RENGAA RENGAA/ THRIVENI CONFLUENCE
ரெங்கா
ரெங்கா / திரிவேணி சங்கமம்
இது
என்னடா புது விவகாரம் என்கிறீர்களா
. ஆமாம் இப்போது நட்பு வட்டம்
விரிவடைகிறது. பாருங்கள் வேடிக்கையை.
டேய்
சாயங்காலம் வீட்டுக்கு வரியா என்று ரா
சா, க ரெ வை கேட்டார்.
சார் சண்டே வரேன்
சார் , சாயங்காலம் கோயில்ல அர்ச்சனை பண்ணணும்
, ரிசல்ட் வந்ததும் பெருமாளை மறக்கக்கூடாதே சார் என்றான் க
ரெ . சரி சண்டே சீக்கிரமே
வா என்றார் ரா சா
. அப்புறம் அந்தஅடைய வளஞ்சான் மேலதிகாரி
யை பார்த்து ரிஸல்ட்டை
சொல்லி சேவிச்சுட்டு வா என்றார் ரா
. சா . ஆமாம் சார் முதல்ல
அவரைப்பார்த்துட்டு தான் கோயிலுக்கு போகணும்
அதுனால தான் சன்டே சொன்னேன்
கோவிச்சுக்காதீங்கோ என்றான்.
ஒன்ன
கோவிச்சுக்கமுடியுமோ நீ பரீட்சை பாஸ்
பண்ணி direct recruitment, நான்
மாமா மாமான்னு வேதாந்தம் பெரியாப்பாவை தொங்கி வேலைல சேர்ந்தவன்
[வேதாந்தம் எனக்கு ரயில்வே வேலை
வாங்கித்தந்தவனை தூக்குல போடணும்கறான் ] நான்
போய் ஒன்ன கோவிச்சுக்க
முடியுமோ. . ஒன்ன ஏதாவது
சொன்னா ஏன் கொழந்தைய படுத்தரேள்
னு அம்புஜமே சண்டைக்கு வருவா -அதுனால ஓரமா
திண்ணையில ஒக்கார வேண்டியதுதான்
என்றார் ராமசாமி. சார் சார் அப்படியெல்லாம்
சொல்லாதீங்கோ என்று கை கூப்பினான்
கஸ்தூரி ரெங்கன்.
மாலை
வீடு திரும்பிய மாடசாமி , அக்கா அன்னக்கி ஒரு
பையன ட்ரெய்ன்ல மெட்றாஸுக்கு கூட்டிட்டு போய் வந்தேன் ல
அந்தப்பையன் சூப்பரா பாஸ் பண்ணிருக்கான்
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு
அக்கா என்றார் மாடசாமி. அவன்
யாருப்பா என்றாள் அக்கா . அவன்
நம்ப ராமசாமிக்கு வேண்டியவன் அதுனாலதான் கூட்டிட்டு போறயா னு ராமசாமியே
கேட்டான் , சரினு கூட்டிட்டுப்போய் முடிஞ்ச
வரைக்கும் உதவி செஞ்சேன் , பையன்
நம்ப முயற்சிக்கு பெருமை செஞ்சுட்டான் அக்கா
என்று மகிழ்ந்தார் மாடசாமி .
அம்மா
உங்களுக்கு ராமசாமியை தெரியுமா என்றாள் கௌரி கல்யாணி.
இவங்க எல்லாம் ஸ்கூல்ல ஒண்ணா
படிச்சாங்க பயங்கர வாலுப்பசங்க , இவனுங்கள்
ட்ட வாயைக்குடுத்தா சட்டை , வேட்டி எல்லாத்தையும்
கிழிச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வெச்சுருவானுங்க . அதுலயும்
அந்த ராமசாமி பயங்கர எத்தன்
, எவனையும் மடக்கிடுவான் ஆனா நல்லா ஹெல்ப்
பண்ணுவான் .
உனக்கு
இவ்வளவு நடந்ததுன்னா அதுக்கு மூல காரணம்
அந்த ராமசாமி தான் . ஒங்க
மாமன் இதெல்லாம் சொல்லலியா . எப்பிடி சொல்வான் அவனுங்க
ஒருத்தனுக்கு ஒருத்தன் உதவி செஞ்சுக்குவானுங்க அதெல்லாம்
இந்த தலைமுறையி ல கற்பனை கூட
செய்யமுடியாது . இல்லம்மா எல்லாருமே ராமசாமி சாரை பெருமையா
சொல்றாங்க அவரைப்பார்க்கணும் அன்னக்கி அந்த சாரதா மேடம்
உங்க மாமாக்கு guide நிச்சயம்
ராமசாமி சார் தான் னு
அடிச்சு சொல்றாங்க . அவரை பார்க்கணும் மாமா
கூட்டிட்டுப்போறீங்களா , ஒண்ணுமே தெரியாம டிகிரி
முடிச்சு என்ன பலன் கூட்டிட்டுப்போங்க
மாமா அவரைப்பார்க்கணும் என்றாள் கௌரி.
