Monday, April 21, 2025

AMMANI, AMMANI

 AMMANI, AMMANI

அம்மணீ அம்மணீ [RENGA VENDAAM- 5 ]

அம்மணீ அம்மணீ  என்று வாசலில் குரல் -காலை 7.50 மணிக்கு . 

இங்கு அம்மண மணி என்று  யாரும் இல்லை என்று சற்று கடுப்புடன் ஆண்குரல் . 

இது ஒரு புறம் நடக்க,  இடுக்கு வழியே வெளியே ஓடிய சிறுவன் , வாங்க என்று சொல்லிவிட்டு வீட்டினுள் ஓடி "பாட்டி -ஜோசியர் வந்திருக்கார்" என்றான். குழம்பிக்கிடந்த பாட்டி இது என்ன துரத்தி துரத்தி நம்ம வீட்டுக்கு ஜோசியன், மாந்திரீகன் , மந்திரவாதி எல்லாம் காலை வேளையிலேயே படை எடுக்கிறார்கள் என்று தன்னையே நொந்துகொண்டு , வெளியே வர அங்கே பாகவதர் கிராப்புடன் நெற்றியில் விபூதி சந்தனம் குங்குமப்பொட்டுடன் சாட்சாத் ரெங்கராஜு [கிளி ஜோதிடர்].

அம்மணி வேறு யார்?

பலருக்கும் இவர் எப்படி இங்கே ? என்று மண்டையைக்குடைய வைத்த கோமதி என்ற திருமதி கோமதி வெங்கடாச்சாரி தான்.

ஐயோ , என்று  திருமதி கோமதி வெங்கடாச்சாரி க்கு -ரெங்கராஜூவுக்கு விரதம் முறிக்கும் அன்னமிடுவதாக ஒப்புக்கொண்ட பொறுப்பு மீண்டும் நினைவுக்கு வந்தது.. இப்பவே வந்துட்டீங்களே இன்னிக்கு ஸ்கூல் , ஆபீஸ் எல்லாம் லீவு அதுனால இனிமேல் தான் சமையல் ஆரம்பிக்கணும் என்று கையை பிசைந்தாள் . [உள்ளே இருந்து  மைதிலி , அம்மா சமையல் ஆரம்பிச்சாச்சு , 9.00 மணிக்கு எல்லாம் ரெடி ஆயிடும்  என்று தெரிவித்தாள் ]

இங்கே ரெங்கராஜு 'அம்மணி சாப்பிடவரவங்க  இப்பவே வா வருவாங்க , 9.30 மணி ஆவது ஆவும் , அதுவும் அய்யருங்க வெளி ஆளுங்களுக்கு  முதல் ல சாப்பாடு தரமாட்டாங்க . இதெல்லம் பகவதி  சொல்லி , டே காலத்திலேயே போய் எப்ப வந்தா அவங்களுக்கு வசதியா இருக்கும் னு கேட்டுக்க னு சொல்லியிருக்குது. அதுக்கு தான் தெரிஞ்சுக்க வந்தேன் .

அதற்குள் மைதிலி வெளியே வந்து நீங்க 9.30க்கு வந்தா சரியாயிருக்கும் என்றாள் . பளிச் என்று மஹாலக்ஷ்மி போல் இருந்த மைதிலி யை இப்போது தான் முதலில் பார்க்கிறார் ரெங்கராஜு.

ஜோதிடன் அல்லவா , உடனே புரிந்து கொண்டான் , சந்தானத்திற்கு பகவதி அருள் மைதிலி வழியாக வே சித்திக்கிறது என்று. மைதிலியை இன்னொரு பகவதியின் அமைப்பாகவே பார்த்தான் ரெங்கராஜு. மைதிலியை பார்த்ததும்  இயல்பான பழக்கமாக வேட்டியை முற்றாக கீழே தழையதழைய படரவிட்டு  , கை  கூப்பி வணங்கி , 'நல்லது தாயீ , உங்க மகனால உங்க எல்லாருக்கும் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு இன்னும் 5-7 வருசத்துக்குள்ள , குபேர லட்சுமி உங்களுக்கு செல்வத்தையும் பெருமையையும் வாரி வழங்கப்போகுது.

தாயீ ஒரு சின்ன விண்ணப்பம் , விரதம் விடறது வாழை இலைல தான் செய்யணும் .

 மைதிலி சிரித்துக்கொண்டே "தெரியும் இலை வாங்கி வெச்சிருக்கோம்.

தாயீ  ஒரு 4 மிளகு இலையில் வச்சுதான் , பகவதியை சாட்சி வெச்சு விரதம் விடணும் .

