Wednesday, December 21, 2022

LASER IN SRIRANGAM -3

 

LASER IN SRIRANGAM -3

ஸ்ரீரங்கத்தில் லேசர் -3

அம்புஜம் பிலு பிலு என்று பாய்ந்து குதற த்தயாரானாள் . கழுகு என்ன லேசு பட்டவனா ? இரவு 9.40 சீரியல் போல யுத்தம் தொடங்கியது;

அம்புஜம் : "அர்த்த ராத்திரில யாருக்கு மஞ்சநீர்  ஆரத்தி எடுக்கணும் சுமங்கலிய "பிடிச்சுட்டா போச்சு " னு ஒரே டயலாக் தூள் பறக்கறது? வயசு என்ன ஆறதுனு ஸ்வாமிக்கு ஞாபகம்  இருக்கா.? இந்த செல் போன் னு ஒரு சனிய எவன் கண்டுபிடுச்சானோ பகல் இல்ல இருட்டு இல்ல அனவரதமும் அதைக்காதுல ஒட்டிண்டு வாயெல்லாம் பல்லாக பல்லவ ராஜாவா னு ஒரே இளிப்பு"    அதிருக்கட்டும் போன் யாரு ? என்றாள்

கழுகு : "பொலம்பியாச்ச்சா " -என்ன எதுன்னு தெரியாமயே பெரிய C B I அதிகாரி மாதிரி எப்பப்பாரு நோட்டம் பாத்துண்டு இருக்கியே -ஒனக்கு தான் பகல் இல்ல இருட்டு இல்ல அனவரதமும் எதையாவது ஒட்டு கேட்டுட்டு DATE OF BIRTH என்ன அது இது னு தாண்டவம் ஆட றி யே ராத்திரி  10 மணிக்கு -ஏதோ dance class சேந்தவ மாதிரி?"

கழுகு தொடர்ந்தான்

ஆமாம், காலம்பற வேதாந்தம் போன் பண்ணிணாமே நீ ஏன் சொல்லவே இல்ல ? ஒனக்கு ஒட்டு கேக்கவே  டயம் சரியா இருக்கு , நீ எப்படி போன் வந்ததுன்னு சொல்லுவ ? என்று இருந்த இடத்தில் இருந்தே அம்புஜத்தின் வாயை அடைத்தான் இப்போது  அம்புஜம் கப்சிப் .

கழுகு தொடர்ந்தான் : வேதாந்தம்  தன் பிள்ளைக்கு இந்த ஊரில பூணல் போடணுமாம் , இடம், மேளம், வைதீகம் சாப்பாடு எல்லாம் நல்ல தரமா ஏற்பாடு பண்ணித்தா னு போன் பண்ணினான். அதோட அந்த வித்யாவு க்கு 9 கஜம் புடவைல வடகலை  மடிசார்  உடுத்தி விடணுமாம் அதுக்கு தான் மாமி யாரவது help பண்ணுவாளா னு கேக்கறான். நான் சொன்னேன் கல்யாண வீட்டுல ஹெல்ப் மாமிகள் அநேகமா அமங்கலிகள் தான் வாரா அதுனால சுமங்கலியா பிடிச்சா போச்சு னு தைரியம் சொன்னேன் . உடனே C B I அதிகாரி மாதிரி மோப்பம் பிடிச்சுட்டா மாதிரி சலங்கை ஒலி கமலஹாசன் மாதிரி தை தை  னு குதிக்கறயே , ஒனக்கு DATE OF BIRTH ஞாபகம்  இருக்கா னு நான் கேக்க மாட்டேன். அது தான் ராமசாமி  க்கும் அம்புஜ த்துக்கும் வித்யாசம் என்று இடது கை  கட்டை விரலை நெட்டுக்குத்தாக வைத்துக்கொண்டு தெற்கு வடக்காக அசைத்தான் .

