Monday, September 4, 2023

6 NOT KNOWING THE PERSON

 6  NOT KNOWING THE PERSON

6 ஆள் தெரியாமல் ..

இது என்ன “ஆள் தெரியாமல்" என்கிறீர்களா? கஸ்தூரிரெங்கனு ம்,    கௌரி யும் தான் எப்போதுமே கதைக்கருவாக இருக்கவேண்டுமா ? அதன் விளைவே இந்த "ஆள் தெரியாமல்" என்னும் ஒற்றை சம்பவம். . அது ஒரு புதிதாக வளர்ந்துவரும் காலனி .அடுத்தடுத்த 2 வீடுகள் , இரண்டிலும் 62-65 வயதினர் குடும்பத்தலைவர்கள் வீடு கட்டி வசிக்கின்றனர் . வருடம் 2010 இருவரும் புது அறிமுகங்கள் என்பதே கதையின் அடித்தளம் .ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து நல்ல செழிப்புடன் /சேமிப்புடன் இருக்க அடுத்தவர் , மாதம் ஒவ்வொன்றுக்கும் ஓய்வூதியத்தை நம்பி வாழ்பவர். வெயில் காலத்தில் மின் தட்டுப்பாடு, பொசுக் பொசுக் என்று current போய்விடும் , குறித்த நேரமோ அவகாசமோ சொல்லமுடியாமல் இரவெல்லாம் தொல்லை .

இதனால் வசதி மிக்கவர் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்வெர்டர் என்னும் கருவியை பொருத்தி அனைத்து இடங்களிலும் விளக்கு விசிறி எல்லாம் இயங்கட்டும் என்று ஏற்பாடு செய்துகொண்டார். மற்றவர் இந்த அமைப்புகள் அவசியமா, அந்த பாட்டரிக்கே தேவையான மின்சாரம் கிடைக்குமா என்றெல்லாம் யோசித்து பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டார்.

வசதிக்காரர் செல்வந்தர் , மற்றவர் சொல்வேந்தர் என்று பெயர் வைத்துக்கொண்டால் யார் என்ன சொன்னார்கள் என்பது எளிதில் விளங்கும்.

ஒரு நாள் மாலை 7.30 மணி current பொசுக், எங்கும் இருள் , வசதி வீட்டில் ஒளிவெள்ளம். செல்வந்தர் வெளியே இருளில் நின்று கொண்டு தனது  வீட்டில் ஒளிரும் ஒளியை ரசித்து , அடுத்தவீட்டை பார்க்க அது இருள் வெள்ளத்தில்.. உடனே குதூகலமாக அடுத்த வீட்டில் எட்டிப்பார்த்து செல்வந்தர் : "என்னசார் கரண்ட் போச்சா?" என்று உள்ளூற மகிழ்ச்சி ததும்ப கேட்கிறார்.

சொல்வேந்தர் : ஆமா சார்

 செல்வந்தர்: இன்வெர்டர் போட்டுற  வேண்டியது தானே 

சொல்வேந்தர் அதுக்கு 15, 16000/- ஆகுமே

 செல்வந்தர்: ஆமா , ஆனா current இருக்குமே  

சொல்வேந்தர்: எவ்வளவு நேரம் இருக்கும்?  செல்வந்தர்: 7 hours

சொல்வேந்தர் முணுமுணு க்கிறார் [ஆமா 70 வது மணி நேரம் ஓடுதாக்கும் சும்மா 7 மணி நேரம்னு அடிச்சு விட்டு ஏமாத்திட்டு ஓடிட்டான் இந்த ஆளு நம்ம கிட்ட அளக்கிறான் ]   சொல்வேந்தர்: 7 மணி நேரமெல்லாம் ஓடாது சார் .

செல்வந்தர்: என்ன அப்பிடி சொல்லிட்டீங்க box மேலயே 8 hrs நான்-ஸ்டாப் னு எழுதிருக்கு, நான் பாத்துட்டு தான் வாங்கியிருக்கேன். 

சொல்வேந்தர்: நீங்க என்னத்த பாத்து வாங்கியிருந்தாலும் 7 மணி நேரம் கிறதெல்லாம் வெறும் டூப் ;

செல்வந்தர்: ஏன் சார் வாய் வெக்கிறீங்க சொல்வேந்தர்:நான் வாயும் வெக்கல வயிறும் வெக்கல உள்ளதைத்தான் சொல்றேன் என்றார்.