மைதிலி :சரி  அப்புறம் சூடம் , குங்குமம் ?

ரெங்கராஜு  -இல்ல தாயீ அதெல்லாம் வேணாம்.

[சக்கரைப்பொங்கல். அக்கார அடிசில், நெய் குங்குமப்பூ , குல்கந்து இதெல்லாம் வேண்டாமா மா சரியாய் கேட்டுக்கோ , சாப்பிடும் போது தயிர் , வெண்ணை அது இது னு பட்டியல் போடப்போறானுக . ஓசி ல கெடச்சா 4 ஜாங்கிரி திரட்டுப்பால் னு கிளம்பும் -என்று கொந்தளித்தான் ரெங்கசாமி.

[மைதிலி உக்கிரப்பார்வை பார்த்து சமயபுரம் மாரியம்மன் போல சுட்டெரித்தாள் ரெங்கசாமியை] 

அனைத்தையும் குறிப்பால் உணர்ந்த ரெங்கராஜு      [பகவதியின் பிரதி நிதி அல்லவா கிளி ஜோதிடன்] ரெங்கா வேண்டாம்  என்று உரத்த ஒலியில் சொன்னான்

[ரெங்கசாமி அதிர்ந்தான், மைதிலி -ஏதாவது இங்கிதம் இருக்கா என்பது போல் ரெங்கசாமியை முறைக்க, சந்தானம் மலங்க மலங்க விழித்துக்கொண்டு,  “கணக்கில் எவ்வளவு? இங்கிலீஷில் எவ்வளவு? என்று குதிக்கும் தந்தை இப்போது மாட்டிக்கொண்ட ஆடுபோல் விழிப்பதை வெகுவாக ரசித்தான்] .

சரி தாயீ நான் அப்புறமா வரேன் என்று கைகூப்பிக்கொண்டே நின்றான் ரெங்கராஜு    

வெளியில் வந்த மைதிலி நீங்க 9.30க்கு வரலாம் வாங்கோ என்றாள் .

அப்புறம் தம்பி இருப்பாருல்ல என்று சந்தானத்தைக்காட்டி கேட்டார் ரெங்கராஜு  

இருப்பான் இன்னிக்கு அவனுக்கு லீவு தான் என்றாள் மைதிலி. [This episode is RENGA VENDAAM-5]

தொடரும்

அன்பன் ராமன்

Saturday, April 19, 2025

AVOIDIMG MISTAKES-6

 AVOIDIMG MISTAKES-6

பிழை தவிர்த்தல் -6 

SUPERFICIAL and  SUPERFLUOUS

அன்பர்களே

மொழிகுறித்த விளக்கமாக-- "பிழை தவிர்த்தல்' பகுதியில் இயன்ற வரை தெளிவு ஏற்படுத்த முயன்று வருகிறோம். இதனால் எவருக்கேனும் பயன்பட்டதா, தெளிவு தோன்றியதா எனில் -இறைவனுக்கே வெளிச்சம்

எனக்கு பயன் பட்டது-- blog பதிவில் வாரம் ஒரு நாள் பகுதியை நிறைவு செய்ய எனக்கு உதவியது ; வேறு எவரும் கருத்து எதுவும் குறிப்பிடவோ பகிரவோ இல்லை , எனவே ஏதோ வேண்டா வெறுப்பாக திங்கள் கிழமை பதிவு அரங்கேறி வருவதை உணர முடிகிறது

ஒருவேளை பிறந்த அகத்து பெருமையை உடன்பிறந்தவனிடம் பேசுவது அல்லது ஆங்கில சாட்டுவாக்கியம் "CARRYING  COAL TO  NEWCASTLE " போல இந்தப்பகுதி இருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

தொடங்கியதை அரைகுறையாக விட்டு விட எண்ணவில்லை எனவே இன்நும் சில பகுதிகள் கடந்தபின்,  இப்பகுதி தொடர வாய்ப்பில்லை. 

சரி, சென்ற பகுதியின் இறுதியில் SUPERFICIAL மற்றும் SUPERFLUOUS    என்ற இரு சொற்களை பார்த்தோம்.  இவை இரண்டும் நன்கு தெரிந்த சொற்கள் எனினும் பலரும் SUPERFLUOUS  SUPERFICIAL  தரும் பொருளையே உணர்த்த பயன் படுத்துகின்றனர்

SUPERFICIAL என்பது மேற்பரப்பில் என பொருள் தரும் SUPERFLUOUS என்பதோ அளவிற்கு அதிகமாக அல்லது தேவைக்கு மேல் என உணர்த்துவது

The  damage is superficial and to attend to it , more than two men is superfluous 

[காரில் மேற்புற சிதைவை  பழுது நீக்க 2 பேர் போதும் 4, 5 பேர் என்பது [அளவிற்கு  அதிகம் ] superfluous [ உச்சரிப்பு superfloo ] . இவ்வாறு நுண் வேற்றுமைகளை  புரிந்து கொள்ளாமல் சொற்களை எடுத்தாளுதல் பெரும்  குழப்பத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தும்.

