எப்பிடிடா பிடிச்ச என்றார் ராமசாமி.

உன்ன மாதிரி எங்க பாட்ச் அய்யருங்க இங்க வாங்க சார் னு அடிக்கடி கூட்டிக்கிட்டு வந்து நான் இப்ப உங்கள கூட்டிகிட்டு வந்திருக்கேன். பின்னர் காபி அருந்தி மன நிறைவுடன் நாளைக்கும் வரலாமா என்று ராமசாமி மாடசாமியைக்  கேட்க,  சார் நாளைக்கு காலம்பரையோட லீவு சார் சன் டே இல்லையா என்றார் ராயர். ராமசாமி முகம் வாடியது . நாளைக்கு வேற ஒரு இடம் போவோம் டா என்றார் மாடசாமி .

தொடரும் அன்பன்  ராமன் 

Friday, April 7, 2023

A COROLLARY TO PHOTOGRAIPHY - 1

 A COROLLARY TO PHOTOGRAIPHY - 1

Whatever has so far been presented in the name ‘Photography’ may need some clarifications over the typical terms in vogue in the trade.

ASA = AMERICAN STANDARDS ASSOCIATION [GUIDE LINE] on the adoption of Film speed for customers to recognize ‘the sensitivity’ of the film. The scaling is Arithmetic in calculation ; it gives a straight forward meaning like a film rated at 400 ASA is double as sensitive as that of one rated at 200 ASA and 4 times that of one rated at 100 ASA. The British film industry fell in line using BS [British standards] as their norm .100 ASA =100 BS .

The GERMAN PHOTO INDUSTRY had its own scale –THE DIN =Deutsche Industrie normen which is designed on Logarithmic scale. The numeral of the film rating is with a superscript [o] indicating degree sign to signify its log status. Being on a log scale, the numbers do not indicate relative sensitivity features among films. The following examples would explain the difference between the Arithmetic [ASA] and the Log [DIN] scale. The two ratings are presented side by side , so that the sensitivity of films –as expressed by the2 schemes can be known. ASA /DIN read as under:

100ASA/ 21ODIN; 200 /240; 400/ 27O,  50/ 18O;  25 /15O  800/ 30O and so on.                               An increase of 3 units on DIN scale means doubling of film speed unlike in ASA scale where numbers are easier to comprehend.

HYPO =Sodium thio sulphate –the fixer

VIGNETTING: Loss of image details along the outer rim of the negative [DUE TO SOME LENS ABERRATION].

PINK WASH  The act of applying transparent ‘pink dye’ to shield from light passage through negative to minimize the effect of deep darkening in the positive image.

SPOTTING : An act of blocking holes/ scratches on negatives with a grey opaque dye to prevent faithful transfer of blemishes to final positive during printing.

 K.Raman

 

Thursday, April 6, 2023

RENGAA RENGAA- 10

 RENGAA RENGAA- 10

ரெங்கா ரெங்கா -10

நினைத்தபடி வெள்ளி இரவு ராக்போட் வண்டியில் புறப்பட்டது ரயில்வே கோஷ்டி. மாடசாமி டிக்கட் செக் பண்ணிட்டு வரேன் என்று கிளம்ப , ராமசாமி டேய் போர் அடிக்குதுடா என்றார்.