கடுப்புடன் வீடு திரும்பினார் செல்வந்தர். வீட்டிற்குள் போய் மனைவியிடம் வயித்தெரிச்சல் ல பேசறார் நம்ப பக்கத்து வீட்டுக்காரரு என்றார். அந்த பெண் : நீங்க ஏன் போய் கரண்ட் போச்சா னு துக்கம் விசாரிச்சீங்க அவர் உங்கள வெறுப்பு ஏத்துறார் .

மணி 8.10 வாங்க சாப்பிடுவோம் என்று சொல்வேந்தர் வீட்டினர் இரவு உணவை முடித்தனர்.

செல்வந்தர் மனைவி வாங்க சாப்பிடுவோம் என்றார் . 9 மணிக்கு சாப்பிடுவோம் என்றார் செல்வந்தர்.. மணி 9.02 செல்வந்தர் வீட்டில் கரெண்ட் பொசுக் . ஆம் இன்வெர்டர் சேமிப்பு முடிந்து விட்டது ; இப்போது சொல்வேந்தர் ஜன்னல் வழியே உரத்த குரலில் உங்களுக்கும் போச்சுல்ல கரண்ட் போச்சுல்ல.. நான் சொன்னேன்ல 7 மணி நேரம்லாம் ஒடாது னு -நீங்க 8 மணி நேரம் னு பாத்துதான் வாங்குனேன் னு சவால் விட்டுக்கிட்டு இருந்தீங்களே, இப்ப ஒண்ணரை மணி நேரத்துக்கே படுக்கையை போட்டிருச்சில்ல

அதுல  வேற பெருமை அடிச்சுக்கிட்டீ ங்களே ஆஹா இங்கே பார் ஒளி வெள்ளம்னு , ஒரு ஒன்னரை மணி நேரத்துக்கு 15 ஆயிரமா? எங்கயாவது கள்ள நோட்டு அடிச்சாத்தான் முடியும்.

செல்வந்தர் :என்னங்க கள்ள நோட்டு அது இது னு தேவை இல்லாம பேசறீங்க .

சொல்வேந்தர் : சார் நான் உங்கள சொல்லல என் நிலைமைக்கு இப்பிடி இன்வெர்டர் போடணும்னா  எங்கயாவது கள்ள நோட்டு அடிச்சா தான் முடியும் னு சொல்றேன்.

கொஞ்ச நேரத்துல கரெண்ட் வந்துருமில்ல என்றார் செல்வந்தர் : சொல்வேந்தர் : அதுக்கு எதுக்கு இன்வெர்டர் ?  15 ஆயிரத்தை அளுதுக்கிட்டு. மீண்டும்  செல்வந்தர்:கொஞ்ச நேரத்துல கரெண்ட் வந்துருமில்ல.

சொல்வேந்தர்: அப்பிடியே current வந்தாலும் , இன்வெர்டர் வராதுல்ல . செல்வந்தர்: ஏன் வராது ? சொல்வேந்தர்: 1 மணி நேரம் ஓடுனா இன்வெர்டர் 2 மணி நேரத்துக்கு சார்ஜ் ஏத்துனா தான் மீண்டும் முழு சப்ளை கொடுக்கும்.

செல்வந்தர்: அப்பொ என்ன சொல்ல வரீங்க?

சொல்வேந்தர் : 7 மணி நேரம் ஓடுனா அடுத்த 14 மணி நேரத்துக்கு விடாம சார்ஜ் ஏத்துனா மீண்டும் 7 மணி நேர த்துக்கு கரெண்ட் கொடுக்கும் . இங்க 14 மணி நேரம் தொடர்ந்து கரெண்ட் வர்ரதில்லையே அத வெச்சுக்கிட்டு என்ன செய்ய முடியும் னு புரியல.

செல்வந்தர் : பின்ன அவன் 7 மணி நேரம் உறுதியா சொன்னானே.

சொல்வேந்தர் : இப்ப கேட்டா என்ன சொல்லுவான் தெரியுமா ? 1 லைட், 1 fan =8 hrs , 2 பேன் =7 hrs , 4 லைட் =7 hrs 3 fan =5 hrs .எல்லா light , fan =1 முதல் 1 1/2 மணி நேரம் சப்ளை. .நீங்க இதெல்லாம் box ல போடமாட்டாங்க அதை புரிஞ்சுகிட்டு நம்ப பொருள் வாங்கினா நல்லதுன்னு சொல்றேன் .

செல்வந்தர் மனதிற்குள் ஐயோ ஆள் தெரியாம பேசி இப்ப நம்மள இப்பிடி உலுக்குறானே என்று வருந்தினார்.

