Monday, March 13, 2023

THE NIGHT'S VOICE

 THE NIGHT'S VOICE

இரவின் ஒலி

இரவில் என்ன ஒலி என்றெண்ணுவோர் நான் சொல்வதை கவனமாகப்பாருங்கள். ஆம் மாலை 7.30 மணிக்குப்பிறகு முற்றிலும் மாறுபட்ட பொலிவை தமிழக ஊர்களும் சிற்றூர்களும் அன்றாடம் பெறுவதை அறியாமல் இருந்தால் நாம் தான் மாங்கா மடையர்கள். இந்தப்பொலிவிற்கு காரணம், தவறாமல் நடை பெறும் உணவு / சிற்றுண்டி மற்றும் பான  வகைகள், விதவிதமான பொரித்த தானிய வகைகள், பனங்கிழங்கு குச்சிக்கிழங்கு, பருத்திப்பால் மற்றும் பல்வேறு வகையான அசைவ உணவுத்தயாரிப்புகள், பளிச்சிடும் விளக்கொளி மற்றும் நாசியை உரசும் வினோத வகை வாசனைகள், கார நெடி மற்றும் அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கும் உள்ளூர் நாய் இனங்கள், 

ஏக காலத்தில் கரங்களை நீட்டி அதிகாரப்பிச்சை கோரும் காக்கிச்சட்டைகள் மற்றும் கூச்சமே இல்லாமல் அனைத்து உணவு வகைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ளும் இரு கால் ஜீவன்கள் என அனைத்தும் அரங்கேறுவதே இரவின் ஒலி எனில் மிகை அன்று.. ஓசி உணவு எப்படி இருந்தாலும் ஆறி  இருந்தாலும் வாங்கிச்செல்லும் வினோத ஜீவன்கள் . கூழைக்கும்பிடு போட்டு தரங்கெட்ட உணவை தாராள மாக வழங்கும் வியாபாரிகள் வேறு எவ்வாறு ஜீவிப்பார்கள்?

பிதுங்கித்தொங்கும் தொப்பையை நிறைத்துக்கொண்டு இன்னும் 2 வடை கொடு என்று அதிகார தொனியில் சில காக்கி கள் கேட்பதைப்பார்த்தல் நிச்சயம் கோபம் தான் வரும் 

ஈசியாக ஓசியில் கிடைப்பது எப்படி  இருந்தால் என்ன என்பவர்களை கையாள்வது எளிதன்று.

டேய் இன்ஸ்பெட்டருக்கு குட்றா என்று மிரட்டி வாங்கிச்செல்வது சாதாரண நிகழ்வு . இவ்வாறு நவகிரஹங்களில் பெரிதும் அஞ்சப்படும் ஆட்கள் அநேகமாக 7.45 க்குப்பின் போய் விடுவார்கள் ; அதாவது இன்ஸ்பெட்டர் கிளம்பி விட்டார் என்பது கள யதார்த்தம்.மாலை இருள் கவிழும் முன் இந்த இரண்டு கால் ஜீவன்கள் மார்க்கெட்டில் காய் விற்போரிடம் அடாவடியாக பறித்துக்கொண்டு செல்வது தின அனுஷ்டானம் . இந்த வகை அதிகாரங்கள் அகன்ற பின் தான் சூடாக கடலை பட்டாணி வறுத்து விற்பவர்கள் மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியை நிறுத்துவார்கள். அது வரை டிங் டிங் டிங் என்று மணி அடித்துக்கொண்டு குடியிருப்புப்பகுதிகளில் விற்பதில் விற்பன்னர்கள்..  இவர்கள் மட்டுமே எண்ணையில் எரியும் திரி விளக்கை பயன் படுத்துவர் ; அது ஒருவகை nativity யை பறை சாற்றுகிறதோ என்னவோ.