மாடசாமி சொன்னார் இதோ அந்த சீட் ல என்னோட கருப்பு கோட் இருக்கு அதை எடுத்து மாட்டிக்க , நீயும் என்னோட டிக்கட் டிக்கட் என்று கத்திகிட்டே வா, அதுக்குள்ள சீரங்கம் வந்துரும் உங்கூர் மாமிகள் வருவாங்க உனக்கு தான் எல்லாம் அத்துப்படியே அந்த மாமிங் களோடஅரட்டை அடிச்சுக்கிட்டே வா , அவன் பார் [க ரெ ] தூங்கிட்டான் -நீ போர் அடிக்குதுங்கற என்று ராமசாமியை கிண்டல் அடித்தார் மாடசாமி .  இந்த இடத்துல 4 சீட் பிடிச்சு போட்டிருக்கேன் நம்ப 3 பேர் தான் இருக்கோம் உனக்கு கை குறையுதுன்னா ஒரு மாமியைப்பிடிச்சு ஒரு சீட்ல இடம் குடுத்து அரட்டை அடி நான் வந்தூர் ரென் என்றார் மா சா. டேய் வேணாம் வேணாம் மாமிக்குப்பதிலா நான் வரேன் னு மாமா வந்து நம்பள அறுப்பான் இந்த வேலையே வேண்டாம் நீ போயிட்டு வா நான் தூங்கறேன் என்றார் ராமசாமி . அப்படி வா வழிக்கு நான் போயிட்டு கட கடனு வேலைய முடிச்சுட்டு வரேன் . எல்லாம் ஸ்ட்ரெயிட் டிக்கட் தான் சீரங்கத்தோட வேலை முடிஞ்சுடும் நானும் தூங்க வந்துருவேன் நல்ல தூங்கு எவனாவது ஏதாவது கேட்டா என் பேரை சொல்லு செதறி ஓடிருவான் , தூங்கு வந்துர்றேன் என்று பேப்பர்களுடன் கிளம்பி மள ம ள னு சுறுசுறுப்பா வேலையில் இறங்கினார் மாடசாமி .  மா சாவின் சுறுசுறுப்பே தனி அழகு. சீரங்கம் தாண்டி 12 நிமிடங்களில் எல்லா செக்கிங்கும் முடித்துவிட்டு பைலை பெட்டியில் போட்டு பூட்டி விட்டு , தூங்காமல் கிடந்த ராமசாமியை இந்தாடா சூடா பால் சாப்பிடு என்று flask இல் இருந்து ஊற்றிக்கொடுத்தார் மா சா. ஏதுடா பால் என்றார் ராமசாமி . தில்லைநகர்ல ஒருத்தர் நைட் ஷாப் வெச்சிருக்கார் பால் சூப்பரா தருவார் சாப்பிட்டு பார் என்றார் மாசா ,டேய் நிஜமாவே சூப்பரா இருக்குடா பால், தேங்க்ஸ் என்று ராமசாமி நண்பனின் பாசத்தை எண்ணி மகிழ்ந்தார். மா சாவும் பால் அருந்தி பிளாஸ்க்கை கழுவி வைத்து விளக்கை அணைத்து கதவினைப்பூட்டி படுத்துவிட்டார்.

செங்கல்பட் வரும் நேரம் கண் விழித்தார் மாடசாமி . தெரியாத்தனமாக இருவர் செங்கல் பட்டில் வண்டி ஏறினர். வாங்கடா இங்க எங்க ஏர்றீங்க என்று மாடசாமி பிடித்து எடுங்கடா டிக்கட் பாப்போம் என்றார். மலங்க மலங்க விழித்தவங்களை ஆளுக்கு 2 அறை விட்டு பெட்டியில் இருந்து இறங்க வைத்தார் மாசா. இப்படித்தான் ரிசர்வேஷன் பகுதியில ஏறி பாசஞ்சர் பெட்டியைத்தூக்கிக்கிட்டு தாம்பரத்துல இறங்கி ஓடிரு வானுங்க என்று பயணிகளிடம் எச்சரித்தார் மாசா. . தாம்பரத்தில் பெரும் கூட்டம் இறங்கியது , இன்னோர் கூட்டம் மாம்பலத்தில் இறங்கியதும் நுங்கம்பாக்கம் பகுதியில் இருவரையும் எழுப்பி , பல் துலக்கச்சொல்லி தானும் பல் துலக்கி எழும்பூர் நிலையத்தில் இறங்கி மாடியில் சூப்பர் ரூம் பிடித்து உடமைகளை வைத்து விட்டு எதிர்ப்புறம் வசந்த பவனில் சூடாக காபி அருந்தி பின் மூவரும் வெந்நீர் குளியல் முடித்தனர் தம்பி அந்த ரயில்வே ஆடரைக்கையிலஎடுத்துக்க என்றார் மாசா.  கீழே இறங்கியதும் தனது ஆஸ்தான ஆட்டோவை பிடித்து மாடசாமி " தம்பி இந்த பீச் ரோட்லயே போய் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப்போ ; சாமி பாத்துட்டு ராதா மாமி மெஸ்ஸுக்கு போவோம் நீயும் வா என்றார் மாடசாமி.

