Friday, September 1, 2023

TEACHERS’ ROLE-5

 TEACHERS’  ROLE-5

ஆசிரியப்பணி-5

ஒரு ஆசிரியர் தனது ஆளுமையை சிறப்பாகப்பதிவு செய்ய நிறைய வாய்ப்புகள் உண்டு. அவ்வாய்ப்புகளை தேடிக்காத்திராமல் , அன்றாடம் ஈடேற்ற , மிகச்சிறந்த சூழல் வகுப்பறைகளே என்பதை அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும்.. பெரும்பாலும் ஆளுமையின் வீரியத்தை நிர்ணயிப்பது 1] punctuality எனும் நேரம் தவறாமை 2] தோற்றத்தில் ஒரு எளிய ஆனால் கம்பீர உடை [சுத்தம், கசங்கல் கள் இல்லாமை , அனைத்து button களும் பிணைக்கப்பட்டமை,3] செயலில் சுறுசுறுப்பு 4] நினைவாற்றல் [உரிய நேரத்தில் சரியான தகவலை நினைவூட்டுதல்] இவை அடிப்படை ஆயுதங்கள் ; இதர அடையாளங்கள் 5 மாணவர்களிடையே வேற்றுமை பாராட்டாது செயல் படுதல் மற்றும் 6 தகுதி அடிப்படையில் மட்டுமே விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல். . இவைகளை  கடைப்பிடிப்பதில் 7 ஏற்ற இறக்கம் இல்லாது செயல் பட்டால் அவர் "குன்றாத ஆளுமை உடையவர்" என்று அனைவரும் அங்கீகரிப்பர் .8 ஆளுமை நிர்வாகத்தில் சமரசங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

நேரந்தவறாமை என்பது ஒரு மறைமுக கட்டுப்பாடு. அது என்ன ? உரிய நேரத்தில் வகுப்பறைக்கு வந்து விட்ட ஆசிரியன் ஊர்க்கதைகளை பேசிக்கொண்டிருந்தால் , அவரது நேரந்தவறாமை ஒரு கேலிப்பொருள் ஆகும் , மாணவர்கள் நேரந்தவறாமையின் முறையான பலன் கிட்டாமல் , கவனச்சிதறல் மற்றும் பிற ஒழுங்கீனங்களை பின்பற்ற வழி வகுக்கும். மாறாக பாடத்தில் கவனம் செலுத்தினால் , மெல்ல மெல்ல அனைவரும் ஆசிரியரின் போதனைகளை செவிமடுப்பர். மேலும் மனம் ஒன்றிக்கற்கும் போது இயல்பான ஐயப்பாடுகள் எழும்; அப்போது உரிய விளக்கம் தந்து , மேலும் தொடர ஆசிரியர்  புறக்கணிக்க வொண்ணாத செயல் வீரன் ஆகிறார்.

இதன் விரிவாக்கம் தான் கற்பித்தல் என்னும் ஆசிரியப்பணி. கற்பித்தலில் உள்ள குறைகள் பெரும்பாலும் தனி மனித பலவீனங்கள்  என்றே வகைப்படுத்தலாம்.

1. SYLLABUS -என்ற பாடப்பகுதியை முடிப்பதில் நாட்டம் ;ஆனால் அதை முறையாகச்செய்யாமல் , விரைந்து முடித்த பின் என்ன பலன்? இதற்கு கடமை ஆற்றுவதை விடுத்து , கடனுக்கு செய்தல் என்று பெயர் இது வெறுப்பையும் , விரக்தியையும் ஏற்படுத்தி , குறிப்பிட்ட பாடப்பகுதி [SUBJECT ]மீது அடங்காத கோபத்தை வளர்க்கும்

2 ஒரே SUBJECT ஆயினும் சில CHAPTER களை விரிவாகவும் , பலவற்றை நாட்டமின்றியும் விரைந்து கடப்பதும் ஆசிரியரின் திறமையின் மீது விமரிசனம் தோன்ற வழி வகுக்கும். "இவருக்கு அந்த SUBJECT சரியாக தெரியாது அதனால் ஒப்பேற்ற முயற்சிக்கிறார் " இது மாணவரிடையே ஆழமாகபரவி , குறிப்பிட்ட SUBJECT க்கு 'அந்த' ஆசிரியர் வருகிறார் என்றால் ,அந்த வகுப்புகளை புறக்கணிக்க தயங்கமாட்டார்கள் .