. சரி போலாம் சண்டே போனா
free யா
இருக்கும் என்று சொல்லி மனதுக்குள்
சிரித்தார் மாடசாமி [ ராமசாமி பொண்ணுங்கள தேடிப்போவான்
னு சொல்லுவோம் இப்ப என்னடான் னா
பொண்ணுங்க ராமசாமியை பார்க்கணும் னு தேட ஆரம்பிக்குதுங்க
கலிகாலம் ஊம் என்றார் மனதிற்குள்
].
சண்டே
வருவதாக மாடசாமி ராமசாமியிடம் பேசி
இருந்தார் . க ரெ ஏற்கனவே
வருவதாக சொல்லி இருந்தன். ஏய்
இன்னிக்கு பிரண்ட்ஸ் வருவா என்ன
சாப்பாடு என்று ராமசாமி கேட்க
,
க
. ரெங்கன் பாஸ் பண்ணினா அக்கார
அடிசல் நெய்வேத்தியம் பண்ணி டறேன்னு வேண்டிண்டேன்
-அவன் பாஸ் . SO , கதம்ப சாதம், அ
அடிசல் , வத்தல் மற்றும் தத்யோ
அன்னம் + half a dozen ஊறுகாய்ஸ்
to choose from அண்ட் யு
ஹவ் எனிதிங் டு say
என்று வம்பிழுத்தாள் . Nothing போறும்
உன் அலட்டல் என்றார் ராமசாமி
. you have no sense of humour
என்று ஒரு பார்வை பார்த்தாள்
. ராமசாமிக்கு சிரிப்பும் கோபமும் ஏக காலத்தில்
தோன்றியது.. அப்போது ஒரு போன்
சுபத்ரா விடம் இருந்து . சார்
இன்னிக்கு உங்கள வந்து பாக்கறேன்
சார் நன் எங்கேயுமே போகாம
ஒரே போர் சார், உங்க
வீட்டுல சாப்பிட வரவா என்றாள்
சுபத்திரா. தாராளமா வா என்று
சொல்லிவிட்டு வீட்டிற்குள் திரும்பி - ஏய்
ஒன் more guest -சுபத்ரா என்றார்
ரா சா . OK -Fine என்றாள்
அம்புஜம்
சண்டே
காலை 8 மணிக்கு கஸ்தூரிரெங்கன் ஆஜர்
மாமியை [அம்புஜம்] சேவித்தான் நன்னா இருடா கொழந்தே
என்றாள் . ராமசாமி கொழந்தே என்று
அழகு காட்டி சிரித்தார். 9 மணிக்கு
மாடசாமி மருமாள் கௌரி கல்யாணி
உடன் வந்து ஒரு பை நிறைய
பழங்களுடன் நுழைந்தார் . மேடத்தை கும்புட்டுக்க என்றார்
மாடசாமி , மாமி எனக்கு நல்வாழ்த்து
சொல்லுங்க என்று பழங்களை அம்புஜத்திடம்
தந்தாள் . ஆசீர்வாதம் பண் ரேன் ஆனா
மாமின்னு சொல்லாத மேடம் னு
சொல்லு போறும் என்றாள் . ராமசாமி
வாயை மூடிக்கொண்டு குக்குக்குகுக்குக் என்று சிரித்தார். [குருவாயூரில் லேசர்
வித்யா
இதே
போல்
கிட்டத்தட்ட
வாங்கிக்கட்டிக்கொண்டது
நினைவிற்கு
வருகிறதா?
]
கௌரி
அவர்கள் முறைப்படி ஒரு முறை நமஸ்கரித்தாள்
. நன்னா இருடிம்மா நன்னா படிச்சு பெரிய
உத்யோகத்துக்குப்போய் நல்ல இடத்துல கல்யாணம்
பண்ணிண்டு சௌக்கியமா இருடிம்மா என்றாள் . முதல்ல படிப்பு நல்லா
வரட்டும்னு சொல்லுங்க மேடம் என்றாள் . முதல்
வார்த்தையே அதான் சொன்னேன் என்றாள்
அம்புஜம். வாசலில் ஸ்கூட்டர் சப்தம்
கௌரி எட்டிப்பார்த்து ஒரு அம்மா வராங்க
என்றாள் . ராமசாமி அம்மா வா அவங்க
உங்க HOD சுபத்ரா மேடம் என்றார்.
