Sunday, January 5, 2025

ANGER AND EGO- 6

 ANGER AND EGO- 6

கொந்தளிப்பும் அகம்பாவமும்-6

இந்நிலை மாற்றிட என்ன வழி. ?     அது என்ன- அவ்வளவு எளிதா?  அதன் வேர்களைப்புரிந்து கொள்வது அவசியம்.   அதற்கான செயல் முறைகளை, பின்னர் காண்போம்.

கோபமும் அகம்பாவமும்  பின்னி ப் பிணைந்த மன நிலைப்பாட்டுக்கள். ஒன்றி லிருந்து, ஒன்று கிளைத்தெழும்; எனினும் அகம்பாவம் மிக எளிதில் கோபத்தை வேரூன்ற செய்யும் .

இவ்விரண்டும் மனம் சார்ந்தவை என்பதனால், இவற்றை மெல்ல மெல்ல வே வெளியேற்ற முடியும். உடல் உபாதைக்கு மருந்து உதவும் ; மன உபாதைக்கு, வெகு நிதானமாக 'புரியவைக்கும் முயற்சிகள்' தேவைப்படும். முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுதல் அவசியம்;

 நாம் நம்மை முறையாக கட்டுப்படுத்தாமல் அகம்பாவம் கொண்டு செயல் பட்டால் ஊர் உலகம் நம்மை திருத்தும். அது பல நேரங்களில் 'நையப்புடைத்தல்" வகை ஆயுதத்தை கையில் எடுத்து பொதுவெளியில் , ஆடைகளுடன், உடலையும் கிழித்துக்குதறி வெளியில் தலைகாட்டவொண்ணாத நிலைக்கு தள்ளிவிடும்.

அகம்பாவத்தை கைக்கொள்வதை விட பேரழிவிற்கு வேறு உத்திகள் உளவா எனில் -இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.  

இந்த அவலங்களை தவிர்த்தல் நலம். ஆனால் வந்த பின் நீக்குதல், என்பது மிகுந்த போராட்டத்திற்குப்பின்னரே சாத்தியப்படும், ஏனெனில் அது மனநலம் சார்ந்த அணுகுமுறை. எனவே இதுநாள் வரை மனம் போன படி பேசியும் செய்தும் வந்த நபர்--- கவனம், முற்றாகப்பின்பற்றும் ஒழுங்கு நிலை வழுவாதிருத்தல் எனஇனி ஒரு குறுகிய கட்டுக்குள் இயங்குதல் அத்துணை எளிதன்று. அவ்வப்போது, மனம் எல்லை மீறத்துடிக்கும்.

எனவே, ஒரு மனப்போராட்டத்தின் பின்னரே, மனநிலை சீரான செயல் நோக்கி தன்னை வழிநடத்தும்.. மனம் சார்ந்த எந்த உத்தியையும், நிதானமாகவே தான் மேற்கொள்ள இயலும்.  இதனை முற்றாக உள்வாங்கிக்கொண்டால் மட்டுமே, ஈகோ நிலை மெல்ல நீங்கி மனம் பிறர் போல் இயங்க முயலும். இதனை மிக நன்றாகப்பதித்தல் அவசியம். அதன் பிறகே வெவ்வேறு படிநிலைகளாக ஈகோ அடக்குதல் [EGO BLASTING ] துவங்க முடியும். சுமார் 10 விதமான நுண்ணிய செயல் மாற்றங்கள் கொண்டு, ஈகோ வில் இருந்து வெளியே வர இயலும்.

அவை யாவை? 

1 No Comparison -please :

பிறரோடு ஒப்பீடு செய்தல் தவிர்த்தல் நலம்

பிறரோடு ஒப்பீடு செய்தல் பலவித இன்னல்களைத்தோற்றுவிக்கும் . ஒப்பீடு என்பது இரு சமநிலை அம்சங்களுக்கு மட்டுமே பொருந்தும். மனிதர்கள் இடையே நிச்சயம் மாறுபாடு இருப்பது இயற்கையின் அமைப்பு. அதை எப்படி புறக்கணிக்க இயலும்?

 இந்த 'அவனைப்பார்' அவளைப்பார்' என குழந்தைகளை அறிவுறுத்த முயலும் பெற்றோரே --இதே'அவனைப்பார்' அவளைப்பார்' ஒப்பீடு உங்களையும் வேறொரு குழந்தையின் பெற்றோரோடு செய்ய முயன்றால் நீங்கள் மகிழ்வீர்களா? உடனே அவர்களுக்கு உயர் பதவி, வீட்டுக்கு வேலை க்கு ஆள், சொந்த வீடு ஊரில் நிலம், நீச்சு  இருக்கு நமக்கு என்ன இருக்கு? என இருசாராரும் தத்தம் மாமனாரை வில்லனாகப்பார்க்கிறீர்கள்;

ஆனால் குழந்தைகள் மட்டும் போட்டியில் வெல்ல வேண்டும்.