பார்த்தசாரதி கோயிலில் முதல் வாயில் தாண்டியதும் குப்பு பட்டர்போல் ஒருவர்  தென் பட்டார் ராமசாமிக்கு. “சுவாமி --தேவரீருக்கு குப்புபட்டர் னு தானே திருநாமம்” என்று ராமசாமி வினவ , பட்டர் “க்ஷமிக்கணும் தேவள் யார்னு பிரஸ்தாபிக்கலாமோ?  என்றார்.

“அடியேன் சுந்தராச்சாரி சுவாமி பௌத்ரன்” என்றார் ராமசாமி. ‘ஸ்வாமிக்கு ஸ்ரீரங்கமா?” என்றார் பட்டர். ஆமாம் என்றார் ராமசாமி இப்ப ஞாபகம் வரது; தேவரீர் பாட்டனார் அடியேனோட பெரிய தமயனுக்கு மாமனார் ; சரி சுவாமி திருமேனி பாங்கா?  என்று பட்டர் கேட்க , “பரம சௌக்கியம்” என்று ராமசாமி பதில் சொல்ல மாடசாமி     யு ம் கஸ்தூரி ரெங்கனு ம் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல நின்றனர் வைஷ்ணவர்கள் ஸம்ப்ரதாயத்தமிழ் கண்டு. .

பெருமாள் சேவை ஆயடுத்தா? என்றார் பட்டர். ‘இனிமே தான் தேவரீர் அனுகிரஹத்துல ஆகணும்” என்றார் ராமசாமி. . ‘பேஷா’ என்றார் பட்டர். .

மாசா , ராமசாமி காதில் கிசுகிசுக்க ரயில்வே கவரை பட்டரிடம் தந்து ராமசாமி சொன்னார். "இந்த பிள்ளையாண்டானுக்கு ரயில்வே ல வேலைக்கு இன்டர்வ்யூ வந்திருக்கு பார்த்தசாரதி அனுகிரஹத்துல வேலை காயமாகணும் , மூலவர் திருவடி அனுக்கிரஹம் சித்திக்க, சுவாமி உபாயம் பண்ணித்தரணும் னு அடியோங்கள் விஞ்ஞாபனம்” ‘இந்த லெட்டர் மூலவர் திருவடி ஆக்ஞை  சித்திச்சு கிடைக்கப்பண்ணணும்" என்றார் ராமசாமி.

'ரொம்ப சந்தோஷம் , இதோ திருவடில சேத்துட்டு அர்ச்சனை பண்ணித்தரேன் என்றார் பட்டர்.. ராமசாமி பவ்யமாக தலை குனிந்து நின்றார்.                                     [மாடசாமி ஐயோ இவன் பலே கில்லாடி பட்டரையே ஒரு வினாடில வளைச்சுப்போட்டுட்டானே , பொம்பளைங்கள் ல்லாம் ஈஸியா பிடுச்சுடுவான் இவன் என்று மனதில் வியந்தார்].                                                                                         தீர்க்கமான அர்ச்சனை , ஸ்தலபுராணம் சொல்லி பார்த்தசாரதி மீசையை தெளிவுபடுத்த தீபம் காட்டி சிறப்பான சேவை செய்வித்தார். ரயில்வே லெட்டரை பையனிடம் பஞ்சாதி சொல்லி கையில் கொடுத்தார் பட்டர்.                                      தட்டில் 100/-ரூபாய் சம்பாவனை செய்தார் ராசா. பட்டர் வாசல் வரை வந்து வழி அனுப்பிவைத்தார்.

ஆட்டோவில் ராதா மாமி மெஸ்ஸுக்கு விரைந்தனர் மணி காலை 7.50 . பொங்கல் வடை சூடாகவும் ருசியான சட்டினி சாம்பாருடன் சுவைத்து மன நிறைவு பெற்றனர் நால்வரும்  ஆட்டோ டிரைவர் உட்பட. பேசாம டி டி ஈ ஆ இருந்திருக்கலாம் போலிருக்கே இப்படி ஊர் ஊரா வித விதமா சாப்பிட என்றார் ராமசாமி. அடுத்த இடம் மயிலை வெங்கடேச பெருமாள் கோயில் . அங்கும் நல்ல சேவை. மணி 9.20 . சரவண பவனில் காபி முடித்து 10.20 மணிக்கு ரூம் திரும்பினர். 12.30 மணிக்கு ஐயர் மெஸ்ஸுல போய் சாப்பிடுவோம். தம்பி நல்ல கவனமா இன்டர்வ்யூ பண்ணு இப்ப தூங்குவோம் என்றார் மாடசாமி.