3 சந்தேகங்கள் குறித்த வினாக்களுக்கு இயன்றவரை முழுமையான விடைதர முயற்சித்தல் நலம் . கேள்விகேட்பதை தன மீது தாக்குதல் என்றெண்ணும் எவரும் ஆசிரியப்பணிக்கு உற்றவர் அல்லர்.விடை தெரியவில்லை எனில் பின்னர் விளக்குவதாக சொல்லி, அதே போல் விளக்கிட ஆசிரியர் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுவார் என்பதை கருத்தில் கொள்க .

4 நிதானமாக விளக்கங்கள் கிடைக்கும் போது மாணவரின் கற்றல் ஈடுபாடு வலுப்பெறும்.

5 குரலை உயர்த்தி , தெளிவாக உச்சரித்து பேசினால் கண் அயர்தல் நிலை விரட்டி அடிக்கப்படும்.

6 மதிய வகுப்புகளில் தோன்றும் ' LULLA BY ' உணர்வுக்கு பல ஆசிரியர்களின் வறட்டு முறைகளே பெரும் காரணம்.

7 அன்றாடம் , வகுப்பின் இறுதி 3 நிமிடங்களில் அன்றைய பாடப்பகுதியை சுருக்கமாக தொகுத்து சொல்லுங்கள்

                                                                                  அல்லது

8 அடுத்த வகுப்பில், சென்ற வகுப்பின் தகவலை நினைவு கூர்ந்து மேலே தொடருங்கள் ; சென்றவகுப்பிற்கு வாராதவரும் கூட மனதால் பாடத்தை ஏற்க முயல்வர்.

9 ஒவ்வொருநாளும் இறுதியில் "ஏதேனும் ஐயப்பாடு உள்ளதா என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள் ; தேவைப்பட்டால் அன்றோ அடுத்த  வகுப்பிலோ விளக்குங்கள்

10 அனைத்து புதிய சொற்களையும்  தெளிவாக கரும் பலகையில் எழுதி , மாணவர்களை குறித்துக்கொள்ள அறிவுறுத்துங்கள்.. இவை அனைத்தும் ஆசிரியரை முழுமை அடைய உதவும்.

பிற முன்னேற்பாடுகள் குறித்து பின்னர் விவாதிப்போம் .அவை வகுப்பிற்கு வருமுன்  பின்பற்றப்பட வேண்டியன

தொடரும்

அன்பன்  ராமன்

Thursday, August 31, 2023

CINE DIRECTION/ DIRECTOR-5

 CINE DIRECTION/ DIRECTOR-5

திரை  இயக்கம் / இயக்குனர்-5

இயக்குனர் இன்னும் சிலரின் பங்களிப்பை ஏற்றுத்தான் பரிமளிக்க முடியும். அவர்களில் தலையாய இருவர் நடன இயக்குனர் [CHOREOGRAPHER], நிழற்படப்பதிவாளர் [STILL PHOTOGRAPHER ] .இவர்கள் கிட்டத்தட்ட பாடல்காட்சிகளில் படக்குழுவினருடனேயே தொடர்ந்து இயங்குவர். அதிலும்  நிழற்படப்பதிவாளர் படப்பிடிப்பு தளங்களில் [CINEMATOGRAPHER] ஒளிப்பதிவாளருக்கு அருகில் நின்று நிழற்படங்களை சுட்டுத்தள்ளுவார்.