நன்றி   அன்பன் ராமன்

Sunday, September 3, 2023

SCIENCE -6

 SCIENCE -6

அறிவியல் – வாக்ஸின் -6

இது வரை வாக்ஸின் தயாரிப்பில் நிலவி வந்த /நிலவி வரும் பழைய முறைகளைப்பார்த்து வந்தோம். அவற்றில் துல்லியம் என்னும் precision குறைவு என்பதாக ஒரு விமரிசனம் சில காலமாகவே ஒலித்து வருகிறது. . அதிலும் இந்தியா எதையாவது செய்யமுற்பட்டால் உடனே உலக அரங்கில் நையாண்டியும் பூடக விமரிசனங்களும் ஒலிக்க உடனே உள்ளூர் கோடாங்கிகள் தங்கள் பங்குக்கு உளறித்தள்ளி பிற நாட்டவருக்கு ஒத்துஊதுவது வாடிக்கை. இத்துணைவிமரிசனங்களையும், கோணங்கிகளையும் ஒருசேரத்தூக்கி எரிந்து முன்னேற்றம் கண்ட இந்திய விஞ்ஞானிகள் கோயிலில் வைத்து கும்பிடப்பட வேண்டிய பெருந்தகைகள்.

கொரோனா கோரதாண்டவம் ஆடிய நெருக்கடியான கட்டத்தில் பெரும் ஒளிக்கற்றையாக மிளிர்ந்தது தான் mRNA வாக்ஸின் -குறிப்பாக Pfizer, Moderna, Bio N Tech, நிறுவனங்களின் ஓங்கி ஒலித்த குரல்கள். ஏதோ மாபெரும் விஞ்ஞான முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்களைப்போல் பெரும் முழக்கங்களை வெளிப்படுத்தி இந்தியாவில் கால் பதிக்க பகீரத பிரயத்தனம் செய்ய, இந்திய அரசினரின் கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைக்க விரும்பாதவர்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை என்று முகத்தில் அறைந்து சொன்னது இந்திய மருத்துவ ஆலோசனைக்குழு. . இந்த அரசியல் இங்கு தேவையா எனில் -கண்டிப்பாகத்தேவை. ஏனெனில் உலகெங்கணும் இந்திய வாக்ஸின்கள் எத்துணை கோடி மக்களுக்கு தன்னலமின்றி வழங்கிய இலவச சேவையை ஒருநாளும், Pfizer, Moderna, Bio N Tech  நிறுவனங்கள் செய்யாது. மேலும், m RNA வாக்ஸின் டெக்னாலஜி யை இரவு பகல் உழைத்து பூரணத்துவ நிலைக்கு உயர்த்தியவர்  இருவர். 1 ஹங்கேரிய Biochemist பெண்மணி –Katalin Kariko மற்றும் 2 Weissman அவர்களும் தான்... அந்தப்பெண்மணி இவ்வாராய்ச்சியில் தன் வாழ்வின் பெரும் பகுதியை [20-22 ஆண்டுகள்] அர்ப்பணித்தவர்.

நல்லவர்களைத்தான் துரதிர்ஷ்டம் துரத்தும் என்பது கதலின் கரிக்கோ வின் வாழ்வில் கிஞ்சித்தும் பிசகாமல் நடந்தது. 1985 முதல் அமெரிக்காவில் பென்சில்வானியா பல்கலையில் ஆராய்ச்சியில் Biochemistry துறையில் Ph.D பெற்ற நிலையிலேயே m-RNA இழைகளை சரியாக இனம்கண்டு, தேவையானபடி வடிவமைத்தால், மிகச்சிறப்பான துல்லியம் மற்றும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு வாக்ஸின் களை விரைவாக உற்பத்தி செய்துவிட முடியும் என்று கட்டுரைகள் வாயிலாக உலகறியச்செய்தவர் கதலின் கரிக்கோ. ஆஹ்! என்று கோபம் கொண்டு பொங்கி எழுந்தனர் மூத்த விஞ்ஞானிகள். அதெல்லாம் செயல் படாது என்று எதிர்வினை புரிந்தனர். அவருக்கு [கதலின் கரிக்கோ].  பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டன. இவரது ஆராய்ச்சிகள் பயனற்றவை என்று கூறி ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு முற்றாக மறுக்கப்பட்டதுடன் அவர் பதவி இறக்கப்பட்டார் DEMOTED FROM LEADERSHIP]. .ஆனாலும் கரிக்கோ மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்தும்-m-RNA ஒரு புரட்சிகரமான ஆயுதமாகும் என்று திடமாக நம்பினார்.