யோசியுங்கள் உலகின் வெற்றியாளர்கள் பலரும் பின்னாள் மலர்வுகள் \ late blooms -என்று புரிந்துகொள்ளுங்கள். அறிவு வளர அருகில் இருந்து கற்றுக்கொடுங்கள் , ட்யூஷன் எனும் மாயையை தவிர்ப்பீர்

இப்படி சொல்லிப்பாருங்களேன்.."எல்லோரும் உன்னைப்பார்க்கும் படி நன்றாகப்படி , ஒழுக்கமாய் இரு , நீ முன்னேறலாம்"  இதை ஏன் சொல்லக்   கூடாது ? நமக்கு மனோதிடம் இல்லை . நிலவைக்காட்டி சோறு ஊட்டுவது வேறு  , பிறரைக்காட்டி படிக்க தூண்டுவது வேறு..    .பின்னது-- தாழ்வு மனப்பான்மைக்கு வித்திடும்.  

தாழ்வு மனப்பான்மைக்கு சாமரம் வீசி, பீடத்தில் அமர்த்திவிட்டு பின்னாளில் புலம்பாதீர்கள். ஒப்பீடுகள் தேவை இல்லை. ஒவ்வொருவருக்கும் திறமை வெவ்வேறு வகைகளில் இருக்கிறது. அதை ஊக்குவிக்க வழி தேடுங்கள். நாமே ஏன் முன்னோடியாக இருக்கக்கூடாது என யோசியுங்கள், முறையான ஊக்குவிப்பு தெரியாவிடில் பேசாமலா வது இருங்கள். தவறான ஒப்பீடு தான் ஊக்கு வித்தல் என்று ஏமாந்து வாழ்வை சீர் குலைக்காதீர்க.ள்.   உங்கள் ஊக்குவிப்பு பின்னாளில் பஸ் ஸ்டாண்டில் ஊக்கு விக்க அதாவது safety pin விற்க வேண்டிய நிலைக்கு தள்ளும் . 

தவறான ஊக்குவிப்பு தாழ்வு மனப்பான்மையை தோற்றுவிக்கும். அதனால் குழந்தை தோற்று வைக்கும் ; உடனே விசிறி க்கட்டை / விளக்குமாறு அடி என்று தாக்குதல் துவங்காதீர்கள் .

பாடத்தை விளங்குமாறு விளக்கும் மாறு கேட்டால் உங்களால் செய்ய முடியுமா? நம்மால் இயலாத ஒன்றை சிறுவனோ சிறுமியோ உடனே 100/100 செய்ய வேண்டும்.

ஆசா துக்கஸ்ய காரணம் [ஆசையே துக்கத்திற்கு காரணம்] என்ற புத்தரின் அருள்வாக்கு  நம்மை வழிநடத்தினால் ஆசைக்குரிய தகுதியைப் பெறுதல் பற்றி நம்மை சிந்திக்க தூண்டும். முடவன் கொம்புத்தேன் போன்றதே தகுதியின்றி முன்னேற யத்தனித்தல். இவைகுறித்த தெளிவு வரும்போது ஈகோ, தானே விலகும் .

தொடரும்

அன்பன் ராமன்

Saturday, January 4, 2025

CULTURE -3

 CULTURE -3

Respect for good and fear of bad are the disciplining forces that regulate our life style. It is the moral fear that keeps all our acts in check. Though in the long run one may not achieve visible prosperity, certainly moral fear helps us to keep off such prospects of peril-associated prosperity. Property is not prosperity. Acquisition of property to one’s requirement is understandable, but not the attitude of acquiring an empire. 

Prosperity is living a healthy life and seeing our children lead responsible life. Again life is a product of one’s own preferences for contented peace and composure or for searching the limitless target of material wealth. For both the extremes one has to be systematic in approach facing the consequences right through. Cultivating healthy ideas from a moral plane can help us to minimize tensions. Health and peace are products of habit and mind. Several issues in life are associated with the mind.

Our culture teaches us to be simple and purposeful to self and society by regulating the mind. Nurturing these tenets and infusing the idea to the children may help them in later life in avoiding tensions   Avaricious plans and extravaganza in daily life can destroy peace and health.  Learning to live within means is the highest form of culture bestowed and blessed by Divinity. What better can one aspire for? 