அம்புஜம் இப்போது உண்மையிலேயே வருத்தப்பட்டாள் - நான்பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டேன் பெண் புத்தி பின் புத்தி என்று நன்னா புரியறது என்று தழு தழுத்தாள் .

இந்தராமசாமி --அதான் ஒன்  வீட்டுக்காரன் ஊருல இருக்கற எல்லா  லேடீஸ் தகவலும் தெரிஞ்சுப்பானே ஒழிய பல்லை இளிச்சுண்டு யார் பின்னாலயும் போக மாட்டேன் - ஹலோ CBI OFFICER நன்னா தெரிஞ்சுக்கோங்கோ என்று அம்புஜத்தை கிண்டல் செய்தான் . அம்புஜம் சிரிப்பும் அழுகையும் கலந்து சிவந்த முகத்தில் குண்டு பல்பு வெளிச்சத்தில் லக்ஷ்மிகரமாக காட்சி அளித்தாள்.

காலை மணி 6.50       கே கு வீட்டில் கழுகு பிரசன்னம்.

கேகு : அண்ணா வாங்கோ , ஏய் வேதவல்லி அண்ணாக்கு காபி கொண்டுவா என்றான் .

கழுகு : வேண்டாம் என்றான் . கே கு விடுவதாக இல்லை , புதுப்பொடி ண்ணா ஒரு கப் சாப்புடுங்கோ என்றான்.

கழுகு நேத்தி முகூர்த்த வீட்டிலேந்து பொடிய கெளப்பிண்டு வந்துட்டியாக்கும்.?

ஐயோ அண்ணா அப்பிடியெல்லாம் செஞ்சா பேர் கெட்டுப்போய்டும்  ;

கழுகு : வெளில தெரிஞ்சா தானே , நீங்கல்லாம் சமயம்பாத்து திருடுவீங்கன்னு தெரியும் டா

கேகு : பணம் சரியா குதிரல்லன்னா இப்பிடித்தான் பண்ணியாகணும் ;ஆனா உங்க விஷயத்துல சரியா நடந்துப்போம் சந்தேகமே வேணாம்"

கழுகு : இத பார் சுப்பைய்யா, தவசி, பாண்டினு பரிமாற கூட்டிண்டு வந்தே நீ இந்த வேலையை மொத்தமா மறந்துடணு ம்    இந்த ஏரியாவிலேயே நடமாட முடியாது. அப்புறம் குவாலிட்டி எந்த குறையும் இல்லாம எல்லாம் ஒழுங்கா இருக்கணும்.. எந்த மண்டபம் டா நன்னாருக்கு , நல்ல கௌரவப்பட்ட பார்ட்டி, அதுக்கு தகுந்தாப்பல சொல்லு.

அண்ணா,  வீயார் மண்டபம் சூப்பர் -12 AC ROOM இருக்கு, STEAM குக்கிங் புத்தம் புது இடம் , நம்ப ரெங்கய்ங்கார் /சுந்தரம்மையரும்   பார்ட்னர் , நான் பேசி முடிச்சு தரேன். இப்ப ஒரு பூச்சூட்டல் [சீமந்தம்] போயிட்டு சாயங்காலம் வரேன் , நேர கூட்டுண்டுபோறேன் ஒரு 1000 Rs /- அட்வான்ஸ் பண்ணிட்டா ஆச்சுண்ணா ; கவலையே வேண்டாம் நான் நீங்க கேக்கற மாதிரி செஞ்சு தரேன் போறுமா? மாமியை ரொம்ப விஜாரிச்சேனு சொல்லுங்கோ பாத்து நாளாச்சு . நமஸ்காரம் என்று விடை பெற்றனர்.

தொடரும்                    அன்பன்  ராமன்

1 comment:

  1. ஓஹோ கல்யாண ஆத்தில திருடின காப்பிப் பொடியா?
    சிக்கரி கூடத்தான் இருந்தாலும் காப்பி பேஷ் பேஷ்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...