அவர் நம்பினார் ஆனால் உலகம் அவரை நம்பவில்லை. இவ்வாறு 22 ஆண்டுப்போராட்டத்தில் தளர்ந்து போன நிலையில்        

Weissman எனும் விஞ்ஞானி இதே நிலைப்பாடு கொண்டு சில கருத்துகளை ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட மீண்டும் சூடு பிடித்தது கதலின் கரிக்கோ வின் m-RNA வாக்ஸின் முயற்சி.

ஆரம்பத்தில் கதலின் கரிக்கோ வாக்ஸின் குறித்து தீவிர சிந்தனை கொண்டிருக்கவில்லை. எனினும் m-RNA வைக்கொண்டு எந்த ப்ரோடீன் அமைப்பையும் செய்துவிடலாம் என்ற உண்மை அவரது சிந்தனையில்      m- RNA-BASED VACCINE என்ற ஆசையை வேரூன்றச்செய்தது . எதிர்ப்பாளர்கள் தெரிவித்த மறுப்பு யாதெனில் - m- RNA வெளியில் இருந்து வந்து உடலினுள் ப்ரோடீன் தயாரிக்க எந்த செல்லும் அனுமதிக்காது மாறாக வெளி m- RNA - சிதைக்கப்படும் எனவே வாக்ஸின் தயாரிப்பு கனவே ஆகும் என்று m- RNA -வாக்ஸின் கருத்தை தலைதூக்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தனர்.

கதலின் கரிக்கோ -வீஸ்மன் இணைந்து ஒரு m- RNA அமைப்பை [ஒரு நோய் எதிர்ப்பு உத்தியாக] உருவாக்கி எலிகளின் உடலில் செலுத்தி m- RNA வாக்ஸின் சிறப்பாக இயங்குவதை நிரூபித்து கட்டுரை வெளியிட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்தனர். மீண்டும் அதிர்ஷ்டம் காலைவார, இந்த வகை m- RNA வாக்ஸின் மனிதரில் பலனற்றுப்போய் சோர்வைத்தந்தது. இந்த தோல்வி ஏன் என்று நுணுக்கமாக துருவி ஆராய்ந்ததில் ஒரு உண்மை புலப்பட்டது .        மேலும் வளரும்      

அன்பன் ராமன்

Saturday, September 2, 2023

ENGLISH-7

 ENGLISH-7

BRAKE, BREAK, POUR, PORE, MOOT, MUTE, QUACK, QUAKE

For the present episode, words that sound alike or nearly so, while they spell and mean differently are presented. THIS IS JUST A SAMPLE; by no means the list is complete. These terms are HOMOPHONES, as they sound alike.

BRAKE [noun]

It is device or a lever that helps to decelerate and stop a vehicle to halt Physically, the brake may have different forms like a pedal or a handle. 

The person had no brakes on his bicycle and so had to break his ankle.

BREAK [Verb]

 The term refers to the act of damaging or ruining something by physical pressure or attack by force .In effect , it makes the object or device to crumble and lose function,

“BREAK” HAS SEVERAL APPLICATIONS

 Break the code, Break silence, Break tension. Break hoodoo, Break a strike,

Break the record, Break the law, Break the promise

BREAK [Noun]

In its ‘noun’ form, break means interruption, as in Lunch break  , Tea break

To have a short vacation is also named ‘break’. 

Break may refer to “opportunity” as in He had a good break in his new assignment

Early morning is ‘day break’

Tax break means a holiday for taxes

MOOT [Verb]

The term refers to making a suggestion as in ’ he mooted the idea’.

 His name was mooted as a possible successor.

MUTE   [Adjective]

Mute refers to the state of silence

It indicates a phase of inaction as in ‘the police were mute spectators when a group ransacked the shops on bazaar street.

PORE [noun]

Pore refers to a narrow opening on a surface.

Plants lose water vapour through tiny holes on leaf surfaces.

POUR

The term refers to the act of transferring or delivering liquid

QUACK   [verb] 

The process of making noise by duck is termed ‘quack’.

 Quack is also used to name person[s] pretending to be recognized medical practitioner[s].

 Quake [verb]

‘Quake’ refers to physical shake by fear or the event of violent shake of earth

Prof. K. Raman

FLOWER ENGINE

  FLOWER ENGINE              18-11-26 அஹிரவதா மலர் எஞ்சின் என்னடா இது தலை வேதனை என்கிறீர்களா ? நீங்கள் சொல்வது இருக்கட்டும் பல...