In its basic feature , culture wishes to stay in a calm corner far from the bright beam of light or the lime light. Obscurity by itself has the innate elemnt of safety -not being an object of public gaze even on the face of achievement. In passing it can be said that culture is far from gloss, pomp and cacophony . 

                                                          **************************

Friday, January 3, 2025

Communication:

 Communication:  

Achieving clarity

Clarity is the most important element that any one craves for. Several issues remain unresolved for want of clarity. Stated in simple terms, it remains elusive for many because they do not accord the right value for aspects of conversation /communication. Basically, some sort of casual approach to matters of communication prevails in India. A degree of ‘taking for granted’ occurs as a common practice at most levels of human interaction. Most of these ‘inadequacies’ in our transactions, stay on the strength of ‘numerical frequency’. Strictly, greater prevalence does not merit acceptance, since all ‘usages’ must be based on the legal sanction ensuring the precision and acceptability to be conceived by the natives of that language. This brings us to the core of ‘What is right or wrong’. Much of it requires and deserves serious attention to the process of appropriate communication.

Precision in communication:

The idea of precision can never be alien to any process of human effort. Precision holds value to all processes, products and purposes. If so, its value to the semantic domain of communication cannot just be small. If one wishes to be ‘pleasant and purposeful’, [s]he needs to develop this tool of accuracy through vocabulary. Literally every kind of work requires precision; its desirability is of the highest order among teachers and legal experts who have to strive hard to expound an idea in the least time.  The process of communication does not stop with making a statement. It goes far beyond to the realm of ‘convincing’ the listener. When the act of ‘convincing’ takes the least time the presentation appears more communicative and less fatiguing. Should the argument demand an unduly long time, it ceases to enforce rapt attention and also makes a negative impact. The negative impact referred to pertains to the widening gap between the speaker and the listener. Intriguingly any gap that manages to arise keeps amplifying to a point of no return. Obviously, it is the speaker who fails to sustain balance and tempo through a session.                                                                                          

After all, the source of communication is the speaker and [s]he is the one pursuing an idea. So, the listener is merely a recipient. The link between the speaker and listener is the continuity in thought. It may fail if the speaker does not take the right care for smooth cascading of ideas. Expression sustains both the thought and a smooth flow. When these two complements stay in a steady cycle, listener keeps pace with the speaker. It implies that the speaker leads the event. Therefore speakers are obliged to safeguard the spirit of listening without letting digression to creep in. Another dimension of sustaining the tempo relates to the right play of words. If the tempo is poor, listeners do not toil beyond a point to understand the speaker. Now, the speaker inadvertently loses grip of the situation while [s]he is still in the process of conveying an idea. Therefore, communication is an act of precision and is not helped by any acting [pretending].          

 To  Continue…

Wednesday, January 1, 2025

CV RAJENDRAN -4

 CV RAJENDRAN -4

சி வி ராஜேந்திரன்-4

திரு சி வி ராஜேந்திரனின் பாடலை காட் சிப்படுத்தும்  திறமைக்கு இன்றைய பாடல்கள் மேலும் நல் உதாரணங்கள் . ஒரு இயக்குனராக தன து அனுபவங்களை www.msvtimes.com நிகழ்ச்சியில் பேசியுள்ளார் கேளுங்கள் .

https://www.google.com/search?q=MMFA+YOU+TUBE++VIDEOS+CV+RAJENDRAN&newwindow=1&sca_esv=66326cb848f16f89&biw=1600&bih=773&sxsrf=ADLYWIL2c902SriqrC6jFIO7CmjUuaqu-w%3A1735086398021&ei=PlFrZ7iGAaeVseMPnJuLwA8&ved=0ahUKEwi4naLD1MGKAxWnSmwGHZzNAvg4FBDh1QMIEA&oq=MMFA+YOU+TUBE++VIDEOS+CV+RAJENDRAN&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIk1NRkEgWU9VIFRVQkUgIFZJREVPUyBDViBSQUpFTkRSQU4yB msv times

கங்கையிலே ஓடம் [ராஜா -1968] கண்ணதாசன் எம் எஸ் வி சுசீலா

வித்தியாசமான பாடல். ஒரு டிபிகல் கவியரசர் யாப்பு . கிருஷ்ண பக்தையாக ஜெயலலிதா ;முற்றிலும் வேறு வகை நடனம் , வெகு சிறப்பாகவே ஆடியுள்ளார் பக்தி ரஸம் ததும்ப  பாடி ஆடும் காட்சி. வெகு தெளிவான ஒளிப்பதிவு . பலநாட்களாக கேட்காத பாடல் கேட்டு மகிழ இணைப்பு இதோ