மாடசாமி சற்று அதிர்ந்தார்.. சுபத்ரா
வந்ததும் மாடசாமி கை கூப்பி வணக்கம் தெரிவித்து
இவங்க தான் யூனிவர்சிட்டி ப்ரொபசர்
என்று கௌரிக்கு அறிமுகம் செய்தார். கௌரி வணக்கம் சொல்லி
நமஸ்கரித்தாள். ஓ நீ தானா
என்று கை
குலுக்கினாள் சுபத்ரா.. நல்ல இருக்கீங்களா சார்
என்று மாடசாமியை சுபத்திரா கேட்டாள் . இருக்கேன் மேடம் என்றார் மா
சா . சும்மா பிரீ யா
பேசுங்க சார் பிரண்ட்ஸ் னா
ஜாலியா அரட்டை அடிக்கணும்னு
பேச்சை துவக்கினாள் . நம்ப ராமசாமி சாரைப்பாருங்க
தூள் கிளம்புவார் அது தான் சார்
நல்ல friendship என்றாள் சுபத்ரா
இவன்
என் க்ளாஸ்மேட் பழகிட்டா பொளந்து கட்டுவான் அது
வரைக்கும் அவன் மீசைக்கு சம்பந்தமே
இல்லாம நடந்துப்பான் என்றார் ராமசாமி. உள்ளே
வரலாமா என்று கிச்சன் உள்ளே
சுபி எட்டிப்பார்க்க NO ENTRY
FOR NOW என்றாள் அம்புஜம்
, மேடம் இப்பதான் லண்டன் லிருந்து வந்திருக்காங்க
என்று ரா சா கிண்டல்
அடிக்க அம்புஜம் விழியை உருட்டினாள் .
இப்படி
கலையின் அம்சமாக சுபி , சமையல்
கலையின் தலைவியாக அம்புஜம் மற்றும் கலை பயிலும்
இளம் பெண்ணாக கௌரி என
மூன்று வேணிகள் ஓரிடத்தில் சங்கமிக்க நடுக்கூடத்தில்
திரிவேணி சங்கமம் நிகழ்ந்து ரம்மியமாக
இருந்தது சிறிது
நேரத்தில் கம கம சாப்பாடு
தயார். கூடத்தில் 5 வாழை இலைகளை வரிசையாக
இட்டான் க. ரெ . கீழ
உட்காரலாம் இல்லையா என்றார் ராமசாமி.
ஓ என்றனர் கோரஸாக
. மேடமும் உக்கரலாமே என்றார் மாடசாமி . அதை
இங்கிலீஷிலே சொன்னா தான் உக்காருவாங்க
என்று ராமசாமி கிண்டல் செய்தார்.
6 வது இலையை கஸ்தூரி ரெங்கன்
கொண்டு வந்தான். தம்பி வட்டமா இலைகளை
போடுங்க என்றார் மா சா
. 3 லேடீஸ் ஒரு
பாதி ல உக்கரட்டும் நம்ப
ஆப்போசிட் சைடுல உக்காந்துக்கிட்டா
ஈஸி யா
எடுத்துப்போட்டுக்கிட்டு சாப்பிடலாம் என்றதும் அவ்வாறே செய்தனர். அம்புஜத்தின்
கை வண்ணத்தில் ஐட்டங்கள் கன ஜோர் . நண்பர்கள்
ரசித்து உண்டனர். அக்காரஅடிசல் எப்படி செய்வது என்று
சுபி யும் கௌரியும் அம்புஜத்திடம்
கேட்டுக்கொண்டனர்.
ராமசாமிக்கு
வாய்
மேடத்துக்கு திறமையான கை நல்ல காம்பினேஷன் என்றார்
மாடசாமி . மாலை 4 மணி வரை
அரட்டை அடித்து 4.30க்கு சூப்பர் காப்பி
அருந்தி விடை பெற்றனர். அட்மிஷன்லாம்
முடிஞ்சதும் எல்லாரும் எங்கவீட்டுக்கு வாங்க என்று சுபத்திரா
அழைப்பு விடுத்தாள் . ஒரு ஞாயிறு இனிதே
கழிந்தது
அன்பன்
ராமன்