நாம் கருத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், பெரும்பாலும் சுற்றுலா வருபவர்கள் இறை தரிசனம் மற்றும் புராதன கோயில் கலைகளை ரசிப்பதற்கே வருபவர்கள். அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தோர் அல்ல. எனினும் சுற்றுலா அவர்கள் வாழ்வில் ஓர் அங்கம். குறைந்த பொருட்செலவில் சுவையான உணவு கிடைக்குமா என்று தேடி அலைந்து பசியாறுபவர்கள். ஆனால் கொடுக்கும் பொருளுக்கு யார் நியாயம் செயகின்றனர் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள்.. பிளாட்பாரத்தை ஒட்டி அமைந்த நிழல் கூரைகளில் ரம்மியமான உணவு எது என்பதை நன்கு உணர்ந்தவர்கள்

யூ ட்யூப் போன்ற ஊடகங்களில் அவர்கள் தமிழ்நாட்டின் எளிய சுவை மிக்க தயாரிப்புகளை பெரிதும் சிலாகித்து எழுதுவதை பார்த்த பின்னரே சில இடங்கள் குறித்து நாமே தெளிவு கொள்கிறோம். இவ்வகை வியாபார தளங்களில் பரஸ்பரம் எதிராளியின் மொழியில் பேசி தத்தம் தேவைகளை ஈடேற்றிக்கொள்ளுவது , மொழி கடந்த வயிற்றுப்பாடு என்பதே கள யதார்த்தம்.

சமைப்பது , பரிமாறு வது, மற்றும் வசூல் மூன்றும் 1 அல்லது இருவரே சிறப்பாக செய்வதைக்காணலாம் . திடீரென்று பைந்தீஸ் என்று  கேட்டு வசூலிப்பான் . வந்தவனோ அபி தோ இட்லி  என்று சொல்லிக்கொண்டே ரண்டு இட்லி தாங்கோ என இருவிரல்களை [ ஆள்காட்டி/ நடு விரல்களை ] விரைவாக அசைத்து க்கொண்டே தோசா ஹை ? என்பான். நம்மவன் ஹாங் ஜீ பைட்டியே என்று பழைய பிளாஸ்டிக் ச்சேர் ஒன்றை ஒதுக்கி தந்து,   மா  --ஜீ ஆப் இதர்  பைட்டியே என்று ஒரு பெண்மணியை விருந்தினராக மரியாதை செலுத்தி மள என்று 5 இட்டிலிகளை வழங்கி விருந்தோம்புவான் .

இரவு ஒலியில் இவை அன்றாடம் நிகழ்வதைக்காணலாம். U  P  மனிதனை பெங்கால் ஹை என்பான் நம்மமூர் வீராசாமி நை நை உத்தர்  பிரதேஸ்   என்பான் முண்டாசு . புரியாவிட்டாலும் அச்சா என்பான் வீராசாமி . இவ்வாறாக இரு பிரிவினர் வெறுப்பின்றி இயங்குமிடங்கள் இரவு உணவுக்கூடங்களே. அவற்றை புறந்தள்ளாதீ ர்கள் , அவற்றை கவனித்து ப்பாருங்கள் மனித இயக்கம் எவ்வளவு நளினமானது என்பது புலப்படும்

நன்றி   அன்பன்  ராமன்

1 comment:

  1. மதுரையில் காலேஜ் ஹவுஸ் ஹோட்டல் அருகிலுள்ள சந்துகளில்
    மிளகாய்பொடி தூவி மீன்களை பொரிக்கும்போது அங்கே செல்லும் மக்களின் கண்கள் எரிப்பதும் இரவில் ஓசைப்படாமல் நடக்கும் காரியம்தான்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

ANGER AND EGO -9

    ANGER AND EGO -9 கொந்தளிப்பும் அகம்பாவமும்-9 கோபத்தின் விளைவாக கொந்தளிப்பும், பிறரை குறைத்து மதிப்பிடுவதால் தோன்றும் [ஈகோ] அகம்பாவம...