 

https://www.youtube.com/watch?v=kzNpKiXhM9A raja 1972 gangaiyile odam illaiyo  kd msv, ps

அந்தப்பக்கம் [வீட்டுக்கு வீடு -1972 ] கண்ணதாசன், எம் எஸ் வி, சாய்பாபா 

நாகேஷு க்கெனவே உருவாக்கப்பட்ட பாடல். நகைச்சுவைப்பாடல் எனினும் , மிகவும் தரமான பாடல் ; குறிப்பாக இசைக்கூறுகள் மற்றும் கிட்டார் மீட்டும் தரம் மற்றும் பாடப்பட்டுள்ள நேர்த்தி . நடிகர் பாலையா வின் புதல்வர் திரு சாய்பாபா அவர்கள் குரலில் ஒலித்த பாடல். சாய்பாபா எம் எஸ் வியின் இசைக்குழுவில் ஒரு முக்கிய உறுப்பினர். பல பாடல்களில் சாய்பாபா சிறப்பாக பாடியுள்ளார். அவற்றில் இதுவும் ன்று. இரவில் ஏனையோர் உறங்கிக்கொண்டிருக்க நாகேஷ் தந்தையின் இடைஞ்சலை   நினைவு கொண்டு   பாடுவதாக காட்சி. நன்கு கவனித்துப்பாருங்கள், நேர்த்தியான சொல்லாடல் மற்றும் நுணுக்கமான இசை . இணைப்பு இதோ.  

 

https://www.google.com/search?q=VEETTUKKU+VEEDU+MOVIE++ANDHAPAKKAM+VAAZHNDHAVAN+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=3539a24babae7179&sxsrf=ADLYWIIg5tAOz4rC-7F2gyhj6vi1_dBxsw%3A1733817150723&ei=PvNXZ6XdK_mZseMP56-ViQs&ved=0ahUKEwil9P6a3JyKAxX5TGwG ANDHAPAKKAMVEETTUKKU VEEDU 1970 KD MSV SAIBAABA

நாளை முதல் குடிக்க மாட்டேன் [நீதி- 1972  ] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ்

ரா றார ராரே ரா லால லால லா ஒ என்று மகிழ்சிபொங்க உயர்ந்த நடையில் துவங்கி ஆனால் நடிகர் தள்ளா டிக்கொண்டே பாடி வரும் காட்சி நன்கு படமாக்காப்பட்டுள்ளது. அந்நாளில் மனிதர் இல்லாத இடங்களில் குடிப்பது ஒரு பண்பு ; அது மாறாத காட்சி

குடிகாரன் பாடும் உயர்ந்த கோட்பாடுகள் நிறைந்த பாடல் எண்ணற்ற தகவல்கள் கவிஞனின் கற்பனை ஊற்றுக்கு  சான்று இப்பாடல்.

வெகு நுணுக்கமான இசைக்கூறுகள். என்று ரசனையுடன் பாடும் நாயகன் . குடிகாரன் என்ற பெயருக்கேற்ப கையில் பாட்டிலுடன் கழுதையிடம்  பாடத்துவங்குகிறார். கவிஞனின் தார்மீகக்கோபம் "கடவுள் என் வாழ்வில் கடன் காரன் கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும் என்ற வரிகள் அன்றாட வாழ்வியலின் தடயங்கள்; ஆனால்ஏழைகள் வாழ்வில் விளையாடும் ,இறைவா நீ கூட குடிகாரன் என்று இறைவனை பதம் பார்க்கும் குற்றச்காட்டு. அவ்வப்போது என்பன வளமான கற்பனையில் உதித்த  இசைக்கூறுகள் . இவை பாடலுக்கு வலு சேர்ப்பன. .டி எம் எஸ் வெகு சிறப்பாகப்பாடியுள்ளார் கேட்டு மகிழ இணைப்பு     

https://www.google.com/search?q=naalai+mudhal+kudikka+maatten+vieo+song&oq=naalai+mudhal+kudikka+maatten+vieo+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIMCAEQABgNGIAEGMcFMgcIAhAAGO8FMgcIAxAAGO8FMgcIBBAAGO8FMgcIBRAAGO8FMgcIBhAAGO8F0gEJMTkxMjhqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:9437eb4c,vid:MvO2TVwjr34,st:0 needhi 1972

தொடரும்

நன்றி                    அன்பன் ராமன்

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...