தொடரும்      அன்பன் ராமன்

 

Wednesday, April 5, 2023

 PHOTOGRAPHY-45 -                                                                                                                                                        PRINTING

In traditional system of photography the final output delivered to customers is the PRINT[S] in individual pieces or as a collective volume-The Album . Generally the album is compiled with photos that together represent an event or occasion –personal or official. In any case the customer is keen to view the final picture while [s]he has no special value for the Negatives generated on the occasion. In fact, the negative is the actual treasure in that it serves as the template for any number of photo prints through all its life. For photos whose negatives are not retrievable, the worker makes a new negative from the photo. This step of making a new negative from a photo is named ‘Re-Copy’. The negative so generated can help in making additional copies. However a recopy product lacks the solidity as it is derived from a flat 2 dimensional picture unlike the negative  from a three dimensional human in flesh and blood. Be that as it may, transferring the image details from a negative to a paper is Printing.

The negative is a transparent record viewed through transmitted light .                                                 The print  is  an  opaque  record  viewed  by  reflected  light

PRINT CATEGORIES                                                          a] Contact prints   b] Enlargements  Both are done in dark room under “Safe light” [red bulb].  Contact prints are made from negatives held in intimate physical contact between the negative and the paper used for printing . The physical intimacy between them  should be such that no inter layer of air occurs between them. It is ensured by inserting the negative paper assembly between thick glass plates and held firm along the edges; being within the glass frame, it permits ‘printing light ‘ to travel throughthe negative  and reach the recipient paper. The light filtered through the negative casts impression [of light] upon the sensitive surface of the paper for a predetermined lengthof time usually maintained by oral counting 1, 2, 3, 4 etc in uniform pace. After the time , the negative and the paper are separated. Still under red light and allowed to develop through 1] Developer 2] Stop bath.3 ]Fixer and 4 ] Final wash 5 -6 times in fresh water before drying .

 

Enlargements are made under “Safe light’ [Red]

Enlargements are made using a special OPTO-MECHANICAL device the Enlarger . The enlarger has a ‘light proof’ housing from where light emerges through a pair of Plano-convex glasses together functioning as "Condenser" It helps to deliver a concentrated beam of light evenly spread over the negative and illuminates the picture area on the negative. Light through the negative is fed through a quality lens- ‘The Enlarger Lens’. The lens can be tuned to deliver a focussed beam of light on to the sensitive surface of the printing paper. The ratio of magnification helps to ‘enlarge’ the image to typical size =Post Card, Quarter, Cabinet , Full plate, 12 X 10, 22 X 18, 24 X 20 inches and so on. Exposure needed is estimated by trial strips and the best product obtained is the most appropriate exposure applied by oral counting 1, 2, 3, 4 etc in uniform pace.

The ‘exposed’ paper is processed through the same steps as during contact printing. All operations are doned under”Safe light” [Red]. B&W photo papers are not sensitive to red light and so “Red” safe light helps visibility in the dark room without affecting the paper. BUT FILMS, COLOUR FILMS, COLOUR PAPERS CAN BE HANDLED ONLY IN TOTAL DARKNESS.

Caution :                                                           Negative and paper should be placed such that the sensitive surfaces of film   and paper face each other. If paper is WRONGLY ORIENTED, NO IMAGE IS FORMED ON PAPER . If negative is WRONGLY ORIENTED, THE RESULTANT IMAGE SUFFERS ‘THE EFFECT OF MIRROR IMAGE’; IT MEANS the wrist watch shows up on a wrong hand, the parting of hair changes ends, the sarees of women flow along wrong shoulder[MADISARS of Mamis render an interchange of IYERS-IYENGARS and VICE-VERSA.]

That in broad is the story of printing in traditional scheme of film photography.

There are several finer controls in making prints. Already the topic has had a lion’s share of space and time. With no indication of any inclination to explore the scheme of colour photography , it is honourable to stop at this point.

Thanks to all.    K.Raman

MAN PROPOSES………

  MAN PROPOSES……… மனிதன் நினைக்கிறான்……. .... Man proposes, God disposes     என்றொரு ஆங்கில வாசகம் உண்டு. உண்மையிலேயே பெரும் பொருள்பொதிந...