நடன இயக்குனர் FIELD க்கு வெளியே [அதாவது படப்பிடிப்பு காமெராவின் கண்ணில் /பார்வையில் படாமல்] உதவியாளர்களுடன் இருப்பார்.

அது ஏனெனில் பாதி கலைஞர்ளுக்கு நடனம் வேப்பங்காய் . ஆனால் படத்தில் நடித்து பொருள் குவிக்க ண்டும் எல்லா சமரசங்களையும் ஏற்று சாமரம் வீசி கதாநாயகி ஆனபின் இனி டைரக்டர் தான் சமரசம் செய்து கொள்ள [மற்றும் ரசிகர்களை கொல்ல ] வேண்டும். எனவே நாயகியின் நடன அசைவுகளை field [காமெராவின் எல்லை]க்கு வெளியே நடன இயக்குனர் மற்றும் அவரது உதவியாளர்கள் செய்யசெய்ய  அதைப்பார்த்து நாயகி அபிநயிப்பார்.ஆகா நாட்டிய தாரகை , ஊட்டியின் அழகி உல்லாசக்கிளி ஜிலுஜிலு ஸ்ரீ யின் நடனம் கொள்ளை அழகு என்று விமரிசனம் தூள் பறக்கும் [அங்கே நடனக்குழுவினர் குமுறிகொண்டிருப்பார்கள் -"களுதைக்கு ஆடவே தெரியாது”  என்று]

யார் எப்படிப்போனால் என்ன சுட்டுத்தள்ளு   என்று கருமமே கண்ணாக ஸ்டில் எடுப்பார் still photographer . இவர் சினிமாட்டோகிராபரின் கோணத்திலேயே still எனும்  அசையாப்படங்களை எடுப்பார். அப்போதுதான் விளம்பரங்களில் , படக்காட்சிபோலவே படங்களை வெளியிட்டு மக்களைக்கவர முடியும். திரை அரங்குகளில் சிலர் முண்டி அடித்து க்கொண்டு ஓட , சிலர் லாபி பகுதியில் ஸ்டில்ஸ் பார்த்து ,            இங்க பார் ஜிலு ஜிலு அங்கபார் கொழுகொழு என்று அலை மோதி சுய விளக்கங்களை அள்ளிவீச அதை நம்பிக்கொண்டு ஆ என்று சிலர் அலைய, படம் லாஸ் தேன் என்று வரவு   செலவு பேசித்திரிவதைக்காணலாம் . இதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல ;தேவைப்பட்டால் அடி தடி யிலும் இறங்குவார்கள்.

இது ஒரு புறம் இருக்க படப்பிடிப்பில் இயக்குனர் என்ன செய்வார் என்பதை அறிய முயலுவோம்

ஒவ்வொரு காட்சியையும் முறையாகப்படம் எடுக்கவும் , குழப்பமில்லாமல் விரைந்து செயல் பாடவும் உதவுவது                                                                 திரைக்கதையே  . எனவே திரைக்கதை தொகுப்பு , இயக்குனரிடம் இருக்கும் ; ஒரு சிலர் அதை உதவி இயக்குனர் பொறுப்பில் கொடுத்துவைப்பர் .எப்படியாயினும் படப்பிடிப்பு திரைக்கதையின் அமைப்பிலேயே நகர்வது எளிதாக இருக்கும் .  தலைமை ஒளிப்பதிவாளர் , லைட்டிங் எனப்படும் ஒளி அமைப்புக்கு , கதாபாத்திரங்களின் நகர்வுகளுக்கு ஏற்ப  செயல் பட திரைக்கதையை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்வார் , அதாவது                    அடுத்த 3 ஷாட்  எவ்வாறு அமையவேண்டும் என்பதை முதல் முதலில் உள்வாங்கிக்கொள்பவர் தலைமை மற்றும் செயல் ஒளிப்பதிவாளர் [operative camera man]. பெரும்பாலும்  தலைமை +செயல் ஒளிப்பதிவாளர் இருவரும் தொழில் ரீதியாக இணக்க மானவர்கள் . என்ன லென்ஸ் , field view , perspective எனும் சரியான கோணம் அனை த்தையும் செயல் ஒளிப்பதிவாளர் [operative camera man] துல்லியமாக செய்துவிடுவார். சில விசேஷ வகை கோணங்கள்/ ஒளி அமைப்புகள் இவற்றை தலைமை -செய்து பின்னர் படப்பிடிப்பை தொடர ச்சொல்வார்.இது அனைத்தையும்  இயக்குனர், தலைமையுடன் முன்பே   தீர விவாதி த்திருப்பார் . களத்தில் அவர்கள் பேசவே மாட்டார்கள். அப்படியே ஏதேனும் தேவைப்பட்டால் , குறிப்பால் உணர்த்துவார்கள் ;எல்லாம் பயங்கர கில்லாடிகள்.