இவ்விடத்தில் நாம் உணர வேண்டிய அடிப்படை  மாறுபாடு

இந்தியமொழிகளில் சொற்களை 'எழுத்து கூட்டி படித்தோ/எழுதியோ' உணர்வதோ /உணர்த்துவதோ இயலும். ஆனால் ஆங்கில /ஐரோப்பிய மொழிகளில் எழுத்துவரிசைக்கும் உச்சரிப்பிற்கும் தொடர்பே இல்லாத அமைப்புகளைக்காணலாம் பின் வரும் சொற்களை சரியாக உச்சரிக்கிறோமா என்று பாருங்கள்.

RENDEZVOUS, RAPPROCHMENT, ENVELOPE, ENMASSE, GRAND PRIX, JEWEL TORTOISE, RESTAURANT

RENDEZVOUS, ரெண்டஸ்வஸ்  என்பது தவறு   ரெண்டெவூ  என்பதே சரி 

RAPPROCHMENT   ராப்ரோச்மெண்ட் என்பது தவறு    ராப்ரோச்மா      என்பதே சரி 

ENVELOPE, ENMASSE, EN CLAVE

இவை பிரெஞ்சு மொழியில் இருந்து ஏற்கப்பட்டு ஆங்கில மொழியில் புழங்குபவை இவை முறையாக ஆன் வேலோப்[ENVELOPE] [கவர் /உரை ] , ஆன் மாஸ் [ENMASSE, ஒட்டுமொத்தமாக ]  EN CLAVE ஆன்க்ளெவ் [ பல பகுதிகள் கொண்ட கட்டுமானம் ]

இதே போல்

GRAND  PRIX =  நெடும் பந்தயம்    [கிராண்ட் ப்ரி என்பதே ரி  ],  TORTOISE [ஆமை] டார்டிஸ் என்பதே சரி டார்ட்டாய்ஸ் தவறு.

RESTAURANT  உணவகம் =    முறையாக ரெஸ்ட் ராண்ட்  [ரெஸ்டாரண்ட் என்பது தவறு]  

JEWEL = நகை [ஜ்வல்  என்பதும்  ஜுவல் என்பதும் ஏற்கப்பட்ட உச்சரிப்புகள்]

JEWELLERY = ஜ்வல்ரி/ ஜுவல்ரி என்பதே ரி

 [ ஜ்வல்ரி/ ஜுவல்ரிஎன்பது தவறு]  

 எனவே ஐரோப்பிய மொழி அமைப்பில்  சொல்லின் ஒலிவடிவம் , எழுத்து அடிப்படையில் அல்ல, ஏன் எனில்  சில எழுத்துகள் அமைதி வடிவம் கொண்டவை [சைலண்ட் லெட்டர்ஸ் எனப்படுபவை.]   island ஐலண்ட் [ ஐஸ் லாண்ட் அல்ல] அது Ice land என எழுதப்படுவது.

இவை குறித்த  நகைச்சுவை துணுக்கு மிகப்பிரபலம் அந்நாளில் .

விமானப்பயணத்தில் கீழே தெரிந்த கட்டிடங்களை ப்பார்த்த ஒருவன் ஐயா ஐயா BOMBAY என்று குதூகலிக்க , வேறொரு பயணி [கத்தாதே என்று ] BE  SILENT  என்று சொல்ல முன்னவன் ஆம்பே [OMBAY OMBAY ]என்று அலற, கத்தாதே என்று சொன்னவர "I  SAID -- BE  SILENT " என மீண்டும் சொல்ல , இப்போது முன்னவன் ஆமே ஆமே [OMAY ,OMAY ] என்று "B " ஒலி யை தவிர்த்து மீண்டும் கூவினான் என நகைச்சுவையாக குறிப்பிடுவர்

அவ்வளவு ஏன்?  அமெரிக்கர்கள் கூடஆங்கிலத்தில்  'ghoti ' என எழுதிவிட்டு  "fish "என்று படிக்கலாம் என்று கிண்டல் செய்வதுண்டு

தொடரும்

அன்பன் ராமன்

Garcinia mangostana

  Garcinia mangostana [Mangostan fruit] Purple mangusteen  Like Avocado, Mangostan too enjoys patronage by consumers across India. The fr...