ஒவ்வொரு நடிகை நடிகருக்கும் உதவி இயக்குனர்கள் தனித்தனியே வசன பயிற்சி உச்சரிப்பு எல்லாம் சொல்லிக்கொடுத்து , அழைத்துவருவர்..

தயாராக படத்தின் பெயர் சீன்  எண் , ஷாட் எண் எல்லாம் உரக்க சொல்லி கிளாப் அடிக்க   10-20 வினாடிகள் முன் காமெரா ஓடத்துவங்கும்.  டைரக்டர் "ஆக்ஷன்" என்பார்.  உடனே நடிப்பு /நடனம்/ வசனம்/ சிரிப்பு /விசும்பல் எதுவோ ஒன்று துவங்கி பொருத்தமான ஏற்ற இறக்கங்களுடன் நடிக்க துவங்குவர். 2 உதவி இயக்குனர்கள் முகபாவங்களை கூர்ந்து கவனிப்பர் ,    ஒருவர் வசனம் பேசுவதை கூர்ந்து சரிபார்த்துக்கொண்டே வர, யாராவது சொதப்ப,  கட் என்று அலறுவார் இயக்குனர். உடனே காமெரா நிறுத்தப்படும். இயக்குனர் ஓடிச்சென்று என்ன குறை என்பதை விளக்கி , சில சமயம் தானே நடித்துக்காட்டுவார். உடனே டச் அப் [பவுடர் பூச்சு] சரி செய்யப்பட்டு மீண்டும் தொடங்கும். இப்படியே எல்லா காட்சிகளும்  பதிவிடப்பட்டு  படம் ஷுட்டிங் நிறைவடையும் . அவ்வளவு தானா என்றால் இல்லை. படக்குழு ஸ்டூடியோ வை விட்டு வெளியேறும். முக்கிய தொழில் நுட்ப கலைஞர்கள் அடுத்த கட்டப்பணிகளை நிறைவேற்றத்துவங்குவர். 

வாடகைக்கு வாங்கி வந்த காமெரா , வாடகையுடன் உரிய றுவனத்திற்கு திருப்பித்தரப்படும். பிலிம் சுருள்கள் பிராசஸிங் lab க்கு அனுப்பப்படும்.. முக்கிய ஒளிப்பதிவாளர் என்ன வகை ஒளிப்பதிவில் படம் பிடித்திருக்கிறார்  image density எவ்வளவு வரும் வகையில் process செய்யப்படவேண்டும் என்பதை குறிப்பு எழுதி அனுப்புவார்.[இதை gamma value என்பர் ] பின்னர் இந்த காமாவை விளக்குகிறேன். பிராச ஸ் முடிந்து வந்ததும் எடிட்டிங் என்னும் பட த்தொகுப்பு துவங்கும்.

வளரும்

அன்பன் ராமன்

 

FLOWER ENGINE

  FLOWER ENGINE              18-11-26 அஹிரவதா மலர் எஞ்சின் என்னடா இது தலை வேதனை என்கிறீர்களா ? நீங்கள் சொல்வது இருக்கட்டும் பல...